விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து-மீனா இருவரும் சிந்தாமணி செய்த தில்லாலங்கடி வேலை எல்லாவற்றையுமே சொன்னார்கள். குறிப்பாக, இந்த நிலைமைக்கு காரணம் சிந்தாமணி தான் என்று உண்மையை சொன்னார்கள். இதைக் கேட்டு விஜயா ஷாக் ஆனார். அண்ணாமலை, விஜயாவை திட்டினார். அதற்குப்பின் மொட்டை மாடியில் மீனா, நான் தலைவர் பதவியில் இருந்து விலகப் போகிறேன். நம்முடைய வீட்டை மீட்க வேண்டும் என்றார். முத்து, உன்னை நம்பி ஓட்டு போட்டவர்களுக்கு உண்மையாக இரு. சிந்தாமணியை பார்த்துக் கொள்ளலாம் என்று அறிவுரை சொன்னார். விஜயா, நீ உன்னுடைய தலைவர் பதவியை விட்டு வந்தால் நம்முடைய வீடு கிடைக்கும்.

இவ்வளவு சுயநலமாக இருக்காதே என்று வழக்கம்போல மீனாவை தான் திட்டிக் கொண்டிருந்தார். முத்து, நான் சொல்லி தான் மீனா அமைதியாக இருக்கிறார் என்று நடந்ததை சொன்னார். அண்ணாமலை, இவ்வளவு பிரச்சினையையும் நடப்பதற்கு முன்பு நீயும் உன் மகனும் யோசித்து இருக்கணும். தேவையில்லாமல் மற்றவர்களை குறை சொல்லாதே என்று விஜயாவை திட்டினார். அதற்குப்பின் மீனாவின் அம்மா, விஜயாவிற்காக கறி எடுத்து சமைக்க பணமில்லாததால் கடன் வாங்க போனார். இதை அறிந்த விஜயா, அதெல்லாம் தேவையில்லை இருப்பதை வைத்து சமையுங்கள் என்று சொல்லிவிட்டார். பின் மீனாவின் அம்மா கடைக்கு போனதால் விஜயாவே தனக்கு தெரிந்த சாப்பாடு செய்து வைத்தார்.
சிறகடிக்க ஆசை:
சாப்பாடு சுமாராக இருந்தாலும் குறை சொல்லாமல் எல்லோருமே அருமையாக இருக்கிறது என்று பாராட்டினார்கள். அதற்குப்பின் வக்கீலை சந்தித்து முத்து-மீனா இருவரும் பேசி இருந்தார்கள். அப்போது வக்கீல், வீட்டின் மேல் போட்டு இருக்கும் சீலை எடுக்க வேண்டும் என்றால் முன் பணமாக 10 லட்சம் கட்ட சொல்வாங்க. அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றார். ஸ்வேதாவிடம் பணம் கேட்கலாம் என்று முத்து சொன்னார். இன்னொரு பக்கம் மனோஜை பார்ப்பதற்காக ரோகினி கடைக்கு வந்தார். இதை வீட்டிலிருந்தே போனில் விஜயா பார்த்து விட்டார். பின் கேமராவை விஜயா, அண்ணாமலையிடம் காண்பித்து ரோகினியை திட்டிக் கொண்டிருந்தார். விஜயா, ரோகினியை ரொம்ப மோசமாக திட்டினார். அவமானத்தில் ரோகினி எமோஷனலாக அழுதார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் விஜயா ரொம்ப மோசமாக பேசியதால் ரோகினி கோபத்தில் கேமராவையே உடைத்து விடுகிறார். மனோஜை திட்டி விட்டு ரோகினி அங்கிருந்து சென்று விடுகிறார். அதற்குப் பின் கிரிஷ் உடம்பு சரியில்லாததால் ரோகிணி ஹாஸ்பிடல் அழைத்துக் கொண்டு வருகிறார். அந்த இடத்தில் முத்து, மீனாவை பார்த்தவுடன் க்ரிஷ் ரொம்பவே சந்தோசப்படுகிறார். முத்து, கிரிஸ் உடல்நலத்தை பற்றி விசாரிக்கிறார். ரோகிணியால் தான் கிரிஷுக்கு பிரச்சனை வந்தது என்று தெரியவருகிறது. மீனா, கிரிஷை கவனித்துக் கொள்ள சொல்கிறார். வழக்கம் போல ரோகிணி திமிராக அங்கிருந்து செல்கிறார். அதற்குப்பின் மீனா அம்மாவிற்கு பத்திரிக்கை வைக்க தெரிந்தவர்கள் வந்திருக்கிறார்கள்.

சீரியல் டிராக்:
மீனாவின் அம்மா இல்லாததால் வெய்ட் பண்ணுகிறார்கள். விஜயா ரூமுக்கு சென்று விடுகிறார். அப்போது மீனாவிற்கு தெரிந்தவர்கள் விஜயாவை பற்றி கிண்டலாக பேசுகிறார்கள். இதை ஒட்டு கேட்ட விஜயா, மீனாவின் அம்மா வந்தவுடன் கேட்டு சண்டை வாங்குகிறார். மீனா அம்மாவும், நான் எதுவும் தவறாக பேசவில்லை என்று சொல்லி சமாளிக்கிறார். இருந்தாலும் விஜயா, என்னால் இனி இங்க இருக்க முடியாது என்று வீட்டை விட்டு கிளம்புகிறேன் என்று சொல்கிறார். அப்போது வந்த முத்து, எனக்கு இன்னும் இரண்டு நாட்கள் டைம் கொடுங்கள். நம்முடைய வீட்டிற்கு எப்படியாவது செல்லலாம். நான் என்னுடைய காரை விற்றாவது உங்களை வீட்டிற்கு அழைத்து செல்கிறேன் என்று சொல்கிறார்.






