விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா வீட்டிற்கு மீண்டும் வந்தார். இதை பார்த்து வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். ஆனால், விஜயா கவலைப்பட்டார்கள். மீனா மீண்டும் வந்ததை நினைத்து ரோகினிக்கு கதி கலங்குகிறது. பின் மீனா வந்தவுடனே விஜயா சமைக்க சொன்னார். மீனாவுமே அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ரோகினியை முறைத்து விட்டு சமைக்கப் போனார். அதற்குப்பின் மனோஜ் பிஏ ஜீவா, புது ஆர்டரை பற்றி சொன்னார். அதைக் கேட்டு மனோஜ் ரொம்பவே சந்தோஷப்பட்டார்.

தங்களுடைய புது ஐடியாவிற்கு மாடலாக மனோஜ் நடித்தார். மனோஜுடன் சேர்ந்து ரோகினியுமே தங்களுடைய புது காம்போ ஆபரை பற்றி சொன்னார். அதை வீடியோவாக ஜீவா எடுத்துக் கொண்டார். அந்த சமயம் பார்த்து மேனேஜர், ரோகினிக்கு போன் செய்து பணம் கேட்டு மிரட்டினார். ரோகினியுமே என்ன செய்வது என்று புரியாமல் பயத்தில் போனை வைத்து விட்டார். இன்னொரு பக்கம் ஐயப்ப மலையில் இருந்து முத்து வந்து விடுகிறார். வழக்கம் போல விஜயா, முத்துவை கிண்டலடித்துக் கொண்டிருந்தார். பின் மீனாவிடமும் சந்தோஷமாக முத்து பேசி இருந்தார். அதற்குப்பின் மீனா தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்றிருந்தார்.
சிறகடிக்க ஆசை:
அங்கு வந்த சீதா, தன்னுடைய ஆபிஸில் வேலை செய்யும் ஒருவர் பணத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்து விட்டதை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அதற்கு மீனாவின் அம்மா, தவறு செய்பவரை விட அதை மறைக்க துணையாக இருப்பவர் செய்வதும் தவறு தான் என்றெல்லாம் சொல்வதால் மீனாவிற்கு குற்ற உணர்ச்சியாக இருக்கிறது. பின் மீனா, ரோகிணி வீட்டிற்கு போனார். அங்கு லட்சுமி, ரோகினி செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டார். ஆனால் மீனா, லட்சுமியை திட்டிவிட்டு ரோகிணி இடம் தனியாக பேச வேண்டுமென்றார். அந்த சமயம் பார்த்து வித்யா வீட்டிற்கு வந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வித்யா, உண்மை தெரியாமல் ரோகிணியை காப்பாற்றுவதற்காக ஏதேதோ பொய்களை சொல்லி சமாளிக்கிறார். ஒரு கட்டத்தில் கோவப்பட்ட மீனா, ரோகிணி தான் கிரிஷ் உடைய அம்மா என்பது எனக்கு தெரியும் என்றால் இதைக் கேட்டு வித்யா ஷாக் ஆகிறார். அதற்கு பின் நடந்தது எல்லாம் மகேஸ்வரி சொல்கிறார். பின் வித்யா, மீனாவிடம் மன்னிப்பு கேட்கிறார். அதற்குப்பின் மீனா, எப்போதுதான் உண்மை சொல்லப் போகிறாய்? என்று கேட்கிறார். அதற்கு ரோகினி, கிரிஷை மனோஜ் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு பிறகு நான் சொல்கிறேன் என்கிறார். அதற்கு மீனா, தனித்தனியாக இருந்தால் எப்படி ஏற்றுக்கொள்வார்.

சீரியல் ட்ராக்:
கற்பனையில் உருவாக்கிய அம்மா உயிருடன் இருந்தால் என்ன, செத்தால் என்ன என்று சொல்கிறார்.. உடனே ரோகினி, ஐடியா நன்றாக இருக்கிறது. நான் கிரிஷ் உடைய அம்மா இறந்து விட்டார்ன்னு சொல்கிறேன் என்கிறார். மீனா, ரோகிணியை பார்த்து முறைக்கிறார். இன்னொரு பக்கம் சுருதியை வெறுப்பேற்றுவதற்காக நீத்து ரவியை அழைத்துக் கொண்டு சுருதி ரெஸ்டாரண்டுக்கு போகிறார்கள். அப்போது நீத்து, ரவியை கட்டிப்பிடித்து உங்களால்தான் காம்பெடிஷனில் செலக்ட் ஆகி இருக்கிறேன். ரொம்ப நன்றி என்றெல்லாம் சுருதியை வெறுப்பேற்றும்படி பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால், ரவிக்கு ஒன்றுமே புரியவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது.






