விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் வக்கீல், வீட்டின் மேல் போட்டு இருக்கும் சீலை எடுக்க வேண்டும் என்றால் முன் பணமாக 10 லட்சம் கட்ட சொல்வாங்க. அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றார். ஸ்வேதாவிடம் பணம் கேட்கலாம் என்று முத்து சொன்னார். இன்னொரு பக்கம் மனோஜை பார்ப்பதற்காக ரோகினி கடைக்கு வந்தார். இதை வீட்டிலிருந்தே போனில் விஜயா பார்த்து விட்டார். பின் கேமராவை விஜயா, அண்ணாமலையிடம் காண்பித்து ரோகினியை திட்டிக் கொண்டிருந்தார். விஜயா, ரோகினியை ரொம்ப மோசமாக திட்டினார். அவமானத்தில் ரோகினி எமோஷனலாக அழுதார்.

விஜயா ரொம்ப மோசமாக பேசியதால் ரோகினி கோபத்தில் கேமராவையே உடைத்து விட்டார். மனோஜை திட்டி விட்டு ரோகினி அங்கிருந்து சென்று விட்டார். அதற்குப் பின் கிரிஷ் உடம்பு சரியில்லாததால் ரோகிணி ஹாஸ்பிடல் அழைத்துக் கொண்டு வந்தார். அந்த இடத்தில் முத்து, மீனாவை பார்த்தவுடன் க்ரிஷ் ரொம்பவே சந்தோசப்பட்டார். முத்து, கிரிஸ் உடல்நலத்தை பற்றி விசாரிக்கிறார். ரோகிணியால் தான் கிரிஷுக்கு பிரச்சனை வந்தது என்று தெரியவருகிறது. மீனா, கிரிஷை கவனித்துக் கொள்ள சொன்னார். வழக்கம் போல ரோகிணி திமிராக அங்கிருந்து சென்றார். அதற்குப்பின் மீனா அம்மாவிற்கு பத்திரிக்கை வைக்க தெரிந்தவர்கள் வந்திருந்தார்கள்.
சிறகடிக்க ஆசை:
மீனாவின் அம்மா இல்லாததால் வெய்ட் பண்ணுகிறார்கள். விஜயா ரூமுக்கு சென்று விட்டார். அப்போது மீனாவிற்கு தெரிந்தவர்கள் விஜயாவை பற்றி கிண்டலாக பேசி இருந்தார்கள். இதை ஒட்டு கேட்ட விஜயா, மீனாவின் அம்மா வந்தவுடன் கேட்டு சண்டை வாங்கினார். மீனா அம்மாவும், நான் எதுவும் தவறாக பேசவில்லை என்று சொல்லி சமாளித்தார். இருந்தாலும் விஜயா, என்னால் இனி இங்க இருக்க முடியாது என்று வீட்டை விட்டு கிளம்புகிறேன் என்றார். அப்போது வந்த முத்து, எனக்கு இன்னும் இரண்டு நாட்கள் டைம் கொடுங்கள். நம்முடைய வீட்டிற்கு எப்படியாவது செல்லலாம். நான் என்னுடைய காரை விற்றாவது உங்களை வீட்டிற்கு அழைத்து செல்கிறேன் என்றார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனாவின் அம்மா நடந்து கொண்ட விதத்தால் முத்து, மீனாவின் மீது கோபப்படுகிறார். மீனாவும் தன்னுடைய அம்மாவுக்கு சப்போர்ட் செய்து பேசுகிறார். இதனால் மீனா- முத்து இடையே விரிசல் ஏற்படுகிறது. அதற்குப்பின் முத்து, எப்படியாவது வீட்டை மீட்க வேண்டும் என்று ரவியிடம் சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார். பின் முத்து, ரவி இருவரும் சேர்ந்து மனோஜிடம் பணம் கேட்கிறார்கள். மனோஜ், அந்த வீட்டில் எனக்கு பங்கு இல்லாத போது நான் எதற்காக பணம் கொடுக்கணும். எனக்கு அந்த வீடு போனாலும் அதைப்பற்றி கவலையில்லை என்றெல்லாம் திமிராக பேசுகிறார்.

சீரியல் ட்ராக்:
அதனால் முத்து கோபப்பட்டு மனோஜை அடிக்க போகிறார். பின் ரவி அவரை தடுத்து அங்கிருந்து அழைத்து வந்து விடுகிறார். அதற்குப்பின் மீனா, சத்யாவிடம் தன்னுடைய வீட்டு விவகாரத்தை பற்றி சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார். இதை ரேகாவின் அப்பா கவனித்து விடுகிறார். பின் சத்யா, தன்னுடைய அக்கா பணம் கேட்கும் விஷயத்தைப் பற்றி ரேகாவின் அப்பாவிடம் சொல்லி உதவி கேட்கிறார். ரேகா அப்பா, என்னால் முடிந்த உதவி செய்கிறேன் என்று சொல்கிறார்.






