விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி எவ்வளவோ எடுத்துச் சொல்லி புரிய வைக்கப் பார்த்தார். ஆனால், விஜயா கேட்கவே இல்லை. மனோஜிடமும் ரோகினி கெஞ்சி இருந்தார். ஆனால், அவர் கண்டு கொள்ளவே இல்லை. தன்னுடைய அம்மா சொல்வதை தான் கேட்டுக் கொண்டிருந்தார். கடைசியில் விஜயா, ரோகினியின் கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிட்டு இந்த வீட்டின் பக்கம் வரவே கூடாது என்று திட்டி விட்டார். அண்ணாமலை, மீனா தடுத்துமே விஜயா கேட்கவில்லை. அழுது கொண்டே வித்யாவின் வீட்டிற்கு சென்ற ரோகினி, நடந்ததை சொன்னார்.
வித்யா, உண்மை தெரிந்தால் இதுதான் நடக்கும் என்று உனக்கே தெரியும். உனக்கு குழந்தை இருக்கும் விஷயம் தெரிந்தால் என்ன நடக்குமோ? என்று இன்னும் பயமுறுத்தி இருந்தார். உடனே ரோகினி, எது நடந்தாலும் எப்படி சமாளிக்கணும் என்று எனக்கு தெரியும், நான் பார்த்துக்கொள்கிறேன் என்று தைரியத்துடன் இருந்தார். இன்னொரு பக்கம் வீட்டில் மனோஜ் கவலையில் இருந்தார். முத்து, அண்ணாமலை இருவருமே ரோகினியை வீட்டிற்கு அழைத்து வருவதை பற்றி பேசி இருந்தார்கள். ஆனால், மனோஜ் மறுத்தார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் அண்ணாமலை, ரோகினியை வீட்டிற்கு அழைத்து வரச் சொல்லி மனோஜிடம் கேட்டார். ஆனால், மனோஜ் முடியாது என்று மறுத்து விட்டார். விஜயாவிடமும் அண்ணாமலை எடுத்து சொல்லி புரிய வைத்தார். ஆனால், அவரும் கேட்கவில்லை. பின் கோபத்தில் விஜயா, பார்வதி வீட்டுக்கு சென்று விட்டார். அங்கு விஜயா, உன்னால் தான் எனக்கு இந்த நிலைமை? நீ சொன்னதால் தான் நான் ரோகினியை திருமணம் செய்தேன். அவள் மோசக்காரி, துரோகி என்றெல்லாம் ஆவேசமாக கத்தி இருந்தார். உடனே பார்வதி, நீ பணத்திற்காக ஆசைப்பட்டு அவளை கொண்டு வந்தாய். விசாரிக்க வேணாமா? என்று பார்வதி, விஜயா பக்கமே திருப்பி இருந்தார்.
நேற்று எபிசோட்:
இருந்தாலுமே விஜயாவிற்கு ஆத்திரம் அடங்கவே இல்லை. பின் முத்து-மீனா இருவருமே ஸ்ருதி, ரவியிடம் வீட்டில் நடந்ததை பற்றி சொல்ல, அவர்கள் ஷாக் ஆனார்கள். சுருதி, நாங்கள் உடனே கிளம்பி வீட்டிற்கு வருகிறோம் என்றார்கள். இன்னொரு பக்கம் சோகத்தில் மனோஜ், பாரில் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருந்தார். நிலை தெரியாத அளவிற்கு குடித்து தன் மனைவி செய்த துரோகத்தை நினைத்து புலம்பி கொண்டிருந்தார். அதன் பின் மீனாவிற்கு போன் செய்த பார்வதி, விஜயா பற்றி சொல்லி இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மனோஜ், நிறைய குடித்துவிட்டு நிலை தெரியாத அளவிற்கு தடுமாறிக் கொண்டிருக்கிறார். அவருடைய நண்பர் தான் மனோஜை பைக்கில் வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டிருக்கிறார். வரும் வழியில் டிராபிக் போலீஸ் தடுத்து நிறுத்தி இருவரையுமே செக் பண்ணுகிறார்கள். ஆனால், மனோஜ் போதையில் போலீஸ் இடமே தகராறு செய்து கொண்டிருக்கிறார். மனோஜின் நண்பர் குடிக்கவில்லை என்றாலும் போலீஸ் அவரை ஊத சொல்லி கேட்கிறார்கள். இதனால் கோபப்பட்ட மனோஜ் போலீஸிடம் சண்டை போகிறார். பின் போலீஸ், மனோஜை கைது செய்து விடுகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
போலீஸ் ஸ்டேஷனிலுமே மனோஜ் அமைதியாக இருக்காமல் போலீஸிடம் மன்னிப்பு கேட்க சொல்லி வம்பு இழுத்துக் கொண்டிருக்கிறார். உடனே அவர்கள் கோபத்தில் மனோஜின் சட்டையை கழட்டி ஓரமாக உட்கார வைத்து விடுகிறார்கள். ஆனாலுமே மனோஜ் அடங்காமல், என் தம்பி யார் தெரியுமா? அவன் வந்தால் ரகளையே நடக்கும் என்றெல்லாம் அலப்பறை செய்து கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் மனோஜ் வீட்டிற்கு வரவில்லை என்று முத்து, அண்ணாமலை இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் ரோகினி, மனோஜை நினைத்து வித்யாவிடம் புலம்பி கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.