விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சிந்தாமணி, டாக்குமெண்ட் எல்லாம் கரெக்டா இருக்கிறது. என்னுடைய பணத்தை கொடுக்கும் வரை நான் வீட்டை தரமாட்டேன் என்று மிரட்டினார். இதை கேட்ட அதிகாரி, சட்டப்படி தான் கொண்டு செல்ல முடியும். தைரியமாக இருங்கள் என்றார். இன்னொரு பக்கம் விஜயா, எதற்காக ரோகினி கடைக்கு வந்தாள்? என்று கேட்டார். மனோஜ், கடையில் அதிகமாக எலி இருப்பதால் அதை பிடிக்க பூனை கொண்டு வந்தார் என்றார். இருந்தாலும் விஜயா, ரோகிணி கடைப்பக்கம் வரக்கூடாது. உனக்கு விவாகரத்து நடக்க வேண்டும் என்றார். ஜீவா, கடையில் cctv இருக்கிறது. நீங்கள் வீட்டில் இருந்தபடியே மனோஜ் என்ன செய்கிறார் என்று பார்க்கலாம் என்று ஐடியா கொடுத்தார்.

சிந்தாமணியை ரோட்டில் சந்தித்து முத்து-மீனா இருவரும் பேசி இருந்தார்கள். அப்போது சிந்தாமணி, என்னுடைய பணத்தை கொடுத்து விட்டால் நான் பத்திரத்தை கொடுக்கப் போகிறேன். தேவையில்லாமல் எதற்கு இந்த பேச்சு என்று கேட்டார். முத்து-மீனா இருவருமே சிந்தாமணியின் மீது அதிகமாக கோபப்பட்டார்கள். அப்போது சிந்தாமணி, என்னுடைய தலைவர் பதவியை விட்டு தந்தால் உன்னுடைய பத்திரத்தை கொடுக்கிறேன் என்று டீலிங் பேசி இருந்தார். அதைக் கேட்டு மீனாவும் மனம் மாறினார். முத்து, அதெல்லாம் முடியாது என்று அங்கிருந்து மீனாவை அழைத்துக் கொண்டு சென்றார்.
சிறகடிக்க ஆசை:
அதற்கு பின் வீட்டிற்கு வந்த முத்து-மீனா இருவரும் சிந்தாமணி செய்த தில்லாலங்கடி வேலை எல்லாவற்றையுமே சொன்னார்கள். குறிப்பாக, இந்த நிலைமைக்கு காரணம் சிந்தாமணி தான் என்று உண்மையை சொன்னார்கள். இதைக் கேட்டு விஜயா ஷாக் ஆனார். அண்ணாமலை, விஜயாவை திட்டினார்
அதற்குப்பின் மொட்டை மாடியில் மீனா, நான் தலைவர் பதவியில் இருந்து விலகப் போகிறேன். நம்முடைய வீட்டை மீட்க வேண்டும் என்றார். முத்து, உன்னை நம்பி ஓட்டு போட்டவர்களுக்கு உண்மையாக இரு. சிந்தாமணியை பார்த்துக் கொள்ளலாம் என்று அறிவுரை சொன்னார்

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜயா, நீ உன்னுடைய தலைவர் பதவியை விட்டு வந்தால் நம்முடைய வீடு கிடைக்கும். இவ்வளவு சுயநலமாக இருக்காதே என்று வழக்கம்போல மீனாவை தான் திட்டிக்
கொண்டிருக்கிறார். முத்து, நான் சொல்லி தான் மீனா அமைதியாக இருக்கிறார் என்று நடந்ததை சொல்கிறார். அண்ணாமலை, இவ்வளவு பிரச்சினையையும் நடப்பதற்கு முன்பு நீயும் உன் மகனும் யோசித்து இருக்கணும். தேவையில்லாமல் மற்றவர்களை குறை சொல்லாதே என்று விஜயாவை திட்டுகிறார். அதற்குப்பின் மீனாவின் அம்மா, விஜயாவிற்காக கறி எடுத்து சமைக்க பணமில்லாததால் கடன் வாங்க போகிறார். இதை அறிந்த விஜயா, அதெல்லாம் தேவையில்லை இருப்பதை வைத்து சமையுங்கள் என்று சொல்லிவிடுகிறார். பின் மீனாவின் அம்மா கடைக்கு போனதால் விஜயாவே தனக்கு தெரிந்த சாப்பாடு செய்து வைக்கிறார்.

சீரியல் ட்ராக்:
சாப்பாடு சுமாராக இருந்தாலும் குறை சொல்லாமல் எல்லோருமே அருமையாக இருக்கிறது என்று பாராட்டுகிறார்கள். அதற்குப்பின் வக்கீலை சந்தித்து முத்து-மீனா இருவரும் பேசுகிறார்கள். அப்போது வக்கீல், வீட்டின் மேல் போட்டு இருக்கும் சீலை எடுக்க வேண்டும் என்றால் முன் பணமாக 10 லட்சம் கட்ட சொல்வாங்க. அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்கிறார். ஸ்வேதாவிடம் பணம் கேட்கலாம் என்று முத்து சொல்கிறார். இன்னொரு பக்கம் மனோஜை பார்ப்பதற்காக ரோகினி கடைக்கு வருகிறார். இதை வீட்டிலிருந்தே போனில் விஜயா பார்த்து விடுகிறார். பின் கேமராவை விஜயா, அண்ணாமலையிடம் காண்பித்து ரோகினியை திட்டிக் கொண்டிருக்கிறார். விஜயா, ரோகினியை ரொம்ப மோசமாக திட்டுகிறார். அவமானத்தில் ரோகினி எமோஷனலாக அழுகிறார்.






