மனோஜால் மேடையில் அழுத ரோகினி, மீனா சொன்னதை கேட்டு வாயடைத்த முத்து- விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

0
286
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் முத்து-மீனா இருவரும் கிரிஷை தத்து எடுக்க நினைத்து வீட்டில் அனைவரிடமும் சொல்ல, விஜயா மற்றும் மனோஜ் கேவலமாக கிரிஷ் அம்மாவை பேசி இருந்தார்கள். இதையெல்லாம் ரோகிணி வெளியே நின்று கேட்டு வருத்தப்பட்டு இருந்தார். பின் ரோகினி, தனது அம்மாவிடம் நடந்த உண்மையையெல்லாம் சொல்லி முத்து போன் செய்தால் எடுக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தார். இன்னொரு பக்கம் சீதா, டிகிரி பாஸ் பண்ணி விட்டேன் என்று முத்து- மீனாவிடம் சொல்லி சந்தோசப்பட்டார்.

-விளம்பரம்-

பின் கடைக்கு பேங்கில் இருந்து வந்த ஒருவர், உங்களுக்கு 10 லட்சம் ரூபாய் கிரெடிட் கார்டு வந்து இருக்கிறது என்று சொன்னவுடன் மனோஜ் சந்தோஷத்தில் ரோகினி பேச்சை கூட கேட்காமல் கையெழுத்து போட்டு கொடுத்தார். மேலும், ரோகினி தன்னுடைய தோழியுடன் ஹாஸ்பிடலுக்கு சென்று தனக்கு குழந்தை பிறக்குமா? என்று மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு இருந்தார். இதை பார்த்த சீதா, மீனாவிடம் சொல்ல, அவர் ரோகினி கர்ப்பமாக இருக்கிறார் என்று நினைத்து கொண்டு ஸ்வீட் செய்து எல்லோருக்கும் கொடுத்து ரோகினி கர்ப்பம் என்று சொல்லி இருந்தார்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

இதை கேட்டு வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்பட்ட ஆனால், ரோகினி அதிர்ச்சியாகி, நான் கர்ப்பமாகவே இல்லை. யாரைக் கேட்டு நீங்களே இந்த மாதிரி முடிவெடுத்து சொன்னீர்கள்? என்று கோபமாக பேசி இருந்தார். பின் ரோகினி, ரூமில் நாம் இருவரும் ஹாஸ்பிடல் போய் ஒரு முறை செக் பண்ணிக்கலாம் என்று கேட்க இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இந்த விவகாரம் விஜயாவிற்கு தெரிந்து ரோகினியை பயங்கரமாக திட்டி இருந்தார்.

சீரியல் கதை:

அதன் பின் ரவி, தான் வேலை செய்யும் இடத்தில் திருமணம் ஆன ஜோடிகளுக்கு போட்டி நடப்பதாக சொல்லி இருந்தார். எல்லா ஜோடிகளும் போட்டியில் கலந்து கொள்வது பற்றி மும்மரமாக பேசிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் முத்து, மீனா போட்டியில் என்னென்ன கேட்பார்கள் என்று ரவி- ஸ்ருதி இடம் கேட்டு தெரிந்து கொண்டார்கள். நேற்று எபிசோடில், போட்டி நடைபெறுகிறது. ஒவ்வொருவருமே தங்களைப் பற்றி அறிமுகம் செய்யும் போது கைதட்டுகிறார்கள். ஆனால், முத்து- மீனா பேசும்போது மட்டும் யாரும் கை தட்டவில்லை.

-விளம்பரம்-

நேற்று எபிசோட்:

இதனால் இருவருக்குமே கஷ்டமாகி இருந்தது. பின் ஒவ்வொரு பெண்களும் தங்களுடைய தனித்திறமையை காண்பித்தார்கள். இந்த நிலையில் இன்றைய எபிசோடில், அந்த வகையில் ரோகினி ஒரு ஆணை அழகான பெண்ணாக மாற்றி இருந்தார். ஸ்ருதி பல குரலில் பேசி அசத்தி இருந்தார். அதேபோல் மீனா, கண்ணை கட்டிக்கொண்டு வேகமாக பூ கட்டி இருந்தார். அதற்குப் பின் ஒவ்வொரு ஜோடியையும் மேடையில் அமர வைத்து தங்கள் மனதில் தோன்றும் விஷயத்தை பேச சொன்னார்கள்.

இன்றைய எபிசோட்:

எல்லோரும் மீனா- முத்து பேசியதை கேட்டு கைதட்டி இருந்தார்கள். அதற்குப் பின் ஒவ்வொருவரின் சம்பளத்தை பற்றி கேட்டிருந்தார்கள். அதற்கு மனோஜ், இந்த கேள்வி தவறு, பதில் சொல்ல முடியாது என்று திமிராக பேசி இருக்கிறார். அதற்கு நடுவர் கிண்டலாக பேசி இருந்தார்கள். பின் ரோகினி, வாயைத் திறந்து பிளாக் மைலுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று உளறி எப்படியோ சமாளித்து விட்டார். அதற்குப் பின் முத்து- மீனா இருவருமே தங்களுடைய சம்பளத்தையும், அதற்கு செலவு செய்யும் விதத்தையும் பற்றி கூறியதைக் கேட்டு நடுவர்களே கிளாப் செய்திருந்தார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement