விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் பவானியின் கல்யாண வேலைகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அண்ணாமலையின் குடும்பத்தை பார்ப்பதற்காக மலேசியா மாமாவும் ரெடியாக இருந்தார். ஆனால், ஏதாவது ஒரு தடங்கல் வருவதால் அண்ணாமலை குடும்பத்தை மலேசியா மாமாவால் பார்க்க முடியாமல் போனது. பின் சுருதி தன்னுடைய மாமியாரை போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார். அதற்கு பின் ரோகினி சேர்ந்து கொண்டார். அப்போது மீனா வந்தவுடன் விஜயா கிளம்பி விட்டார். இதனால் மீனா வருத்தப்பட்டார்.

அதற்குப்பின் மாமியார், மருமகள்கள் எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருப்பதை பார்த்தவுடன் முத்துக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. பின் முத்து தன்னுடைய அப்பா, சகோதரர்களிடம் அதை சொல்லி காண்பித்தார். எல்லோருமே சந்தோஷப்பட்டு சாப்பாட்டை ஒருவருக்கு ஒருவர் மாத்தி ஊற்றிக் கொண்டார்கள். அதை போட்டோவும் எடுத்தார்கள். பின் சமையல் செய்பவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் மலேசியா மாமாவே இறங்கி சமையல் செய்தார். அந்த இடத்திற்கு முத்து தன்னுடைய அப்பாவிற்கு சூடு தண்ணீர் வாங்க வந்தார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் கல்யாண மண்டபத்தில் இரண்டு குடிகாரன்கள் குடித்துவிட்டு முத்துவின் மீது மோதி இருந்தார்கள். இதனால் முத்து மீது சரக்கு மொத்தம் கொட்டி விட்டது. பின் எல்லோருமே முத்து, தான் குடித்து இருக்கிறான் என்று ரொம்ப மோசமாக பேசி இருந்தார்கள். இதை பார்த்த மனோஜ், தன்னுடைய அம்மாவிடம் சொல்லி புலம்பி இருந்தார். உடனே விஜயா ருத்ரதாண்டவம் ஆடினார். பின் மீனாவிடம் அவர், அவன் செய்த வேலையை பார்த்தாயா? எங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்று வழக்கம்போல முத்துவை வறுத்து எடுத்துக் கொண்டிருந்தார்.

நேற்று எபிசோட்:
இதனால் கொந்தளித்த மீனா, முத்துவிடம் சண்டை போட்டார். நீங்கள் திருந்தவே இல்லையா? என்று கத்தினார். முத்து, நான் எந்த தவறும் செய்யவில்லை என்று தன் தரப்பு நியாயத்தை நிரூபிக்க பார்த்தார். ஆனால், அதை மீனா-ரவி கேட்கவில்லை. அதற்குப்பின் முத்து சட்டையை மாற்றி இப்போது செக் பண்ணி பாருங்கள் என்றவுடன் வாசனை எதுவும் வரவில்லை. பின் தான் செய்த தவறை உணர்ந்து மீனா மன்னிப்பு கேட்டார். அப்போது அந்த குடிகாரர்களையும் காண்பித்த முத்து, இவர்கள் தான் இந்த வேலையை செய்தார்கள் என்றார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பவானி திருமணத்தில் இரண்டு திருடர்கள் நகை, பணத்தை திருடுவதற்காக சொந்தக்காரர்கள் போல் வேஷம் போட்டு சொந்தக்காரர்கள் போர் வேஷம் போட்டு வருகிறார்கள். ஆனால், மீனாவிற்கு அவர்கள் மீது சந்தேகம் வருகிறது. இன்னொரு பக்கம் முத்து குடிக்கவில்லை என்று தெரிந்தவுடன் மீனா, இதை உன் அண்ணன் தான் சொன்னார். கோபத்தில் முத்து, மனோஜ் போனை பிடுங்கி வைத்து மன்னிப்பு கேட்க சொல்கிறார். ஆனால், மனோஜ் முடியாது என்றார்.

சீரியல் ட்ராக்:
அதற்கு பின் நல்லபடியாக பவானி திருமணம் முடிகிறது. ஆனால், அந்த திருடர்கள் இரண்டு பேருமே பவானியின் நகையை எடுத்துக்கொண்டு கிளம்ப பார்க்கிறார்கள். இதை பார்த்தவுடன் சந்தேகம் வந்த மீனா, முத்துவிடம் சொல்ல, இரண்டு பேருமே அவர்களை வளைத்து பிடித்து பிடிக்கிறார்கள். பின் அந்த திருடனை முத்து வெளுத்து வாங்கிறார். அப்போது அந்த திருடன் மீனாவின் கையை அறுத்துவிட்டு தப்பித்து விடுகிறார். பின் பவானியின் அப்பா வந்தவுடன் நடந்ததை சொல்ல, அவர் பணம் போனால் போகட்டும். உங்களுக்கு எதுவும் இல்லையா? என்று வருத்தப்பட்டு பேசுகிறார். பின் இதை வீட்டில் இதை யாரிடமும் சொல்ல வேண்டாம். நீங்கள் திருமண வேலையை பாருங்கள் என்று முத்து சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






