விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரிஜிஸ்டர் ஆபீசில் சீதா-அருணிற்கு நல்லபடியாக திருமணம் நடந்தது. இன்னொரு பக்கம் அதே ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு முருகனுடன் முத்து வந்தார். அப்போது முருகன், ரெஜிஸ்டர் மேரேஜருக்கு என்னென்ன தேவைகள் என்பதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால், உள்ளே மீனா இருக்கும் விஷயம் முத்துவிற்கு தெரியவில்லை. பின் நல்லபடியாக திருமணம் முடிந்து சீதா, மீனா, அருண் மூவரும் வெளியே வந்தார்கள். அந்த சமயம் பார்த்து முத்து வேறொரு ரூமிற்கு சென்று விட்டார். பின் அருண், சீதாவை அனுப்பி விட்டார். பர்ஸ் மறந்து வைத்ததால் மீனா உள்ளே வந்தார். அப்போது முத்துவை பார்த்து மீனா ஷாக் ஆனார்.

முத்து, இங்கே என்ன செய்கிறாய்? என்று கேட்டார். அதற்கு மீனா, நான் கல்யாணத்திற்கு மாலை கொடுக்க வந்தேன் என்று சொன்னார். பின் இருவருமே அங்கிருந்து கிளம்பி விட்டார்கள். இன்னொரு பக்கம் மீனாவின் அம்மா வீட்டில் சத்யா பாஸ் பண்ணதற்காக தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்திருந்தார் முத்து. எல்லோருமே முத்துவை பாராட்டி பேசிருந்தார்கள். இதனால் மீனாவின் அம்மாவிற்கு ரொம்ப சந்தோஷம். அப்போது வந்த முத்து, எல்லோருக்குமே விருந்து போட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர், சீக்கிரமாகவே சீதா கல்யாண விருந்து போட வேண்டும் என்று சொன்னார். முத்து, சீக்கிரமாக சீதாவிற்கு கல்யாணம் ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னார். இதைக் கேட்டு மீனா- சீதா இருவரும் பயப்பட்டார்கள்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் மீனா அம்மா குடியிருக்கும் வீட்டின் ஓனர், சீதா காதலிக்கும் விஷயமாக முத்து விடம் பேசினார்கள். அப்போது அவர்கள், சீதா காதலிக்கும் பெண்ணையே திருமணம் செய்து வைத்து விடுங்கள். இல்லை என்றால் அவள் வீட்டுக்கு தெரியாமல் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்க போகிறாள் என்றெல்லாம் சொன்னார். இதனால் முத்துவிற்கு பயங்கர கோபம் வந்தது. உடனே சீதாவை அழைத்து முத்து திருமணத்தை பற்றி பேசி இருந்தார். ஆனால், சீதாவால் எதுவுமே பேச முடியவில்லை. அழுது கொண்டு சென்று விட்டார். இன்னொரு பக்கம் ரோகினி, சிட்டியை சந்தித்து போலி நகையை பற்றி பேசினார். உடனே சிட்டி, எனக்குமே தெரியாது. நானும் உங்களை போல தான் ஏமாந்து இருக்கிறேன் என்று சொன்னார்.

நேற்று எபிசோட்:
அதற்கு ரோகினி, என் பணத்தை கொடுங்கள் என்று கேட்டார். சிட்டி, நீங்கள் நகையை கொடுத்தால் பணத்தை தருகிறேன் என்று சொன்னார். இதனால் ரோகிணிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. பின் இதை பற்றி மனோஜிடம் ரோகினி சொன்னார். அதற்கு மனோஜ், பணம் இல்லை என்றால் அம்மா சும்மா விட மாட்டார்கள். தயவுசெய்து ஏதாவது செய். நாம் இருவரும் சேர்ந்து வாழ முடியாது என்று வழக்கம்போல் அம்மா பிள்ளையாக பேசி இருந்தார். அதனால் ரோகினி கோபம் வந்து மனோஜை திட்டுகிறார். பின் வித்யாவை திருமணம் செய்து கொள்ளப் போகும் முருகனுக்கு போன் செய்து ரோகினி பணத்தை கேட்டார். அதற்கு அவர், நான் யோசித்து சொல்கிறேன் என்றார்.

இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் மனோஜ் ரூமிற்கு வந்த விஜயா, நீ எதற்காக? கீழே படுத்து இருக்கிறாய் என்று மனோஜை கேட்டு ரோகினியை திட்டுகிறார். இதனால் மனோஜ் தனியாக படுக்க சொல்கிறார். இதனால் ரோகிணிக்கு பயங்கர கோபம் வருகிறது. இன்னொரு பக்கம் ஸ்ருதி- ரவி இருவருமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஸ்ருதி, ரெஸ்டாரன்ட் விஷயமாக பற்றி பேசுகிறார். கோபத்தில்
இருவருக்குமே வாக்குவாதம் அதிகமாகின்றது. மறுநாள் காலையில் ரோகினி-மனோஜ் இருவருமே சந்தோசமாக பேசிக்கொண்டு வெளியே வருகிறார்கள். இதை பார்த்த விஜயா, பணத்தை சீக்கிரமாக ரெடி பண்ணு. இல்லை என்றால் ரெண்டு பேரும் பிரிந்து இருக்க வேண்டியது என்று மிரட்டுகிறார். இதனால் ரோகினி இன்னும் கோபம் அதிகமாகிறது.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் முத்து சீதாவிற்காக மாப்பிள்ளை பார்ப்பதற்காக முத்து ஒரு இடத்திற்கு சென்று இருக்கிறார். அருணின் ஜாதகத்தையும், சீதா ஜாதகத்தை பார்த்த ஜோதிடர் இந்த இருவருக்குமே பொருத்தம் நல்லா இருக்கிறது. அவர்களுடைய அம்மாவை அழைக்கிறேன் என்று அருணின் அம்மாவை கூப்பிடுகிறார். அதை பார்த்தவுடன் முத்துவிற்கு பயங்கர கோபம் வருகிறது. இந்த சம்பந்தம் எங்களுக்கு வேண்டாம் என்று முத்து சொல்கிறார். இதை கேட்டு அருண் அம்மாவும் கோபப்படுகிறார். இன்னொரு பக்கம் மீனாவிடம் சுருதி, நீங்கள் ரவியின் மனதில் என்ன இருக்கிறது என்று கேட்டு சொல்லுங்கள் என்கிறார். மீனாவும் ரவியிடம் பேச்சு கொடுத்து அவருக்கு பிடித்த விசயத்தை சொல்ல வைக்கிறார். பின் சீதாவிற்கு வரன் ஒன்று வருகிறது.






