விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து-மீனா இருவரும் புதிய தொழில் கிடைத்ததை நினைத்து சந்தோஷப்பட்டார்கள். இன்னொரு பக்கம் பார்வதியின் வீட்டிற்கு சிந்தாமணி, விஜயா இருவருமே வந்தார்கள். அப்போது மனோஜை பெண்பார்க்கும் விஷயமாக இருவர் வந்தார்கள். அப்போது அவர்கள், பெண்ணிற்கு 30 வயது. ஆனால், பெரிய வசதியான வீடு என்றார்கள். இதனால் சந்தோஷப்பட்ட விஜயா, என் மகனையுமே நிறைய பேர் கேட்டார்கள். என் பையன் பெரிய தொழிலதிபர் என்றெல்லாம் பில்டப் விட்டார். பின் இதைப் பற்றி சிந்தாமணி, ரோகினி இடம் சொன்னார். அதனால் ரோகிணி கோவப்பட்டு வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் போட்டு உடைத்தார்.

ரோகினி, மனோஜ் எனக்கு மட்டும்தான் சொந்தம். அவர் யாரையும் கல்யாணம் செய்து கொள்ள விட மாட்டேன் என்றெல்லாம் சபதம் விட்டார். இன்னொரு பக்கம் பெண் வீட்டார் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டதால் விஜயா, மனோஜிடம் சொன்னார். பின் விஜயா, பெண் பார்க்க போகும் விஷயத்தைப் பற்றி அண்ணாமலை இடம் சொன்னார். முத்து, கிண்டல் செய்தார். பின் மனோஜ் தனக்கு பெண் பார்க்கும் விஷயம் அறிந்தவுடன் ரொம்ப சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் சத்யா பிறந்தநாள் என்பதால் மீனா அம்மா வீட்டில் எல்லோருமே சந்தோஷமாக கொண்டாடினார்கள். அந்த சமயம் பார்த்து ரேகா, சத்யாவிற்காக காஸ்ட்லி கிப்டையும் கேக்கையும் வாங்கிக் கொண்டு வந்தார்.
சிறகடிக்க ஆசை:
அதை பார்த்து முத்து, மீனாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. பின் ரேகா வாங்கி வந்த கேக்கை வெட்டி எல்லோருமே கொண்டாடினார்கள். அதற்கு பின்பு ரேகா, இந்த நாளில் உங்களிடமிருந்து நல்ல பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார். இதைக் கேட்ட முத்து, மீனா இருவரும் சத்யாவிடம் விசாரித்தார்கள். சத்யா, ரேகா தன்னை காதலிக்கும் விஷயத்தை பற்றி சொன்னார். முத்து, நீ என்ன முடிவெடுத்திருக்கிறாய் என்று கேட்டார். சத்யா, நானும் காதலை சொல்ல போகிறேன் என்றார். மீனா கோபப்பட்டு திட்டுகிறார். முத்து அதெல்லாம் ஒன்றும் இல்லை. உனக்கு பிடித்திருந்தால் காதலி. உனக்காக நான் சப்போர்ட் செய்கிறேன் என்றார்.

இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் மனோஜை பார்ப்பதற்காக பெண் வீட்டில் வந்திருக்கிறார்கள். விஜயாவிற்கு தலைகால் புரியாமல் சுத்திக்கொண்டிருக்கிறார். பின் பெண் வீட்டாரிடம் விஜயா, மனோஜை பற்றி ரொம்ப பெருமையாக புகழ்ந்து பேசுகிறார். அந்த பின் மனோஜை பார்த்து பெண் வீட்டாருக்கு பிடித்து விடுகிறது. அப்போது அண்ணாமலை, மனோஜூக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தான விஷயத்தையெல்லாம் சொல்கிறார். உடனே பெண் வீட்டார் ஒரு நிமிடம் ஷாக் ஆகிறார்கள். அதற்குப்பின்
பெண் வீட்டார், எங்களுக்கு மாப்பிள்ளை ஓகே.

சீரியல் ட்ராக்:
நீங்கள் வீட்டில் வந்து பெண்ணை பார்க்கலாம். அதோட நீங்கள் நேர்மையாக எல்லா விஷயத்தையும் சொன்னது எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என்கிறார். இன்னொரு பக்கம் சத்யா, ரேகாவிடம் தன்னுடைய காதலை சொல்லி விடுகிறார். ரேகா ரொம்பவே சந்தோஷப்படுகிறார். அந்த சமயம் பார்த்து சிந்தாமணி போன் செய்து ரேகாவிடம் பேசுகிறார். பின் ரேகா, எவ்வளவு பிரச்சனை வந்தாலும் எனக்கு நீ துணையாக இருக்க வேண்டும். என் காதலுக்கு என் வீட்டில் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். நீ தான் எனக்கு சப்போர்ட் செய்யணும் என்று சொல்கிறார். பின் கோயிலில் ஸ்ருதி-மீனா பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது வந்த விஜயா, மனோஜிற்கு திருமணம் ஏற்பாடு செய்திருக்கும் விஷயத்தை பற்றி இடம் சொல்கிறார்.






