விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரேகா வாங்கி வந்த கேக்கை வெட்டி எல்லோருமே கொண்டாடினார்கள். அதற்கு பின்பு ரேகா, இந்த நாளில் உங்களிடமிருந்து நல்ல பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார். இதைக் கேட்ட முத்து, மீனா இருவரும் சத்யாவிடம் விசாரித்தார்கள். சத்யா, ரேகா தன்னை காதலிக்கும் விஷயத்தை பற்றி சொன்னார். முத்து, நீ என்ன முடிவெடுத்திருக்கிறாய் என்று கேட்டார். சத்யா, நானும் காதலை சொல்ல போகிறேன் என்றார். மீனா கோபப்பட்டு திட்டுகிறார். முத்து அதெல்லாம் ஒன்றும் இல்லை. உனக்கு பிடித்திருந்தால் காதலி. உனக்காக நான் சப்போர்ட் செய்கிறேன் என்றார்.

மனோஜை பார்ப்பதற்காக பெண் வீட்டில் வந்திருந்தார்கள். விஜயாவிற்கு தலைகால் புரியாமல் சுத்திக்கொண்டிருந்தார். பின் பெண் வீட்டாரிடம் விஜயா, மனோஜை பற்றி ரொம்ப பெருமையாக புகழ்ந்து பேசி இருந்தார். அந்த பின் மனோஜை பார்த்து பெண் வீட்டாருக்கு பிடித்து விடுகிறது. அப்போது அண்ணாமலை, மனோஜூக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தான விஷயத்தையெல்லாம் சொன்னார். உடனே பெண் வீட்டார் ஒரு நிமிடம் ஷாக் ஆனார்கள். அதற்குப்பின்
பெண் வீட்டார், எங்களுக்கு மாப்பிள்ளை ஓகே. நீங்கள் வீட்டில் வந்து பெண்ணை பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை:
அதோட நீங்கள் நேர்மையாக எல்லா விஷயத்தையும் சொன்னது எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என்றார். இன்னொரு பக்கம் சத்யா, ரேகாவிடம் தன்னுடைய காதலை சொல்லி விட்டார். ரேகா ரொம்பவே சந்தோஷப்பட்டார். அந்த சமயம் பார்த்து சிந்தாமணி போன் செய்து ரேகாவிடம் பேசி இருந்தார். பின் ரேகா, எவ்வளவு பிரச்சனை வந்தாலும் எனக்கு நீ துணையாக இருக்க வேண்டும். என் காதலுக்கு என் வீட்டில் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். நீ தான் எனக்கு சப்போர்ட் செய்யணும் என்றார். பின் கோயிலில் ஸ்ருதி-மீனா பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது வந்த விஜயா, மனோஜிற்கு திருமணம் ஏற்பாடு செய்திருக்கும் விஷயத்தை பற்றி இடம் சொன்னார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜயா- மனோஜ் இருவரும் சூப்பராக தயாராகி பெண் வீட்டார் செய்கிறார்கள். அங்கு பெண் வீட்டில் எல்லோருமே நன்றாக பேசுகிறார்கள். பின் பெண்ணை பார்த்தவுடன்
மனோஜ்க்கு ரொம்பவே பிடித்து விடுகிறது. பின் மனோஜ்- கல்யாண பெண் இருவரும் தனியாக பேசிக்கொள்கிறார்கள். அதற்குப்பின் பெண் வீட்டாரின் உறவினர்கள் எல்லோருமே விஜயாவின் குடும்பத்தை பற்றி விசாரிக்கிறார்கள். அப்போது பெண்ணுடைய தாத்தா, விஜயாவின் அப்பாவை பற்றி விசாரிக்கிறார்.

சீரியல் ட்ராக்:
விஜயா, நாம் உறவுக்காரர்களா என்று சந்தோஷப்படுகிறார். உடனே பெண்ணின் தாத்தா, நீங்கள் எங்களுக்கு தூரத்து சொந்தம். உங்கள் மகன் அண்ணன் முறை வேண்டும் என்று சொல்கிறார். இதைக் கேட்டு மனோஜ் ஷாக் ஆகி விடுகிறார். பெண் வீட்டாரருக்குமே ஒன்றும் புரியவில்லை. இந்த சம்மந்தம் வேண்டாம். உறவு முறை சரி இல்லை என்று சொல்லிவிடுகிறார்கள். மனோஜ்-விஜயா சோகமாக இருந்து கிளம்புகிறார்கள். பின் வீட்டில் மனோஜ், முத்து, ரவி எல்லோருமே மாடியில் சரக்கடித்துக் கொண்டு தங்களுடைய சோக கதைகளை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.






