விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ் தன் அம்மாவின் பேச்சை கேட்காமல் மீனாவின் சாப்பாடு சாப்பிட்டார். இதனால் விஜயாவிற்கு பயங்கர கோபம் வருகிறது. அதற்குப் பின் விஜயா, மனோஜ்காக பெண் பார்த்திருக்கும் விஷயத்தை சொன்னார். மனோஜ் ரொம்பவே சந்தோஷப்பட்டார். அப்போது மனோஜ், ரோகிணி இடமிருந்து விவாகரத்து வாங்குவதற்கு சந்தோஷை வைத்து போட்டிருக்கும் திட்டத்தை பற்றியும் சென்றார். முத்து, ரவி எல்லோருமே கிண்டல் செய்தார்கள்.

இன்னொரு பக்கம் ரோகினி, சந்தோஷை ஒரு இடத்திற்கு வரவைத்து சவுக்கடிப்பவரை வைத்து அடி வெளுத்து வாங்கினார். பின் சந்தோஷ், மனோஜிக்கு போன் செய்து நடந்ததை சொன்னார். முத்து-மனோஜ் இருவருமே அந்த இடத்திற்கு போனார்கள். பின் எப்படியோ அந்த நபரிடம் இருந்து சந்தோஷை முத்து காப்பாற்றினார். பின் இதெல்லாம் ரோகிணியின் வேலை என்று தெரிந்தவுடன் மனோஜ் கோபப்பட்டார். பின் இதைப் பற்றி எல்லாம் முத்து, ரவி இருவரும் மீனா-ஸ்ருதி இடம் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் முத்து, நீத்து விஷயத்தில் ஏதாவது செய்யணும் என்றார்.
சிறகடிக்க ஆசை:
இன்று எபிசோட்டில் ரோகிணி, நீ போடும் திட்டமெல்லாம் உன்னை மாதிரி சொதப்பலாக தான் இருக்கிறது. இவன் எல்லாம் ஒரு ஆளு, இவனை வைத்து திட்டம் போடுகிறாயா? என்கிறார். பின் தனக்கு கிடைத்த ஒரு புது ஆர்டரை மனோஜிடம் கொடுத்துவிட்டு செல்கிறார். இன்னொரு பக்கம் முத்து- மீனா வேலை செய்யும் இடத்திற்கு அந்த மனநலம் பாதிக்கப்பட்டவரின் பெற்றோர்கள் நன்றி சொல்ல வருகிறார்கள். அப்போது முத்து வண்டி ஓட்டுவதை அறிந்த அந்த நபர், நீங்க வேன் வாங்கிக் கொள்ளுங்கள். அதற்கு ஏற்பாடு நான் செய்து தருகிறேன். இங்கு நிறைய டூர் போவார்கள். உங்களுக்கும் நிறைய ஆர்டர் கிடைக்கும் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
முத்து-மீனா இருவரும் புதிய தொழில் கிடைத்ததை நினைத்து சந்தோஷப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் பார்வதியின் வீட்டிற்கு சிந்தாமணி, விஜயா இருவருமே வருகிறார்கள். அப்போது மனோஜை பெண்பார்க்கும் விஷயமாக இருவர் வருகிறார்கள். அப்போது அவர்கள், பெண்ணிற்கு 30 வயது. ஆனால், பெரிய வசதியான வீடு என்று சொல்கிறார்கள். இதனால் சந்தோஷப்பட்ட விஜயா, என் மகனையுமே நிறைய பேர் கேட்கிறார்கள். என் பையன் பெரிய தொழிலதிபர் என்றெல்லாம் பில்டப் விடுகிறார். பின் இதைப் பற்றி சிந்தாமணி, ரோகினி இடம் சொல்கிறார். அதனால் ரோகிணி கோவப்பட்டு வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் போட்டு உடைக்கிறார்.
https://www.youtube.com/watch?si=FQBU9rGnOkpn6TqX&v=ooLMssn1vFw&feature=youtu.be
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பெண்ணை பார்ப்பதற்காக விஜயா- மனோஜ் இருவரும் போகிறார்கள். அந்த பெண்ணை பார்த்த உடனே மனோஜ் மயங்கி விடுகிறார். பெண்ணை மனோஜ்க்கு ரொம்ப பிடித்து விடுகிறது. விஜயாவும் சம்மதம் சொல்லுகிறார். பின் பெண்ணின் உறவினர்கள் விஜயாவின் குடும்பத்தை பற்றி எல்லாம் விசாரிக்கிறார்கள். அப்போது பெண் வீட்டார், நீங்கள் எங்களுக்கு தூரத்து சொந்தம். ஒரு வகையில் மனோஜ் பெண்ணிற்கு அண்ணன் முறை என்று சொல்கிறார். இதைக் கேட்டு மனோஜ் ஷாக் ஆகி இருக்கிறார்.






