விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் கிரிஷ் பிறந்த நாளுக்காக, கேக் வெட்டி கொண்டாட ரோகிணி எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார். அந்த சமயம் பார்த்து முத்து-மீனா இருவரும் கிரிஷ் வீட்டிற்கு போனார்கள். உடனே ரோகினி யாருக்கும் தெரியாமல் ஒளிந்து கொண்டார். புது துணியை கொடுத்து கிரிஷ்க்கு வாழ்த்துக்கள் சொல்லி அவரின் பாட்டியிடம் கிரிஷை பற்றி முத்து விசாரித்தார். ஆரம்பத்தில் என்ன சொல்வது என்று புரியாமல் இருந்த கிரிஷ் பாட்டி, இறுதியில் தனது மகள் பற்றிய உண்மையை முத்துவிடம் சொல்லிவிட்டார்.

ரோகிணி தான் தனது மகள் என்று அவர் சொல்லவில்லை. அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த முத்து- மீனா, கிரிஷ் அம்மா செய்தது தவறு என்று கூறிவிட்டு பிறந்தநாள் கேக்கை வெட்டி கொண்டாடி மகிழ்ந்து இருந்தார்கள். அதற்குப் பின் ரோகினி தனது அம்மாவிடம் கோபமாக, முத்து- மீனாவிடம் போனில் கூட பேசக்கூடாது. அவர்கள் வந்தால் கூட முகம் கொடுத்து பேச வேண்டாம் என்று எச்சரித்து இருந்தார். பின் முத்து-மினா வீட்டிற்கு வரும் வழியில், கிரிஷை தத்து எடுக்க வேண்டும் என்று ஒரு கோவிலில் சீட்டு குலுக்கி போட, வேண்டாம் என்று வருவதால் மீனா வருத்தப்பட்டார்.
சிறகடிக்க ஆசை:
இன்னொரு பக்கம் விஜயாவின் நடன வகுப்பிற்கு ஆறு பேர் சேர்ந்ததால் விஜயா ரொம்ப சந்தோஷமாக இருந்தார். அப்போது புதிய காதல் ஜோடி சேர்ந்து, சந்திப்பதற்கு இடமாக விஜயா வகுப்பை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் முத்து- மீனா, கிரிஷை குறித்து அனைவரிடமும் சொல்கிறார்கள். ஆனால், கிரிஷ் அம்மாவை விஜயா மற்றும் மனோஜ் கேவலமாக பேசி இருந்தார்கள். இதையெல்லாம் ரோகிணி வெளியே நின்று கொண்டு கேட்டு வருத்தப்பட்டு கொண்டிருந்தார்.

சீரியல் கதை:
மேலும், கிரிஷை பற்றி சொன்னவுடன் விஜயா, கண்டவர்கள் எல்லாம் வந்து இருக்க இது என்ன சத்திரமா? என்று கோபப்பட முத்து, கிரிஷை தத்து எடுப்பேன் என்று உறுதியாக நிற்கிறார். பின் ரோகினி, தனது அம்மாவிடம் நடந்த உண்மையையெல்லாம் சொல்லி முத்து போன் செய்தால் எடுக்க வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். கடைசியில், இந்தப் பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் முதலில் குழந்தை பெத்துக்க வேண்டும் என்று தனது தோழியுடன் சேர்ந்து ரோகிணி பிளான் போட்டார். இன்னொரு பக்கம் சீதா, டிகிரி பாஸ் பண்ணி விட்டேன் என்று முத்து-மீனாவிடம் சொல்லி சந்தோசப்படுகிறார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோடில், இதை மீனா- முத்து வீட்டில் சொல்லி சந்தோஷப்படுகிறார்கள். ஆனால். மனோஜ், விஜயா கிண்டல் கேலியாக பேசுகிறார்கள். இன்னொரு பக்கம் சீதா பாஸ் ஆனதற்கு ஸ்வீட் கொடுத்து கொண்டாடி இருந்தார்கள். அந்த சமயம் அங்கு வந்த மீனாவை பார்த்து சீதா கட்டிப்பிடித்து அழ, எல்லோரும் சந்தோசமாக பேசி இருந்தார்கள். இன்னொரு பக்கம் கடைக்கு பேங்கில் வந்த ஒருவர், உங்களுக்கு 10 லட்சம் ரூபாய் கிரெடிட் கார்டு வந்து இருக்கிறது என்ற சொன்னவுடன் மனோஜ் சந்தோஷத்தில் இருக்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடில், மனோஜ் ரோகினி பேச்சை கூட கேட்காமல் கையெழுத்து போட்டு கொடுக்கிறார்.

இன்றைய எபிசோட்:
பின் ரோகினி தன்னுடைய தோழியுடன் ஹாஸ்பிடலுக்கு தனக்கு குழந்தை பிறக்குமா? என்று மருத்துவரிடம் ஆலோசனை கேட்க சென்றிருக்கிறார். அந்த சமயம் அங்கு மீனா மாற்று சீதா வேலைக்காக வந்திருக்கிறார்கள். டாக்டர் ரோகினியை பரிசோதித்த பின் அறிவுரை கூறி இருக்கிறார். அதற்குப் பின்பு மீனா, பெரிய ஆர்டர் கிடைத்ததால் கிளப்பி விடுகிறார். பின் வேலை கிடைத்த சந்தோஷத்தை மீனாவிடம் போன் செய்து சொல்லும்போது தான் ரோகினியை மருத்துவனமனையில் பார்த்த விஷயத்தை சீதா சொல்கிறார். அதை மீனா பெரிதாக கண்டுகொள்ளவில்லை. பின் வீட்டில் ரோகினி கர்ப்பமாக இருக்கிறார் என்று நினைத்து கொண்டு மீனா ஸ்வீட் செய்து எல்லோருக்கும் கொடுக்க விஜயா, மனோஜ் கிண்டலடித்து பேசுகிறார்கள். அதற்கு மீனா , நம்ம வீட்டுக்கு குழந்தை வர போகுது என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.






