விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் கடைக்கு பேங்கில் இருந்து வந்த ஒருவர், உங்களுக்கு 10 லட்சம் ரூபாய் கிரெடிட் கார்டு வந்து இருக்கிறது என்று சொன்னவுடன் மனோஜ் சந்தோஷத்தில் ரோகினி பேச்சை கூட கேட்காமல் கையெழுத்து போட்டு கொடுத்தார். பின் ரோகினி தன்னுடைய தோழியுடன் ஹாஸ்பிடலுக்கு சென்று தனக்கு குழந்தை பிறக்குமா? என்று மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு இருந்தார்.
இதை பார்த்த சீதா, மீனாவிடம் சொல்ல, அவர் ரோகினி கர்ப்பமாக இருக்கிறார் என்று நினைத்து கொண்டு ஸ்வீட் செய்து எல்லோருக்கும் கொடுத்து ரோகினி கர்ப்பம் என்று சொல்லி இருந்தார். உடனே வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்பட்டு இருந்தார்கள். ஆனால், ரோகினி அதிர்ச்சியாகி, நான் கர்ப்பமாகவே இல்லை. யாரைக் கேட்டு நீங்களே இந்த மாதிரி முடிவெடுத்து சொன்னீர்கள்? என்று கோபமாக பேசி இருந்தார். அதன் பின் ரவி, தான் வேலை செய்யும் இடத்தில் திருமணம் ஆன ஜோடிகளுக்கு போட்டி நடப்பதாக சொல்லி இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
எல்லா ஜோடிகளும் போட்டியில் கலந்து இருக்கிறார்கள். ஒவ்வொருவருமே தங்களைப் பற்றி அறிமுகம் செய்யும் போது கைதட்டுகிறார்கள். ஆனால், முத்து- மீனா பேசும்போது மட்டும் யாரும் கை தட்டவில்லை. இதனால் இருவருக்குமே கஷ்டமாகி இருந்தது. பின் ஒவ்வொரு பெண்களும் தங்களுடைய தனித்திறமையை காண்பித்தார்கள். அந்த வகையில் மீனா, கண்ணை கட்டிக்கொண்டு வேகமாக பூ கட்டி இருந்தார். அதற்குப் பின் ஒவ்வொரு ஜோடியையும் மேடையில் அமர வைத்து தங்கள் மனதில் தோன்றும் விஷயத்தை பேச சொன்னார்கள்.
சீரியல் கதை:
அப்போது மீனா- முத்து பேசியதை கேட்டு அரங்கமே கைதட்டி இருந்தது. அதற்குப் பின் ஒவ்வொருவரின் சம்பளத்தை பற்றி கேட்க மனோஜ் திமிராக பேசி இருந்தார். சுருதி-ரவி, முத்து- மீனா இருவருமே தங்களுடைய சம்பளத்தையும், அதை செலவு செய்யும் விதத்தையும் பற்றி கூறியதைக் கேட்டு நடுவர்களே கிளாப் செய்திருந்தார்கள். நேற்று எபிசோடில், மூன்றாவது சுற்றில், சந்தோசமாக வாழ்வதற்கு என்ன தேவை என்ற சொன்னவுடன் ஒவ்வொரு ஜோடியும் தனித்தனியாக டிஸ்கஸ் செய்தார்கள். அப்போது மனோஜ் வழக்கம் போல் குருட்டுத்தனமாக யோசித்து ரோகினி இடம் சொல்வதை நடுவர்கள் கேட்டு இருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இறுதியில் வெற்றியாளர் குறித்து சொல்லும் போது, நாங்கள் தானே என்று மனோஜ் திமிர் தனமாக பேசியதால், அவர் வெற்றி பெற ரகசியமாக பேசி இருந்த ஃபுட் பேஜை நடுவர்கள் போட்டு காண்பித்தவுடன் அவருக்கு முகமே இல்லை. கடைசியில் மீனா- முத்து தான் வெற்றி பெற்றார்கள் என்று அறிவித்தார்கள். வீட்டில் விஜயா, ஆரத்தி எடுக்க காத்துக் கொண்டிருக்க ஸ்ருதி- ரோகினி ஜோடி வெற்றி இல்லை என்றவுடன் வருத்தப்பட்டார். அந்த சமயம் முத்து- மீனா மாலையும், மேல தாளத்துடன் வந்தவுடன் அவருக்கு முகமே மாறிவிட்டது.
சீரியல் ட்ராக்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில், முத்து மேல தாளத்தில் பயங்கரமாக நடனமாடுகிறார். இதை பார்த்து மனோஜ், விஜயாவிற்கு பயங்கர கோபம் வருகிறது. விஜயா மனதுக்குள்ளே முத்து- மீனாவை திட்டிக் கொண்டிருக்கிறார். பின் தாங்கள் வெற்றி பெற்ற பணத்தை அப்பாவிடம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கி, அங்கு நடந்ததையும் , நடுவர்கள் சொன்னதையும் சொல்கிறார்கள் முத்து-மீனா. அதற்கு மனோஜ் கிண்டலாக பேசி இருக்கிறார் . அப்போது கணவன், மனைவிக்கிடையே சண்டை வரவில்லை என்றால் இருவரும் ஏதோ மறைக்கிறார்கள் என்று நடுவர் சொன்னதாக முத்து சொல்ல, விஜயாவிற்கு ரோகினி மேல் சந்தேகம் வருகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது