விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகிணியை சந்தித்த குறி சொல்பவர், நீங்கள் சொன்னது போலவே பேசிவிட்டேன். சிந்தாமணி அம்மாவிற்கு நான் விசுவாசமாக இருப்பேன் என்றெல்லாம் சொன்னார். இதனால் ரோகிணி ரொம்பவே சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் நிலா வேலை செய்யும் இடத்திற்கு சத்யா, ரேகா இருவரும் வருகிறார்கள். அப்போதுறை ஒரு புது ஆர்டரை ரேகா கொடுக்கிறார். மீனாவும் சந்தோஷமாக அதை ஏற்றுக் கொண்டார். அப்போது அங்கு வந்த சிந்தாமணி, ரேகாவை திட்டினார்.

விஜயா சொன்னது போல மீனா பூஜைக்கு தயார் செய்து கொண்டிருந்தார். அதை பார்த்து ரவி, முத்து, அண்ணாமலை எல்லோருமே கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள். இருந்தாலும் விஜயா அதை கண்டு கொள்ளவில்லை பூஜைக்கு எல்லாமே தயார் செய்தார். அந்த சமயம் பார்த்து சிந்தாமணி அனுப்பிய சாமியாடி வீட்டிற்கு வந்தார். அவர் வீட்டிற்குள் வந்தவுடன் மனோஜின் வாழ்க்கையைப் பற்றி எல்லாம் சொன்னார். பின் அவர், இந்த பிரச்சனைகள் எல்லாம் காரணம் இரண்டாவது மருமகள் தான். அவள்தான் இந்த வீட்டின் சாபக்கேடு.
சிறகடிக்க ஆசை:
அவள் இந்த வீட்டை விட்டுப் போனால் உன் எல்லா பிரச்சனையும் தீரும். இல்லையென்றால் உன் கணவரின் உயிருக்கே ஆபத்து என்றார். இதனால் விஜயா ரொம்பவே பயந்து போனார். சாமியாடி சொல்வதைக் கேட்டு மீனா உடைந்து போய் அழுதார். கோபப்பட்ட முத்து, அந்த சாமியாடியிடம் சண்டைக்கு போனார். இருந்தாலும் விடாமல் அந்த சாமியாடி மீனாவைத்தான் குறை சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் முத்து, அந்த சாமியாடியை வீட்டை விட்டு துரத்தி விட்டார். பின் விஜயா, மீனாவை வீட்டை விட்டு வெளியே போக சொன்னார். அண்ணாமலை- முத்து இருவரும் விஜயாவிடம் சண்டைக்கு போனார்கள். சிந்தாமணியை பார்த்த சாமியாடி, நீங்கள் சொன்னது போல சொல்லிவிட்டேன் என்றார். இதனால் சிந்தாமணி ரொம்பவே சந்தோஷப்பட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சாமியாடி சொன்னதை நினைத்து விஜயா ரொம்ப வருத்தப்படுகிறார். பின் மீனாவை வீட்டை விட்டு வெளியே அனுப்ப சொல்லி விஜயா பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார். அண்ணாமலை, முத்து எவ்வளவு சொல்லியுமே விஜயா கேட்கவில்லை. மீனாவை வெளியே போக சொல்கிறார். இதனால் உடைந்து போன மீனா ரொம்பவே கதறி அழுகிறார். அண்ணாமலைக்கு ஆபத்து வந்து விடுமோ என்றும் பயப்படுகிறார். ஒருவழியாக அண்ணாமலை, விஜயாவை திட்டி உள்ளே அனுப்பி விடுகிறார். முத்து-மீனாவிற்கு ஆறுதல் சொல்கிறார். அதற்குப்பின் விஜயா, சிந்தாமணிக்கு போன் செய்து நடந்ததை எல்லாம் சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
சிந்தாமணி, இதுதான் எனக்கு வேண்டும். அந்த மீனாவை ஒழித்துக் கட்டுகிறேன் என்று மனதுக்குள் சொல்லி சந்தோஷப்படுகிறார். அதற்குப்பின் மனோஜ், இந்த சாமியாடி என்னுடைய கடைக்கும் வந்து குறி சொன்னார் ரோகிணி தான் மீண்டும் இந்த வீட்டிற்கு வருவார் என்றார். இதைக் கேட்டு விஜயாவிற்கு கோபம் வருகிறது. அது நடக்கக்கூடாது. நான் உனக்கு சீக்கிரமாகவே நல்ல பெண்ணை பார்க்கிறேன் என்கிறார். அதற்குப்பின் மனோஜ்க்கு போன் செய்த ரோகினி, ரொம்ப அன்பாக பேசுகிறார். இதனால் கோபப்பட்டு மனோஜ் சண்டை போடுகிறார். அப்போ ரோகிணி, நான் உன்னை விட்டு மொத்தமாக பிரிந்து விடுகிறேன். அதற்காக நான் சொல்லும் விஷயத்தை நீ செய்யணும். ஆனால், அந்த விஷயத்தை உன் அம்மாவிடம் கூட சொல்ல கூடாது என்கிறார். அதற்கு மனோஜ் ஒத்துக்கொள்கிறார்.






