விஜய் டிவியில் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதை. அண்ணாமலை பேச்சால் மீனாவை முத்து திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகிணியை திருமணம் செய்து வைக்கிறார் விஜயா.

உண்மையில் அவர் பணக்கார குடும்பமே இல்லை. அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். முதலில் இரு வீட்டார் சம்மதிக்கவில்லை என்றாலும் பணக்கார பெண் என்பதால் விஜயா ஏற்று கொண்டார். வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. சீரியலில் கடந்த வாரம் ரோகினியின் மகன் கிரஷுக்கு கண்ணில் ஆபரேஷன் செய்து ஹாஸ்பிடலில் இருந்து முத்து வீட்டிற்கு வந்தார்கள். இதனால் பல ப்ரச்சனை வந்தது. ஒரு வழியாக கிருஷுக்கு தன் தாய் ரோகினி தான் என்பது தெரிந்து விட்டது.
சிறகடிக்க ஆசை:
ரோஹினியும் தன் மகனுடன் விளையாடி சந்தோசமாக இருந்தார். அதன் பின் முத்து கிண்டலாக தன் கல்யாணத்தை பற்றி பேசியதை கேட்டு மீனா மனம் உடைந்து விடுகிறார். இது தான் சந்தர்ப்பம் என்று விஜயா, மீனாவை கிண்டல் செய்தார். பின் மீனாவை காணவில்லை என்று முத்து- அண்ணாமலை பதறிக் கொண்டிருந்தார்கள். எங்கெங்கோ முத்துவும் அவருடைய நண்பர் செல்வமும் தேடி அலைந்து இருந்தார்கள். இறுதியில் முத்து வீட்டிற்கு வந்தார். அதன் பின் ரோஹிணிக்கு தொல்லை கொடுத்த வசீகரனை போலீஸ் கைது செய்கிறது. பின் ரோகினி கொடுத்த ஐடியா படி விஜயா, பரதநாட்டிய வகுப்பை தொடங்குகிறார்.

நேற்று எபிசோட்:
அதற்கு முத்து கிண்டலாக பேசியிருந்தார். நேற்றைய எபிசோடில் விஜயா ஆரம்பித்த வகுப்பிற்கு யாருமே வரவில்லை. வெளியே போய் பார்த்து பார்த்து பார்வதி, விஜயா இருவருமே சோர்ந்து போய் விட்டார்கள். பின் வகுப்பிற்கு வந்த நபர் ஒருவர், இனிமேல் நீங்கள் மின் வாடகை அதிகமாக கொடுக்க வேண்டும் என்று சொல்லி விட்டு சென்றார். இதை கேட்டு பார்வதி அதிர்ச்சி அடைகிறார். பின் வகுப்பிற்கு வந்த பெற்றோரிடம், இங்கு வகுப்பு நடக்கவில்லை என்று பார்வதி சொல்லிவிடுகிறார். இது எல்லாம் பார்த்து விஜயாவிற்கு கோபம் வருகிறது. பின் வீட்டிற்கு வந்து விஜயா, இன்று யாருமே வரவில்லை என்று வருத்தப்பட்டு இருக்கிறார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில், முத்து- மீனா இருவருமே விஜயாவின் வகுப்பிற்கு மாணவர்களாக செல்கிறார்கள். முதலில் விஜயா சொல்லி தர மாட்டேன் என்று மறுக்கிறார். பின் மீனா தப்பு தப்பாக நடனம் ஆடுவதை பார்த்து சொல்லிக்கொடுத்து கொண்டிருக்கும் போது விஜயாவிற்கு கழுத்து சுழுக்கி விடுகிறது. பின் அவருக்கு மருத்துவம் செய்கிறார்கள். கை கால் அசைக்க கூடாது என்று மருத்துவர் சொல்லிவிட்டு செல்கிறார். இதுவும் உன் வேலைதான் என்று மீனாவை விஜயா திட்டுகிறார். பின் ரோகினி மாமா என்று சொல்லிக் கொண்டு வந்த நபரை மீனா பார்த்து விடுகிறார். இனி வரும் நாட்களில் மீனாவிடம் இருந்து ரோகினி மாமா தப்பிப்பாரா? ரோகினியின் திட்டம் தெரிய வருமா? போன்ற பரபரப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கிறது.






