விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனாவை வீட்டை விட்டு வெளியே அனுப்ப சொல்லி விஜயா பிரச்சனை செய்து கொண்டிருந்தார். அண்ணாமலை, முத்து எவ்வளவு சொல்லியுமே விஜயா கேட்கவில்லை. மீனாவை வெளியே போக சொன்னார். இதனால் உடைந்து போன மீனா ரொம்பவே கதறி அழுதார். அண்ணாமலைக்கு ஆபத்து வந்து விடுமோ என்றும் பயப்பட்டார். ஒருவழியாக அண்ணாமலை, விஜயாவை திட்டி உள்ளே அனுப்பி விட்டார். முத்து-மீனாவிற்கு ஆறுதல் சொன்னார். அதற்குப்பின் விஜயா, சிந்தாமணிக்கு போன் செய்து நடந்ததை எல்லாம் சொன்னார்.

சிந்தாமணி, இதுதான் எனக்கு வேண்டும். அந்த மீனாவை ஒழித்துக் கட்டுகிறேன் என்று மனதுக்குள் சொல்லி சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் மனோஜ், இந்த சாமியாடி என்னுடைய கடைக்கும் வந்து குறி சொன்னார் ரோகிணி தான் மீண்டும் இந்த வீட்டிற்கு வருவார் என்றார். இதைக் கேட்டு விஜயாவிற்கு கோபம் வந்தது. அது நடக்கக்கூடாது. நான் உனக்கு சீக்கிரமாகவே நல்ல பெண்ணை பார்க்கிறேன் என்றார். அதற்குப்பின் மனோஜ்க்கு போன் செய்த ரோகினி, ரொம்ப அன்பாக பேசி இருந்தார். இதனால் கோபப்பட்டு மனோஜ் சண்டை போட்டார். அப்போ ரோகிணி, நான் உன்னை விட்டு மொத்தமாக பிரிந்து விடுகிறேன். அதற்காக நான் சொல்லும் விஷயத்தை நீ செய்யணும். ஆனால், அந்த விஷயத்தை உன் அம்மாவிடம் கூட சொல்ல கூடாது என்றார். அதற்கு மனோஜ் ஒத்துக்கொண்டார்.
சிறகடிக்க ஆசை:
சிந்தாமணி, விஜயாவை பயமுறுத்துவதற்கு கோயிலுக்கு அழைத்து செல்கிறார். அங்கு சிந்தாமணி வைத்த சாமியாரை சுற்றி பல பேர் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். எல்லோருமே இந்த சாமியார் சொல்வது உண்மையாக நடக்கிறது. சக்தி வாய்ந்த சாமியார் என்றெல்லாம் பில்டப் செய்கிறார்கள். இதனால் விஜயா நம்புகிறார். பின் விஜயாவை பார்த்த சாமியார், நான் சொன்னது தான் நடக்கும். ரெண்டாவது மருமகளை வீட்டை விட்டு அனுப்பவில்லை என்றால் உன் கணவர் உயிருக்கு ஆபத்து என்று இன்னும் பயமுறுத்துகிறார். இதனால் விஜயா பயந்து போய் பதறுகிறார்.

சீரியல் ட்ராக்:
சிந்தாமணி உள்ளுக்குள் சந்தோஷப்படுகிறார். பின் விஜயா போன உடன் அந்த சாமியாருக்கு பணத்தை கொடுத்து அனுப்புகிறார். இன்னொரு பக்கம் மீனா தன் வீட்டில் நடந்ததை அம்மாவிடம் சொல்லி புலம்புகிறார். அப்போது மீனாவின் அம்மா ஒரு ஜோசியரை வீட்டிற்கு வரவைத்து மீனாவின் ஜாதகத்தை பார்க்க சொல்கிறார். அவர், ராசி எல்லாம் எந்த உயிருக்கும் ஆபத்து வராது. உங்கள் வீட்டில் ஒரு பெரிய கெட்டது நடக்கப்போகிறது. அதற்கு உன் மாமியார் சுமங்கலிகளை அழைத்து ஒரு பூஜை செய்தால் போதும் மற்றபடி வேற எந்த பிரச்சினையும் நடக்காது என்று சொல்கிறார். மீனா, இதை நான் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பார்வதி ஆன்ட்டி மூலமாக சொல்ல வைக்கிறேன் என்கிறார். இன்னொரு பக்கம் விஜயா, பார்வதியை சந்திக்க செல்கிறார்.
https://www.youtube.com/watch?v=BvDqKer4Lzg
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ரோகிணி இருக்கும் இடத்திற்கு போன மனோஜ்,
ஒரு பேப்பரில் விவாகரத்து கொடுக்க சம்மதம் சொல்லி நோட்டீசை காண்பிக்கிறார். உடனே ரோகிணி, போனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்வதாக சொல்லி மிரட்டுகிறார். மனோஜ் பயந்து போய் முடியாது என்கிறார். அப்போது ரோகினி, விவாகரத்து வேண்டாம் என்று சொல்லி இந்த டாக்குமெண்டில் கையெழுத்து போடு, நான் தற்கொலை செய்ய மாட்டேன் என்கிறார்.






