விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அருண் இடம் சீதா தன் அக்காவுக்காக பண உதவி கேட்டார். அருணுமே மறுப்பு தெரிவிக்காமல் உதவி செய்ய ஒத்துக் கொண்டார். இன்னொரு பக்கம் வீட்டில் முத்து குடித்திருந்ததால் மீனா கோபப்பட்டு பேசாமல் இருந்தார். ரவி, முத்துவிற்கு அட்வைஸ் செய்தார். இருந்துமே முத்து கேட்டுக் கொள்ளவில்லை. பின் மீனா, சீதாவை பார்க்க கிளம்பி வந்தார். அப்போது சீதா, பணம் ரெடி பண்ண விஷயத்தை சொல்லி தன்னிடம் இருக்கும் பணத்தை கொடுத்து விட்டார். இதனால் மீனா ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். இன்னொரு பக்கம் ஹோட்டலில் சுருதி வேலை செய்து கொண்டிருந்தார். அங்கு வந்த ரெண்டு நபர்கள் ரொம்ப மோசமாக ஸ்ருதியிடம் பேசி இருந்தார்கள்.

இதனால் கோபப்பட்ட ஸ்ருதி அவர்கள் சாப்பிடும் சாப்பாட்டில் மிளகாய் பொடியை போட்டுக் கொடுத்து விட்டார். அவர்கள் சாப்பிட்ட உடன் ஹோட்டலையும் சுருதியையும் திட்டிக் கொண்டிருந்தார்கள். அப்போது வந்த நீத்து, ரவி இருவருமே என்ன நடந்தது? என்று விசாரிக்காமல் சுருதியை தான் திட்டி இருந்தார்கள். இதனால் சுருதிக்கு பயங்கர கோபம் வந்தது . இன்னொரு பக்கம் வீட்டில் மனோஜ் உடல்நிலை முடியாமல் அவஸ்தைப் பெற்றுக் கொண்டிருந்தார். இதை அறிந்த ரோகினி அவருக்கு மாத்திரை கொடுத்து உதவி செய்தார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் ரோகினி ரொம்ப எமோஷனலாக மனோஜிடம் பேசி இருந்தார். இருந்தாலுமே, மனோஜ் தன் அம்மா மீது இருந்த பயத்தில் ரோகினி இடம் சரியாக பேசவே இல்லை. இன்னொரு பக்கம் மீனா, முத்து வரவில்லை என்று வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அப்போது அண்ணாமலை, முத்துவிற்கு ஃபோன் செய்து பேசு என்று அறிவுரை செய்தார். முத்து சவாரிக்கு போவதால் வர முடியாது என்று சொல்லிவிட்டார். இன்னொரு பக்கம் சுருதி ரெஸ்டாரண்டில் நடந்ததை நினைத்து ரவியிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.

நேற்று எபிசோட்:
அப்போது போன் செய்த நீத்து, நான் அங்கு ஓனராக நடந்து விட்டேன். நீங்கள் செய்ததில் எந்த தவறும் இல்லை என்று மன்னிப்பு கேட்டார். இதை கேட்டவுடன் ரவிக்கு எதுவும் பேச முடியவில்லை. பின் சுருதி, ரவி இடையே இருந்த சண்டையும் நார்மல் ஆகிவிட்டது. மறுநாள் காலையில் ரோகினி, மனோஜ்காக கஞ்சி செய்து கொண்டிருந்தார். அதை பார்த்து விஜயா, எதற்கு என்று கேட்க, மனோஜ்க்கு உடம்பு சரியில்லை என்று சொன்னார். பின் மனோஜை பார்த்து விஜயா பேசி இருந்தார். அப்போது மனோஜ், ரோகினி இடம் பேசாததால் தான் எனக்கு காய்ச்சல் வந்திருக்குமோ? என்று சொன்னார். உடனே கோபப்பட்ட விஜயா, மனோஜை திட்டி இருந்தார். இதையெல்லாம் கேட்டு ரோகிணி வருத்தப்பட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தனக்கு அடிப்பட்டதை பற்றி மீனா வீட்டில் உள்ள எல்லோரிடமும் சொல்கிறார். ஆனால், விஜயா கிண்டல் கேலி தான் செய்கிறார். அப்போது மீனா, ஆர்டர் போனது பற்றி கூட கவலை இல்லை. சீதா கஷ்டப்பட்டு கடன் வாங்கியெல்லாம் பணத்தை எனக்கு ரெடி பண்ணி கொடுத்தார். அந்த பணம் பறிபோனது நினைத்தால் தான் ரொம்ப வருத்தமாக இருக்கிறது என்று புலம்புகிறார்.
உடனே அண்ணாமலை, விஜயாவிடம் இருக்கும் நகையை கேட்கிறார். ஆனால், விஜயா தர முடியாது என்று ரொம்ப கேவலமாக மீனாவை பேசுகிறார்.

சீரியல் ட்ராக்:
கோபத்தில் மீனா, எனக்கு யாருடைய நகையும் தேவையில்லை. எங்கள் பிரச்சனையை நாங்கள் சமாளித்துக் கொள்கிறோம் என்று சொல்கிறார். உடனே ரோகினி-மனோஜ் இது தான் சந்தர்ப்பம் என்று முத்து,மீனாவை அவமானப்படுத்தி பேசுகிறார்கள். அதற்கு மீனாவும் பதிலடி கொடுக்கிறார். அதற்குப்பின் மீனாவின் அம்மா, தங்கை, தம்பி எல்லாம் வருகிறார்கள். அவர்களை பார்த்தவுடன் விஜயா ரொம்ப ஏளனமாக பேசுகிறார். அப்போது முத்து, மீனா ஆர்டர் செய்த மண்டபத்தின் அட்ரசை வாங்கி எடுத்துக்கொண்டு விசாரிக்க செல்கிறார். பின் வீட்டிற்கு பார்வதி வருகிறார். அப்போது அவரிடம் விஜயா, மீனா ஆர்டர் பறிபோனதை பற்றி சொல்லி ரொம்ப சந்தோஷப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






