விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து கார் எதிரியிலேயே குழந்தைகள் பஸ், பெரியவர்கள் என எல்லோருமே வந்து கொண்டிருந்தார்கள். எப்படியோ தடுமாறி தடுமாறி முத்து வந்தார். ஒரு கட்டத்தில் முத்து ஒரு பைக்கின் மீது மோதி வண்டியை நிறுத்தி விட்டார். ஆனால், அந்த வண்டி அருண் உடையது. பின் கோபத்தில் அருண், வேண்டும் என்றே நீ என்னை இடிக்கத்தான் இப்படி செய்தாயோ என்று முத்துவை கைது செய்தார். முத்து எவ்வளவு எடுத்துச் சொல்லியுமே அங்கிருந்த போலீஸ் யாருமே கேட்கவில்லை. இன்னொரு பக்கம் ரோகினி, மனோஜை பார்த்து பேசி இருந்தார். ஆனால் மனோஜ், தன் அம்மாவிற்கு பயந்து பேச தயங்கி இருந்தார். ரோகினி எடுத்து சொல்லியும் மனோஜ் கேட்கவில்லை.

போலீஸ் ஸ்டேஷனில் உள்ள அதிகாரிகள் முத்து உடைய லைசென்சை கேன்சல் செய்ய முடிவெடுத்தார்கள். முத்து எவ்வளவு சொல்லியுமே அங்கு இருக்கும் போலீஸ் கேட்கவில்லை. இதனால் அருண் ரொம்ப சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் ஸ்ருதியின் அம்மா தான் எடுத்த வீடியோவை முத்து குடும்பத்திற்கு அனுப்பி விட்டார். இதை பார்த்து எல்லோருமே ஷாக் ஆகி இருந்தார்கள். வழக்கம் போல் ரோகினி, மனோஜ், விஜயா எல்லோருமே முத்துவை திட்டிக் கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் உண்மை அறிந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த மீனாவிடம் முத்து உண்மையை சொன்னார். இருவருமே போலீஸிடம் பேசி இருந்தார்கள். ஆனால், அவர்கள் எவ்வளவு சொல்லியுமே கேட்கவில்லை. அதனால் முத்து-மீனா கிளம்பி விட்டார்கள்.
சிறகடிக்க ஆசை:
அதற்குப்பின் முத்து காரை எடுத்து வந்த போலீஸ் அதிகாரிக்கு அடிப்பட்டு விட்டது. அப்போது அவர், முத்து சொன்னது உண்மைதான். அந்த காரில் பிரேக் இல்லை. மெக்கானிக்கல் தான் சரி செய்தார் என்று சொன்னார். உடனே அருண், இந்த உண்மையை சொல்ல வேண்டாம். அவன் ரொம்ப திமிர் பிடித்தவன். அவன் ஆறு மாதம் லைசன்ஸ் இல்லாமல் இருக்கட்டும் என்று முத்துவை பழிவாங்க நினைத்தார்.
கடைசியில் வீட்டிற்கு வந்த முத்து,மீனாவை பார்த்து ஸ்ருதியின் அம்மா ரொம்ப மோசமாக பேசி இருந்தார். அதற்கு விஜயாவும் சப்போர்ட் செய்தார். உண்மை என்னவென்று தெரியாமல் ஸ்ருதியின் அம்மா முத்துவையும், அவர் குடும்பத்தையுமே தரைகுறைவாக பேசி இருந்தார். இதனால் மீனா கோபப்பட்டார்.

இன்றைய எபிசோட்:
இன்றைய எபிசோட்டில் கோபத்தில் மீனா, என்ன நடந்தது என்று தெரியாமல் உங்கள் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேச தேவையில்லை. அவருடைய கார் பிரேக் பிடிக்கவில்லை. குழந்தைகள் எதிரே வந்தார்கள் வேறு வழி இல்லாமல் தான் அந்த வண்டியின் மீது அவர் மோதினார். அவர் மீது எந்த தவறும் இல்லை. இதே அவருக்கு அடிபட்டிருந்தால் என்ன ஆவது? என்று பேசுகிறார். இதைக் கேட்டவுடன் மொத்த குடும்பமே ஷாக் ஆகிறது. ஆனாலும் ஸ்ருதியின் அம்மா, மனோஜ் எல்லாமே கிண்டலாக பேசுகிறார்கள். உடனே கோபத்தில் அண்ணாமலை, மனோஜை திட்டி விடுகிறார்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் மீனா, நீங்கள் ஸ்ருதி- ரவியை இங்கிருந்து பிரித்துக் கூட்டிட்டு போக தான் இப்படி எல்லாம் செய்கிறீர்கள் என்று கேட்டவுடன் விஜயா கோபப்படுகிறார். அதற்குப்பின் சுருதி, நீங்கள் தயவு செய்து எங்கள் வீட்டு விசயத்தில் தலையிடாதீர்கள், இங்கிருந்து கிளம்புங்கள் என்று தன்னுடைய அம்மாவை திட்டி அனுப்பி விடுகிறார். வீட்டில் உள்ளவர்களுமே முத்துவிற்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைக்கிறார்கள். அதற்குப்பின் முத்து-மீனா இருவருமே தங்களுக்கு தெரிந்த போலீசை சந்தித்து நடந்ததை சொல்கிறார்கள். அவரும் போலீஸ் ஸ்டேஷனில் விசாரிக்க, முத்து வேண்டும் என்று தான் வண்டியை மோதினார் என்று சொல்கிறார்கள். பின் அந்த போலீஸ், நான் தீவிரமாக விசாரித்து உங்களுக்கு உண்மையை சொல்கிறேன் என்று சொல்கிறார்.
https://www.youtube.com/watch?v=iL2sbTJVJ7g
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் போலீஸ் ஸ்டேஷனில் மீனா, என் கணவர் மீது எந்த தவறும் இல்லை. தயவுசெய்து உண்மையை சொல்லுங்கள் என்று வண்டியை ஓட்டி வந்த போலீஸ் அதிகாரியிடம் கெஞ்சுகிறார். இன்னொரு பக்கம் முத்து தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு அருண் வீட்டின் முன்பு கல் எடுத்து அடித்து தகராறு செய்தார். அப்போது வெளியே வந்த அருண், இதையெல்லாம் ரெக்கார்ட் செய்து உயரதிகாரியிடம் கொடுக்கிறார். பின் உயரதிகாரி, நீ செய்தது ரொம்ப தவறு. இவனை கைது செய்யுங்கள் என்று சொல்கிறார். இனி அடுத்து என்ன? என்ற விறுவிறுப்பில் சீரியல் செல்கிறது.






