விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் நீதிபதி, மனோஜ் வழக்கை இன்னொரு தேதிக்கு தள்ளி வைத்து விட்டார். வீட்டிற்கு வந்த விஜயா, மனோஜை திட்டி அடித்தார். முத்து-மீனா, ரோகிணியின் சாமர்த்தியத்தை புரிந்துகொண்டு அவருடைய வாயிலே உண்மை வரவைக்க மனோஜை போன் செய்து ரெக்கார்ட் பண்ண சொன்னார்கள். இதை அறிந்த ரோகினி, மீண்டும் திருப்பி திருப்பி பேசி மனோஜை குழப்ப வைத்தார். கோபத்தில் விஜயாவும் கத்தினார். அதற்குப்பின் ரோகினி, தனக்கு பண தேவை என்பதால் சிந்தாமணியிடம் உதவி கேட்டார்.

சிந்தாமணி, என்னிடம் பணம் இல்லை. உன்னிடம் ஏதாவது பொருள் இருந்தால் கொடு. எனக்கு தெரிந்த பைனான்சியரிடம் சொல்கிறேன் என்று சாமர்த்தியமாக பேசி இருந்தார். அதற்குப்பின்
ரேகா தன்னுடைய அம்மாவை பார்க்க வந்தார். அப்போது புது ஆர்டர் விஷயமாக சிந்தாமணி, ரேகாவிடம் சொன்னார். மீனாவிற்கு தான் இந்த ஆர்டர் கிடைக்க வேண்டும் என்று ரேகா, உங்களுக்கு என் மீது பாசம் இருந்தால் இந்த ஆர்டரை எடுக்கக் கூடாது என்றார். சிந்தாமணியும் அந்த ஆர்டர் வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டார்.
சிறகடிக்க ஆசை:
பிறகு அந்த ஆர்டர் மீனாவிற்கு கிடைத்து விட்டது. இதை மீனா வீட்டில் சொல்லி ரொம்பவே சந்தோஷப்பட்டார். அந்த சமயம் பார்த்து நீத்துவின் மொபைலில், ரவி ஐ லவ் யூ என்று மெசேஜ் போட்டு இருந்தார். இதை அறிந்த சுருதி பயங்கரமாக கொந்தளித்து கடைக்கு போனார். அங்கு நீத்து, ரவியிடம் காதலை சொல்ல கேக் வைத்துக் கொண்டு இருந்தார். ஸ்ருதி, கேக்கை நீத்துவின் மீது அடித்து விட்டு சண்டை போட்டார். நீத்து, நான் உங்களை காதலிக்கிறேன் ரவி என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார். இதனால் ரவியுமே கோபப்பட்டார். சுருதி, ரவியை திட்டிவிட்டார் சென்று விட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கிரிஷ் உறவினர்கள், ரோகினி இடம் சொத்தில் பங்கு தருவதாக சொல்கிறார்கள். ஆனால், ரோகிணி வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். இன்னொரு பக்கம் முத்து-மீனா இருவரும் நீத்து உடன் பேசியதை பற்றி ரவியிடம் சொல்கிறார்கள். ரவிக்கு என்ன செய்வதென்று புரியாமல் குழம்பி போய் இருக்கிறார். அந்த சமயம் பார்த்து ஸ்ருதியின் அம்மா சுதா, முத்து வீட்டிற்கு வந்து ரகளை செய்து கொண்டிருக்கிறார். யாருக்குமே ஒன்றும் புரியவில்லை. சுதா, ரவி குடும்பத்தை மிரட்டுகிறார். அப்போது அண்ணாமலை, சுதாவிடம் நடந்ததை விசாரிக்கிறார்.

சீரியல் ட்ராக்:
சுதாவிற்கு உண்மை எதுவுமே தெரியவில்லை. பின் ரவி, நீத்து செய்த வேலையெல்லாம் சொல்கிறார். இதை கேட்டு மீண்டும் சுதா கொந்தளித்து கத்துகிறார். விஜயா, ரவி மீது எந்த தவறும் இல்லை என்கிறார். பின் மீனா, ரவி இருவரும் சுருதியை சந்தித்து பேச போகிறார்கள். ஆனால், சுருதி, மீனாவை மட்டும் தான் அழைத்து பேசுகிறார். அப்போது நடந்ததை எல்லாம் மீனா சொல்கிறார். அதற்கு சுருதி, ரவி அந்த ரெஸ்டாரண்டில் இனி வேலை செய்யக்கூடாது. நீத்து தான் செய்த தவறுக்காக சோசியல் மீடியாவில் என்னிடம் மன்னிப்பு கேட்கணும் என்று சொல்கிறார்.






