விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் மலேசியா மணி இடம் பவானியின் அப்பா, திருடர்கள் நகையை திருட பார்த்தார்கள். என் நண்பனின் குடும்பம் தான் காப்பாற்றியது என்று ரொம்ப பெருமையாக பேச அவர்களுக்கு மரியாதை செலுத்த மாலையுடன் மலேசியா மணி வந்தார். அவரை பார்த்தவுடன் முத்து-மீனா இருவரும் ஷாக்காகி இருந்தார்கள். மலேசியா மணிக்கும் என்ன சொல்வதென்றே புரியவில்லை. இன்னொரு பக்கம் வீட்டில் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது முத்து- மீனா ரோகினி மாமாவைப் பற்றி பேசி இருந்தார்கள். உடனே அவரை உள்ளே வரவைத்தார்கள். ரோகினிக்கு பேரதிர்ச்சி. என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் அமைதியாக இருந்தார். விஜயா, மனோஜ் இருவரும் உண்மை என்னவென்று புரியாமல் அவரிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். உடனே முத்து, இவர் மலேசியா மாமா கிடையாது. பவானி கணவனின் தாய் மாமன் என்று அவருடைய பற்றி எல்லா உண்மையும் சொல்ல, வீட்டில் உள்ள எல்லாருமே ஷாக் ஆனார்கள்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் முத்து, இவர் மலேசியா மாமாவே கிடையாது, சென்னை மணி. எல்லாம் பார்லர் அம்மா பண்ண வேலை. எல்லாமே பித்தலாட்டம். மலேசியா, ஜெயில், அப்பா இறந்தது என்று சொன்னது எல்லாமே பொய் என்று சொன்னவுடன் மொத்த பெருமே ஷாக் ஆகி இருந்தார்கள். பின் மணி, என்னை எல்லோரும் மன்னித்து விடுங்கள். ரோகிணி வாழ்க்கையில் பிரச்சனை இருக்கிறது. அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று அவருடைய தோழி வித்தியா கேட்டுக்கொண்டார்.

நேற்று எபிசோட்:
அதனால் தான் நான் நடித்தேன். உங்களை எல்லாம் ஏமாற்றனும் என்று இல்லை என்று சொல்லி, ரோகினி இடம் உன் வீட்டிற்கு உண்மையாக இரு. பொய் என்றும் மறைக்க முடியாது என்று சொன்னார். விஜயா கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார். ஆத்திரம் தாங்க முடியாமல் அண்ணாமலை, ரோகினியை திட்டி விட்டார். அதற்குப்பின் விஜயாவும், ரோகினியை அடித்து விட்டு எவ்வளவு பொய். உன்னால் நான் அசிங்கப்பட்டு நிற்கிறேன். நீ பொய்யின் உருவமாக இருக்கிறாய் என்று மோசமாக திட்டி இருந்தார். மனோஜால் எதுவுமே பேச முடியவில்லை.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இந்த எபிசோட்டில் ரோகினி எவ்வளவோ எடுத்துச் சொல்லி புரிய வைக்கப் பார்க்கிறார். ஆனால், விஜயா கேட்கவே இல்லை. மனோஜிடமும் ரோகினி கெஞ்சுகிறார் ஆனால், அவர் கண்டு கொள்ளவே இல்லை. தன்னுடைய அம்மா சொல்வதை தான் கேட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியில் விஜயா, ரோகினியின் கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிட்டு இந்த வீட்டின் பக்கம் வரவே கூடாது என்று திட்டி விடுகிறார். அண்ணாமலை, மீனா தடுத்துமே விஜயா கேட்கவில்லை. அழுது கொண்டே வித்யாவின் வீட்டிற்கு சென்ற ரோகினி, நடந்ததை சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
வித்யா, உண்மை தெரிந்தால் இதுதான் நடக்கும் என்று உனக்கே தெரியும். உனக்கு குழந்தை இருக்கும் விஷயம் தெரிந்தால் என்ன நடக்குமோ? என்று இன்னும் பயமுறுத்துகிறார். உடனே ரோகினி, எது நடந்தாலும் எப்படி சமாளிக்கணும் என்று எனக்கு தெரியும், நான் பார்த்துக்கொள்கிறேன் என்று தைரியத்துடன் இருக்கிறார். இன்னொரு பக்கம் வீட்டில் மனோஜ் கவலையில் இருக்கிறார். முத்து, அண்ணாமலை இருவருமே ரோகினியை வீட்டிற்கு அழைத்து வருவதை பற்றி பேசுகிறார்கள். ஆனால், மனோஜ் மறுக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






