போலீசில் மாட்டிய வசீகரன், விஜயாவுக்கு ரோகினி கொடுத்த ஐடியா, ஷாக்கில் மொத்த குடும்பம்- சிறகடிக்க ஆசை

0
349
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதை. அண்ணாமலை பேச்சால் மீனாவை முத்து திருமணம் செய்து கொள்கிறார்.அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகிணியை திருமணம் செய்து வைக்கிறார் விஜயா.

-விளம்பரம்-

உண்மையில் அவர் பணக்கார குடும்பமே இல்லை. அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். முதலில் இரு வீட்டார் சம்மதிக்கவில்லை என்றாலும் பணக்கார பெண் என்பதால் விஜயா ஏற்று கொண்டார். வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. சீரியலில் மனோஜ் பர்னிச்சர் கடைக்கு ஓனர் ஆகிறார். கடந்த வாரம் ரோகினியின் மகன் கிரஷுக்கு கண்ணில் ஆபரேஷன் செய்து ஹாஸ்பிடலில் இருந்தார். முத்து- மீனா அவர்களை தங்களுடைய வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். வழக்கம்போல் தங்களுடைய வீட்டில் இருக்கக் கூடாது என்று விஜயா திட்டினார்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

ஒரு வழியாக கிருஷுக்கு தன் தாய் ரோகினி தான் என்பது தெரிந்து விட்டது. ரோஹினியும் தன் மகனுடன் விளையாடி சந்தோசமாக இருந்தார். அதன் பின் வீட்டில் முத்துவின் நண்பர், தன்னுடைய அண்ணன் கல்யாணம் என்று பத்திரிக்கை வைத்தான். அப்போது முத்து கிண்டலாக தன் கல்யாணத்தை பற்றி பேசி இருந்தார். இதைக் கேட்டு மீனா மனம் உடைந்து விடுகிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று விஜயா, மீனாவை கிண்டல் செய்தார். பின் மீனாவை காணவில்லை என்று முத்து- அண்ணாமலை பதறிக் கொண்டிருந்தார்கள். எங்கெங்கோ முத்துவும் அவருடைய நண்பர் செல்வமும் தேடி அலைந்து இருந்தார்கள்.

சீரியல் கதை:

பின் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க முத்து செல்ல, அந்த சமயம் பார்த்து வந்த மீனா தம்பி சத்யாவும் முத்து மீது புகார் கொடுத்தார். இறுதியில் முத்து வீட்டிற்கு வந்தார். அங்கு மீனாவை பார்த்து சந்தோசப்பட்டு பயங்கரமாக திட்டுகிறார். மீனா, நான் பூ கட்டுவதற்கு போனேன். சுருதி இடம் சொல்லிவிட்டு தான் சென்றேன் என்றார். மேலும், நேற்று எபிசோட்டில் ரோகினி கடைக்கு அவருக்கு தொல்லை கொடுக்கும் வசீகரன் வந்து பணம் கேட்கிறார். பணம் கொடுக்க முடியவில்லை என்று ரோகினி சொன்னவுடன் 2 லட்ச ரூபாய்க்கு மதிப்புள்ள பொருட்களை எடுத்துக் கொண்டு சென்றார் வசீகரன்.

-விளம்பரம்-

ரோஹினியிடம் வம்பிழுத்த வசீகரன்:

பின் ரோகினி, சிட்டியை சந்தித்து வசீகரன் தொல்லை கொடுக்கிறான் கவனித்துக் கொள் என்று சொல்ல
சிட்டியும் அவனை மிரட்டுகிறார். எப்படியோ அவன் தப்பித்து பைக்கில் சென்றான். அவனை விடாமல் சிட்டியும் துரத்தி போனார். அந்த சமயம் பார்த்து முத்து செல்வமும் பைக்கில் வந்து கொண்டிருந்தார்கள். பதட்டத்தில் வசீகரன் எதிரே வந்த பாட்டியின் மீது மோதி விட்டு சென்று விடுகிறார். உடனே முத்து அவனை துரத்திக் கொண்டு செல்கிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில், முத்து வசீகரனை பிடித்து போலீசில் கொடுத்து விடுகிறார்.

இன்றைய எபிசோட்:

இதைப் பார்த்த சிட்டி, ரோகினி இடம் சொன்னவுடன் சந்தோஷப்படுகிறார். பின் வீட்டு வேலை எல்லாம் செய்து சோர்வான விஜயா மீனாவை திட்டிக் கொண்டிருக்கிறார். நான் ரோகினி பார்லருக்கு போய் பார்த்துக் கொள்கிறேன் என்றெல்லாம் விஜயா சொல்கிறார். இதை கேட்ட ரோகினி, நீங்கள் பரதநாட்டியம் கிளாஸ் எடுங்கள். அதற்கான ஏற்பாடு செய்து தருகிறேன் என்று சொன்னவுடன் விஜயா சந்தோஷப்படுகிறார். அதற்கான ஏற்பாடுகளையும் ரோகினி- மீனா செய்து கொண்டிருக்கிறார்கள். பின் விஜயா, எல்லோரையும் வீட்டிற்கு வர சொல்லி இருக்கிறார். அத்துடன் சீரியல் முடிவடைகிறது. இனி வரும் நாட்களில் விஜயா பரதநாட்டிய கிளாஸ் வகுப்பு எடுப்பாரா? இதை வைத்து ரோகினி என்ன திட்டம் போடப் போகிறார்?
போன்ற கலகலப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement