விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் பணம் கொடுக்க முடியாததால் முத்து கோபப்பட்டு மனோஜை அடிக்க போனார். பின் ரவி அவரை தடுத்து அங்கிருந்து அழைத்து வந்து விட்டார். அதற்குப்பின் மீனா, சத்யாவிடம் தன்னுடைய வீட்டு விவகாரத்தை பற்றி சொல்லி புலம்பி கொண்டிருந்தார். இதை ரேகாவின் அப்பா கவனித்து விட்டார். பின் சத்யா, தன்னுடைய அக்கா பணம் கேட்கும் விஷயத்தைப் பற்றி ரேகாவின் அப்பாவிடம் சொல்லி உதவி கேட்டார். ரேகா அப்பா, என்னால் முடிந்த உதவி செய்கிறேன் என்றார்.

முத்து, தன்னுடைய 3 வண்டிகளையும் விற்பதற்கு ஏற்பாடு செய்தார். வண்டியை வாங்குபவர், மொத்த வண்டிக்குமே ஏழு லட்சம் தான் கொடுக்க முடியும் என்றார். மீதி பணத்துக்கு என்ன செய்வது என்று புரியாமல் முத்து தவித்தார். இன்னொரு பக்கம் மீனா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார். மீனாவுடன் வேலை செய்பவர்கள் எல்லோருமே வேண்டாம் என்று தடுத்தார்கள். ஆனால், மீனா கேட்கவில்லை.
சிறகடிக்க ஆசை:
அந்த சமயம் பார்த்து முத்து அந்த இடத்திற்கு வந்து விட்டார். மீனாவை திட்டி ராஜினாமா செய்ய வேண்டாம் என்றார். ஸ்வேதாவும் மக்களின் நிலைமையை எடுத்துச் சொல்லி புரிய வைத்தார். அதனால் மீனா தன்னுடைய ராஜினாமாயும் செய்ய முடிவிலிருந்து பின்வாங்கிக் கொண்டார். அதற்குப்பின் பார்வதி வீட்டிற்கு சென்ற விஜயா, இப்ப இருக்கும் பெண்கள் எல்லாம் ரொம்ப உஷாராக இருந்தார்கள். நானும் வேலைக்கு போகலாம் என்று இருக்கிறேன். யாரை நம்பியும் நான் இனி இருக்க மாட்டேன் என்றார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் முத்து காரில் வந்த அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மனோஜ் கடைக்கு சென்று விடுகிறார். முத்துவும் அந்த பெண்ணின் அம்மாவும் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். மனோஜ் கடைக்கு சென்று அந்த பெண், எல்லா பொருள்களையும் வாங்குவதாக சொல்லி போட வைத்து ஜூஸ் குடித்துவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார். மனோஜ் அந்த பெண்ணை காணவில்லை என்று தேடிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் ஒரு வழியாக முத்து அந்த பெண்ணை கண்டுபிடித்து அவருடைய அம்மாவிடம் ஒப்படைத்து விடுகிறார். ரோகினி, மனோஜை பார்க்க வருகிறார். ரோகினி, உன் அம்மா என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
மனோஜ், அதெல்லாம் நடக்காத ஒன்று என்று சொல்கிறார். இதனால் மனோஜ்- ரோகினி இடையே வாக்குவாதம் நடக்கிறது. இன்னொரு பக்கம் வேலை கேட்டு விஜயா ஒரு இடத்திற்கு சென்று இருக்கிறார். ஆனால், அங்கு வகுப்பு இலவசமாக தான் சொல்லித் தர வேண்டும் என்று அறியாமல் விஜயா இலட்சக்கணக்கில் சம்பளம் கேட்கிறார். அப்போது அந்த இடத்திற்கு அசோசியேஷன் மெம்பராக மீனா வருகிறார். அவரை பார்த்தவுடன் விஜயா பயங்கரமாக கோபப்படுகிறார். இலவசமாக நடனம் சொல்லித் தரும் விஷயத்தை மீனா சொன்னவுடன் விஜயா சண்டை போட்டுவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.
பின் ஸ்ருதி-ரவி இருவரும் ஓட்டலில் நன்றாக வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அதை கெடுப்பதற்கும் ரவியை தன்னுடன் தன்னுடன் அழைத்து செல்வதற்கும் நீத்து திட்டம் போடுகிறார்.






