ரோகினியை சந்தேகப்படும் விஜயா, போட்டிக்கு தயாரான மூன்று ஜோடிகள்- விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

0
330
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் முத்து-மீனா இருவரும் கிரிஷை தத்து எடுக்க வேண்டும் என்று ஒரு கோவிலில் சீட்டு குலுக்கி போட, அதில் வேண்டாம் என்று வருவதால் மீனா வருத்தப்பட்டார். பின் விஜயாவின் நடன வகுப்பிற்கு புதிய காதல் ஜோடி சேர்ந்து இருந்தார்கள். இவர்கள் சந்திப்பதற்கு விஜயா வகுப்பை பயன்படுத்திக் கொள்கிறார்கள். பின் வீட்டில் முத்து- மீனா, கிரிஷை குறித்து அனைவரிடமும் சொல்ல, விஜயா மற்றும் மனோஜ் கேவலமாக கிரிஷ் அம்மாவை பேசி இருந்தார்கள். இதையெல்லாம் ரோகிணி வெளியே நின்று கேட்டு வருத்தப்பட்டு இருந்தார்.

-விளம்பரம்-

கடைசியில் முத்து, கிரிஷை தத்து எடுப்பேன் என்று உறுதியாக நிற்கிறார். ரோகினி, தனது அம்மாவிடம் நடந்த உண்மையையெல்லாம் சொல்லி முத்து போன் செய்தால் எடுக்க வேண்டாம் என்று சொல்லி விடுகிறார். இன்னொரு பக்கம் சீதா, டிகிரி பாஸ் பண்ணி விட்டேன் என்று முத்து-மீனாவிடம் சொல்லி சந்தோசப்படுகிறார். பின் கடைக்கு பேங்கில் வந்த ஒருவர், உங்களுக்கு 10 லட்சம் ரூபாய் கிரெடிட் கார்டு உங்களுக்கு வந்து இருக்கிறது என்ற சொன்னவுடன் மனோஜ் சந்தோஷத்தில் ரோகினி பேச்சை கூட கேட்காமல் கையெழுத்து போட்டு கொடுக்கிறார். மேலும், ரோகினி தன்னுடைய தோழியுடன் ஹாஸ்பிடலுக்கு சென்று தனக்கு குழந்தை பிறக்குமா? என்று மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு இருந்தார்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

அந்த சமயம் பார்த்து சீதா வேலைக்காக அதே ஹாஸ்பிடலில் வந்திருந்தார். பின் வேலை கிடைத்த சந்தோஷத்தை மீனாவிடம் போன் செய்து சொல்லும்போது தான் ரோகினியை மருத்துவமனையில் பார்த்த விஷயத்தை சீதா சொல்லி இருந்தார். இதனால் ரோகினி கர்ப்பமாக இருக்கிறார் என்று நினைத்து கொண்டு மீனா ஸ்வீட் செய்து எல்லோருக்கும் கொடுக்க விஜயா, மனோஜ் கிண்டலடித்து பேசி இருந்தார்கள். அதற்கு மீனா, ரோகினி கர்ப்பம் என்று சொல்ல, வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். ஆனால், ரோகினி அதிர்ச்சியாகி, நான் கர்ப்பமாகவே இல்லை.

சீரியல் கதை:

யாரைக் கேட்டு நீங்களே இந்த மாதிரி முடிவெடுத்து சொன்னீர்கள்? உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என்று கோபமாக பேசி இருந்தார். உடனே விஜயா வழக்கம்போல் மீனாவை தான் திட்டினார். பின் ரோகினி, ரூமில் நாம் இருவரும் ஹாஸ்பிடல் போய் ஒரு முறை செக் பண்ணிக்கலாம் என்று கேட்க, மனோஜ் நான் சரியாகத்தான் இருக்கிறேன் என்று சொன்னார். உடனே ரோகினி, நீயும் ஜீவாவும் லிவிங்கில் இருந்ததால் ஜீவா கர்ப்பம் ஆகலையா? கேட்க, மனோஜ் கோபத்தில் நீ கல்யாணம் பண்ணி கர்ப்பம் ஆனாயா? என்று கேட்க இருவருமே சண்டை போடுகிறார்கள்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

பின் இந்த விவகாரம் விஜயாவிற்கு தெரிந்து ரோகினியை பயங்கரமாக திட்டுகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில், ஜீவாவும் இவரும் காதலித்தது உண்மை தானே என்று ரோகினி கேட்க விஜயா அமைதியாகிவிட்டார். பின் வெளியில் வந்து உன்னைப் பற்றி ரோகினிக்கு தெரியும். அவளைப் பற்றி உனக்கு என்ன முழுசாக தெரியுமா? என்று மனோஜ்க்கு சந்தேகம் வரும் படி பேசி விடுகிறார். அடுத்த நாள் காலையில் முத்து புதிதாக கட்டில் ஒன்று வாங்கிய வருகிறார். இதை பார்த்து மனோஜ், ரோகினி, விஜயா மூவருமே சண்டை போடுகிறார்கள். இருந்தாலும், முத்து கட்டிலை ரெடி பண்ணி போடுகிறார்.

சீரியல் ட்ராக்:

அதை பார்த்து ஸ்ருதி, கட்டில் சூப்பராக இருக்கிறது. இந்த மாதிரி குவாலிட்டி கிடைக்காது என்று கட்டிளைப் புகழ்ந்து தள்ளுகிறார். அதன் பின் ரவி, தான் வேலை செய்யும் இடத்தில் திருமணம் ஆன ஜோடிகளுக்கு போட்டி நடப்பதாக சொல்கிறார். வழக்கம்போல் மனோஜ், தாங்கள் தான் ஜெயிப்போம் என்று திமிராக பேசுகிறார். முதலில் முத்து வேண்டாம் என்று சொன்னாலும் 1 லட்ச ரூபாய் பரிசு கிடைக்கப்போகிறது என்று சொன்னவுடன் கலந்து கொள்ள நினைக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement