விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்துவிற்கு தவணை முறையில் வேனை அந்த மனநலம் பாதிக்கப்பட்டவரின் பெற்றோர்கள் வாங்கி தந்தார்கள். இதனால் முத்து-மீனா இருவரும் சந்தோஷப்பட்டார்கள். அதற்குப்பின் மேனேஜர் தினேஷ், முத்துவை சந்தித்து ரோகிணி பற்றிய எல்லா உண்மையும் சொன்னார். இதைக் கேட்டு முத்துவிற்கு சிரிப்புதான் வருகிறது. பின் தினேஷ், இவ்வளவு பெரிய விஷயத்தை சொன்னதற்கு எனக்கு பார்த்து கவனியுங்கள் என்றார்.

உடனே முத்து நண்பர்கள் தினேஷை ஒரு ரூமிற்கு அழைத்து சென்றார்கள். அங்கு முத்துவும் அவருடைய நண்பர்களும் தினேஷை வெளுத்து கட்டுகிறார்கள். அதற்குப்பின் விஜயா, மனோஜ் இருவரும் வக்கீலை சந்தித்து பேசினார்கள். அப்போது வக்கீல், நீங்கள் மனோஜ்க்கு இரண்டாவது திருமணம் ஏற்பாடு செய்தல் உங்களை போலீஸ் தான் கைது செய்வார்கள். தேவையில்லாமல் மாட்டிக் கொள்ளாதீர்கள் என்று சொன்னார். இதைக் கேட்டு முத்து சிரிக்கிறார்.
சிறகடிக்க ஆசை:
அண்ணாமலையின் பிறந்தநாள் என்றவுடன் நண்பர் வீட்டிற்கு வந்து இருந்தார். ஆனால், அண்ணாமலை வீட்டில் யாருக்குமே பிறந்தநாள் ஞாபகமே இல்லை. விஜயா, மனோஜ், ரவி எல்லோருமே அண்ணாமலை பிறந்த நாளை மறந்து இருந்தார்கள். அந்த சமயம் பார்த்து முத்து, மீனா இருவரும் மேலத்தாலத்துடன் அண்ணாமலையின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை சொல்கின்றார்கள். அதை பார்த்து அண்ணாமலைக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. பின் தன் மகன் கொடுத்த துணியை அணிந்து கேக் வெட்டி அண்ணாமலை கொண்டாடினார்.

சீரியல் ட்ராக்:
அந்த சமயம் பார்த்து வந்த ரோகினி, அண்ணாமலைக்கு வாழ்த்து சொன்னார். கோபத்தில் விஜயா திட்டி அனுப்பினார். அதற்குப்பின் கோவிலில் முத்து தான் வாங்கிய புது வேனுக்கு பூஜை செய்து எல்லோரிடமும் ஆசிர்வாதம் வாங்கினார். எல்லோருமே சந்தோஷமாக இருந்தார்கள். பின் சீதாவின் கழுத்தில் இருந்து தாலியை யாரோ எடுத்து சென்று விட்டார். அதை தெரியாமல் சீதா கோவிலை சுற்றிக் கொண்டிருந்தார். பின் தாலியை காணவில்லை என்று சீதா பதறிப் போனார்
https://www.youtube.com/watch?v=WAYAhkOmKZY
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சீதா கோயிலில் சாமி கும்பிட்டு இருக்கும்போது அவருடைய தாலியை ஒருவர் பறித்து கொண்டு ஓடுகிறார். அந்த நபர் மீனாவின் மீது மோதி விட்டு தான் செல்கிறார். சீதா தாலியை காணோம் என்று சொல்லும்போது மீனா தன் மீது மோதிய நபரை பின்தொடர்ந்து சென்று பிடித்து விடுகிறார். அந்த நபர் வேறு யாருமில்லை விஜயாவை அழைத்து வந்த சாமியார் தான். உடனே மீனா இதைப்பற்றி முத்துவிடம் சொல்கிறார். விஜயா, நீ சொன்னால் நான் நம்பி விடணுமா என்று சொல்கிறார். முத்து, நான் அந்த பொம்பளை போலி என்று நிரூபிக்கிறேன் என்று சவால் விட்டு செல்கிறார்.






