விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் தனக்கு அடிப்பட்டதை பற்றி மீனா வீட்டில் உள்ள எல்லோரிடமும் சென்றார். ஆனால், விஜயா கிண்டல் கேலி தான் செய்தார். அப்போது மீனா, ஆர்டர் போனது பற்றி கூட கவலை இல்லை. சீதா கஷ்டப்பட்டு கடன் வாங்கியெல்லாம் பணத்தை எனக்கு ரெடி பண்ணி கொடுத்தார். அந்த பணம் பறிபோனது நினைத்தால் தான் ரொம்ப வருத்தமாக இருக்கிறது என்று புலம்பி இருந்தார். உடனே அண்ணாமலை, விஜயாவிடம் இருக்கும் நகையை கேட்டார். ஆனால், விஜயா தர முடியாது என்று ரொம்ப கேவலமாக மீனாவை பேசி இருந்தார்.

கோபத்தில் மீனா, எனக்கு யாருடைய நகையும் தேவையில்லை. எங்கள் பிரச்சனையை நாங்கள் சமாளித்துக் கொள்கிறோம் என்று சொன்னார். உடனே ரோகினி-மனோஜ் இது தான் சந்தர்ப்பம் என்று முத்து,மீனாவை அவமானப்படுத்தி பேசி இருந்தார்கள். அதற்கு மீனாவும் பதிலடி கொடுத்தார். அதற்குப்பின் மீனாவின் அம்மா, தங்கை, தம்பி எல்லாம் வந்தார்கள். அவர்களை பார்த்தவுடன் விஜயா ரொம்ப ஏளனமாக பேசி இருந்தார். அப்போது முத்து, மீனா ஆர்டர் செய்த மண்டபத்தின் அட்ரசை வாங்கி எடுத்துக்கொண்டு விசாரிக்க சென்றார். பின் வீட்டிற்கு பார்வதி வந்தார். அப்போது அவரிடம் விஜயா, மீனா ஆர்டர் பறிபோனதை பற்றி சொல்லி ரொம்ப சந்தோஷப்பட்டார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் பார்வதி, மீனாவின் நிலைமையை பார்த்து வருத்தப்பட்டு ஆறுதல் சொல்லி சென்றார். அதற்குப்பின் விஜயாவிடம் பார்வதி, இது சிந்தாமணி செய்திருக்க வேண்டும். நீ மீனாவை மதிக்கவில்லை என்று தெரிந்து கொண்டுதான் அவள் ரொம்ப எளக்காரமாக மீனாவை நடத்துகிறார் என்று சொன்னார். ஆனால், விஜயா அதைப்பற்றி பெரிதாக கண்டு கொள்ளவே இல்லை. மீனாவை தான் குறை சொல்லிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் முத்து, மண்டபத்திற்கு சென்று விசாரித்தார். அப்போது அவர்கள் சிந்தாமணி தான் ஆர்டர் எடுத்தார் என்று சொன்னவுடன் முத்துவுக்கு இன்னும் சந்தேகம் அதிகமானது.

நேற்று எபிசோட்:
சிந்தாமணிக்கு யார் இந்த ஐடியாவை சொல்லி இருப்பார்? மீனா பணம் எடுத்துக் கொண்டு வரும் விஷயத்தை யார் சொன்னார்? என்பதை பற்றி தீவிரமாக முத்து யோசித்தார். இன்னொரு பக்கம் சீதா, அருணுக்கு போன் செய்து மீனாவிற்கு நடந்ததை பற்றி சொல்லி ரொம்ப வருத்தப்பட்டார். அதற்கு பின் வீட்டில் முத்து, மீனா, சுருதி, ரவி ஆகிய நான்கு பேருமே ஜாலியாக பூவை போட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். இதை பார்த்த ரோகினி ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து, செல்வம் இருவருமே பார்வதி வீட்டிற்கு சென்று மீனா பணம் காணாமல் போன விஷயம் தொடர்பாக பேசுகிறார்கள். பார்வதி ஆரம்பத்தில் எதுவுமே தெரியாதது போல் அமைதியாக இருக்கிறார். பின் முத்து அழுது டிராமா செய்கிறார். உடனே பார்வதி, இது சிந்தாமணி வேலையாக தான் இருக்கும் என்று உலறிவிடுகிறார். பின் முத்து, நீங்கள் சிந்தாமணியை இங்கு வரவைத்து கொஞ்ச நேரம் பார்த்துக் கொள்ளுங்கள். நாங்கள் அவருடைய வீட்டில் போய் பணத்தை எடுத்து விடுகிறோம் என்று சொன்னவுடன் பார்வதியும் ஒத்துக் கொள்கிறார்.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் மீனா, அருணின் அம்மாவை தன்னுடைய வண்டியில் ஏற்றிக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு வருகிறார். அங்கு சீதா, அருண் அம்மாவிற்காக காத்துக் கொண்டிருக்கிறார். அதை பார்த்தவுடன் மீனாவிற்கு சந்தேகம் வந்து விசாரிக்கிறார். உடனே சீதா, நான் காதலிக்கும் நபருடைய அம்மா இவங்கதான் என்று சொன்னவுடன் மீனா அமைதியாகி விடுகிறார். கடைசியில் வீட்டில் முத்து, மீனா, ரவி, சுருதி, செல்வம் எல்லோருமே சிந்தாமணி வீட்டில் நகையை எடுப்பதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது முத்து, வருமானவரி துறை அதிகாரிகள் போல் நாடகம் செய்துதான் இந்த வேலையை செய்யணும் என்று சொன்னவுடன் எல்லோரும் ஒத்துக் கொள்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.






