விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சத்யா, ரோகினியின் வீட்டிற்கு வந்துவிடுகிறார். உடனே சிந்தாமணி ஒளிந்து கொண்டார். அப்போது சத்யா, அக்கா- மாமா இருவரும் கிரிஷிடம் பேச வேண்டும் என்று சொன்னார்கள். அதனால் தான் வீடியோ காலில் காண்பிக்க வந்தேன் என்றார். பின் வீடியோக்களில் முத்து-மீனா இருவரும் கிரிஷிடம் பேசி இருந்தார்கள். இன்னொரு பக்கம் மனோஜ் தூக்கத்திலேயே ரோகிணியிடம் பேசிக் கொண்டிருப்பது போல கனவு காண்கிறார். ரோகினின் பெயரை சொல்லிக் கொண்டிருப்பதால் கோபத்தில் விஜயா, மனோஜை அடித்து எழுப்புகிறார்.

அதற்குப்பின் ரூம் கிடைத்ததால் முத்து ஃபர்ஸ்ட் நைட் செட்டப்பில் ரூமை தயார் செய்து வைத்திருந்தார்.
முத்து-மீனா இருவரும் சந்தோஷமாக இருந்தார்கள். பின் மனோஜின் மொபைலுக்கு ஒரு வீடியோ வந்திருக்கிறது. அதில் ரோகினி, மனோஜ் இருவரும் சேர்ந்து நடனமாடியது போல இருக்கிறது. அதை விஜயா பார்த்து கோபப்பட்டார். பின் மனோஜிடம் விசாரிக்கிறார்., அது ai வீடியோ. நான் ஆடவில்லை என்றார். இருந்தாலும் விஜயா நம்பவில்லை. மனோஜை புரட்டி எடுத்து அடிக்கிறார். பின் இதைப்பற்றி முத்துவிடம் விஜயா சொன்னார்.
சிறகடிக்க ஆசை:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து, அந்த வீடியோவை நன்றாக பார்த்துவிட்டு இது ஏஐ தான். மனோஜ் ஆடவில்லை என்று சொல்கிறார். விஜயா நம்பவில்லை. இருந்தாலும் முத்து எடுத்து சொல்லி புரிய வைக்கிறார். அதற்குப்பின் முத்துவை சந்தித்த செல்வம், தன்னால் பணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை என்று புலம்பி கொண்டிருக்கிறார். முத்துவும் அவருக்கு ஆறுதல் சொல்கிறார். பின் வீட்டிற்கு வந்த முத்து, செல்வம் சொன்ன விஷயத்தை எல்லாம் மீனாவிடம் சொல்கிறார். மீனாவும் ரொம்பவே வருத்தப்படுகிறார். அப்போது முத்து, நான் காரை சத்யா கம்பெனியில் பைனான்ஸ்க்கு போடுகிறேன்.

இன்றைய எபிசோட்:
அதில் வரும் பணத்தை வைத்து செல்வத்துக்கு கொடுக்கலாம் என்கிறார். மறுநாள் காலையில்
முத்து, சத்யா வேலை செய்யும் இடத்தில் கார் மூலமாக பைனான்ஸ் வாங்கி செல்வத்திடம் கொடுக்கிறார்.
செல்வம் எமோஷனலாக அழுது முத்துவிற்கு நன்றி சொல்கிறார். பின் சத்யா தன் அம்மாவிற்கு ஃபோன் செய்து முத்து உதவி செய்த விஷயத்தை பற்றி சொல்கிறார். பின் மீனாவின் அம்மா வீட்டிற்கு
சீதா, சத்யா வந்து விடுகிறார்கள். அப்போது மீனாவின் அம்மா, மாப்பிள்ளை செல்வதற்கு இப்படி எல்லாம் உதவி செய்ய தேவையா? என்றெல்லாம் கேட்கிறார். மீனாவும் எவ்வளவோ சொல்லி பார்க்கிறார்.

சீரியல் ட்ராக்:
பின் மீனாவின் அம்மா, இவ்வளவு அவசரமாக இந்த பணம் தேவையா? மாப்பிள்ளை இடம் நீ சொல்ல மாட்டாயா? என்று சீதாவிடம் கேட்கிறார். அப்போது சீதா,மாமா காரை வைத்து தான் இந்த பணத்தை கொடுத்தார். எதற்காக இப்படி நடந்து கொள்கிறீர்கள்? என்று கேட்கிறார். கோபத்தில் அருண், சீதாவை அறைந்து விட்டு நான் சொல்வதை தான் கேட்கணும். காபி போடு என்றெல்லாம் சொல்லி இருக்கிறார். இதை நினைத்து பார்த்து சீதா ரொம்பவே வருத்தப்படுகிறார்.






