விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் பார்வதி-சிவன் பேசி கொண்டு இருப்பதை பார்த்த விஜயா, யோகா கிளாஸ் இல்லை என்று சிவனை வெளியே அனுப்பி விட்டார். அதற்குப்பின் விஜயா, ரோகிணி சொன்ன புது ஆர்டரை பற்றி பார்வதியிடம் சொல்லி சந்தோஷப்பட்டார். அந்த சமயம் வந்த சிந்தாமணியிடமும் மீனாவுக்கு கிடைத்த புது ஆடர் பற்றி சொல்லுவதால் சிந்தாமணி ரொம்பவே பொறாமைப்பட்டார். பின் விஜயா, ரோகினியை தன் மருமகளாக ஏற்றுக் கொண்டேன். இனி மனோஜ்-ரோகினி பிரிந்து வாழ தேவையில்லை. அவர்கள் சந்தோஷமாக சேர்ந்து வாழட்டும் என்று முடிவெடுத்தார்.

பின் சிந்தாமணியை விட்டு மனோஜ் ரூமில் அலங்காரம் செய்து வைக்க சொன்னார் விஜயா. பின் வீட்டில் சிந்தாமணி- பார்வதி இருவருமே அலங்காரம் செய்து முடித்து விட்டார்கள். அப்போது வீட்டிற்கு வந்த முத்து, ரவி, சுருதி யாருக்குமே ஒன்றுமே புரியவில்லை. விஜயா, ரோகினி- மனோஜ் இருவரும் சேர்ந்து வாழ ஒத்துக் கொண்டேன் என்றெல்லாம் சொன்னார். இதைக் கேட்டு மனோஜ் -ரோகினி சந்தோஷப்பட்டார்கள். அதற்குப்பின் ரோகினி- மனோஜ் இருவருமே சந்தோசமாக தங்களுடைய ரூமுக்கு சென்றார்கள். அங்கு மனோஜ், பாட்டு பாடி ரோகிணியை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார்.
சிறகடிக்க ஆசை:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மனோஜ் பாட்டு பாடியதால் கடுப்பான சுருதி கதவைத் தட்டி வாயை மூடி அமைதியாக தூங்குங்கள் என்று திட்டி விடுகிறார். அதற்குப்பின் க்ரிஷ், ரோகினிக்கு போன் செய்து வீட்டிற்கு வாருங்கள் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் நீத்து, ஹோட்டலில் வியாபாரம் குறைகிறது. அதற்கு காரணம் நீங்கள் உங்கள் மனைவி ஹோட்டலை பிரபலப்படுத்த இங்கு சரியாக வேலை செய்யவில்லையா? ஏன் ஒழுங்காக சமைக்க வில்லை? என்றெல்லாம் வேண்டுமென்று வம்பு இழுக்கிறார். இதனால் ரவி கோபப்பட்டு அங்கிருந்து செல்கிறார். பின் நீத்து, ஸ்ருதி ஹோட்டலை காலி செய்ய திட்டம் போடுகிறார்.

இன்றைய எபிசோட்:
அதற்குப்பின் முத்து, புதிதாக கல்யாணமான வித்யா- முருகனுக்கு விருந்து கொடுக்க வீட்டிற்கு அழைப்பதாக சொல்கிறார். இதை கேட்டு வழக்கம் போல விஜயா தாண்டவம் ஆடுகிறார். இதனால் முத்து, ஸ்ருதி ஹோட்டலில் விருந்து வைக்க ஏற்பாடு செய்கிறார். இதை அறிந்த ரோகினி, வித்யாவிற்கு போன் செய்து
என்னைப் பற்றி எதுவும் சொல்லாதே என்கிறார். அதற்கு வித்யா, எனக்கு வேற வேலை இல்லையா? நான் ஜாலியாக இருக்க போகிறேன். உன்னை பற்றி ஏன் பேசணும் என்று நக்கலாக பதில் சொல்லி போனை வைத்து விடுகிறார்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் கிரிசை சந்திக்க ரோகினி சென்றிருக்கிறார். அப்போது கிரிஸ், ஸ்கூலில் எஸ்ஏ எழுதி வர சொல்லி இருக்கிறார்கள். ஆனால், என்னால் எழுத முடியவில்லை. அப்பாவை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. என்னுடைய அப்பா மனோஜ் தான் என்று எழுதிக் கொள்ளட்டுமா? என்கிறார். இதைக் கேட்டு ரோகிணி ரொம்பவே எமோஷனல் ஆகிறார். அதற்குப்பின் லட்சுமி, உன்னுடைய அப்பாவின் நினைவு நாள் வருகிறது. ஊருக்கு போய் திதி கொடுத்துவிட்டு வரலாம் என்று சொல்கிறார். அதற்கு ரோகிணி, தீபாவளிக்கு நாங்கள் பாட்டி ஊருக்கு போகிறோம். அதனால் வர முடியாது என்று சொல்கிறார். உடனே லட்சுமி, அந்த ஊருக்கு பக்கத்தில் தான் அப்பாவுடைய சொந்த ஊர் இருக்கிறது என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






