விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி ரொம்ப எமோஷனலாக மனோஜிடம் பேசி இருந்தார். இருந்தாலுமே, மனோஜ் தன் அம்மா மீது இருந்த பயத்தில் ரோகினி இடம் சரியாக பேசவே இல்லை. இன்னொரு பக்கம் மீனா, முத்து வரவில்லை என்று வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அப்போது அண்ணாமலை, முத்துவிற்கு ஃபோன் செய்து பேசு என்று அறிவுரை செய்தார். முத்து சவாரிக்கு போவதால் வர முடியாது என்று சொல்லிவிட்டார். இன்னொரு பக்கம் சுருதி ரெஸ்டாரண்டில் நடந்ததை நினைத்து ரவியிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது போன் செய்த நீத்து, ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்டார். இதை கேட்டவுடன் ரவிக்கு எதுவும் பேச முடியவில்லை. பின் சுருதி, ரவி இடையே இருந்த சண்டையும் நார்மல் ஆகிவிட்டது. மறுநாள் காலையில் ரோகினி, மனோஜ்காக கஞ்சி செய்து கொண்டிருந்தார். அதை பார்த்து விஜயா, எதற்கு என்று கேட்க, மனோஜ்க்கு உடம்பு சரியில்லை என்று சொன்னார். பின் மனோஜை பார்த்து விஜயா பேசி இருந்தார். அப்போது மனோஜ், ரோகினி இடம் பேசாததால் தான் எனக்கு காய்ச்சல் வந்திருக்குமோ? என்று சொன்னார். உடனே கோபப்பட்ட விஜயா, மனோஜை திட்டி இருந்தார். இதையெல்லாம் கேட்டு ரோகிணி வருத்தப்பட்டார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் தனக்கு அடிப்பட்டதை பற்றி மீனா வீட்டில் உள்ள எல்லோரிடமும் சென்றார். ஆனால், விஜயா கிண்டல் கேலி தான் செய்தார். அப்போது மீனா, ஆர்டர் போனது பற்றி கூட கவலை இல்லை. சீதா கஷ்டப்பட்டு கடன் வாங்கியெல்லாம் பணத்தை எனக்கு ரெடி பண்ணி கொடுத்தார். அந்த பணம் பறிபோனது நினைத்தால் தான் ரொம்ப வருத்தமாக இருக்கிறது என்று புலம்பி இருந்தார். உடனே அண்ணாமலை, விஜயாவிடம் இருக்கும் நகையை கேட்டார். ஆனால், விஜயா தர முடியாது என்று ரொம்ப கேவலமாக மீனாவை பேசி இருந்தார்.

நேற்று எபிசோட்:
கோபத்தில் மீனா, எனக்கு யாருடைய நகையும் தேவையில்லை. எங்கள் பிரச்சனையை நாங்கள் சமாளித்துக் கொள்கிறோம் என்று சொன்னார். உடனே ரோகினி-மனோஜ் இது தான் சந்தர்ப்பம் என்று முத்து,மீனாவை அவமானப்படுத்தி பேசி இருந்தார்கள். அதற்கு மீனாவும் பதிலடி கொடுத்தார். அதற்குப்பின் மீனாவின் அம்மா, தங்கை, தம்பி எல்லாம் வந்தார்கள். அவர்களை பார்த்தவுடன் விஜயா ரொம்ப ஏளனமாக பேசி இருந்தார். அப்போது முத்து, மீனா ஆர்டர் செய்த மண்டபத்தின் அட்ரசை வாங்கி எடுத்துக்கொண்டு விசாரிக்க சென்றார். பின் வீட்டிற்கு பார்வதி வந்தார். அப்போது அவரிடம் விஜயா, மீனா ஆர்டர் பறிபோனதை பற்றி சொல்லி ரொம்ப சந்தோஷப்பட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பார்வதி, மீனாவின் நிலைமையை பார்த்து வருத்தப்பட்டு ஆறுதல் சொல்லி சொல்கிறார். அதற்குப்பின் விஜயாவிடம் பார்வதி, இது சிந்தாமணி செய்திருக்க வேண்டும். நீ மீனாவை மதிக்கவில்லை என்று தெரிந்து கொண்டுதான் அவள் ரொம்ப எளக்காரமாக மீனாவை நடத்துகிறார் என்று சொல்கிறார். ஆனால், விஜயா அதைப்பற்றி பெரிதாக கண்டு கொள்ளவே இல்லை. மீனாவை தான் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் முத்து, மண்டபத்திற்கு சென்று விசாரிக்கிறார். அப்போது அவர்கள் சிந்தாமணி தான் ஆர்டர் எடுத்தார் என்று சொன்னவுடன் முத்துவுக்கு இன்னும் சந்தேகம் அதிகமானது.

சீரியல் ட்ராக்:
சிந்தாமணிக்கு யார் இந்த ஐடியாவை சொல்லி இருப்பார்? மீனா பணம் எடுத்துக் கொண்டு வரும் விஷயத்தை யார் சொன்னார்? என்பதை பற்றி தீவிரமாக முத்து யோசிக்கிறார். இன்னொரு பக்கம் சீதா, அருணுக்கு போன் செய்து மீனாவிற்கு நடந்ததை பற்றி சொல்லி ரொம்ப வருத்தப்படுகிறார். அதற்கு பின் வீட்டில் முத்து, மீனா, சுருதி, ரவி ஆகிய நான்கு பேருமே ஜாலியாக பூவை போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்த ரோகினி ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






