ரூமை விட்டு மீனாவை வெளியே தள்ளும் விஜயா,கோபத்தில் முத்து, அண்ணாமலை எடுக்கும் முடிவு- விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

0
49
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதை. அண்ணாமலை பேச்சால் மீனாவை முத்து திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகிணியை திருமணம் செய்து வைக்கிறார் விஜயா. ஆனால், அவர் பணக்கார குடும்பமே இல்லை. அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.

-விளம்பரம்-

முதலில் இரு வீட்டார் சம்மதிக்கவில்லை என்றாலும் பணக்கார பெண் என்பதால் விஜயா ஏற்று கொண்டார். வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. சீரியலில் மனோஜ் பணத்தை ஏமாற்றி சென்ற ஜீவா இந்தியாவிற்கு மீண்டும் வருகிறார். பின் மனோஜிடம் ஜீவா வசமாக மாட்டிக் கொள்கிறார். ஒருவழியாக ஜீவாவிடம் இருந்து மனோஜ் பணத்தை வாங்கி கொள்கிறார். மனோஜ் அக்கவுண்டில் இருக்கும் பணத்தை தன்னுடைய அப்பா தான் போட்டார் என்று ரோகினி மாற்றி சொல்லி விடுகிறார்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை சீரியல்:

அதன் பின் முத்து குடிப்பது போல வீடியோ எடிட் செய்து சோசியல் மீடியாவில் பதிவிடுகிறார் சிட்டி. அந்த வீடியோவால் முத்து ரொம்ப சிரமப்படுகிறார். வீட்டிலும் முத்து சொன்னதை யாரும் கேட்கவில்லை. ஒருவழியாக முத்து மீது எந்த தவறும் இல்லை என்பதை மீனா கண்டுபிடித்து விடுகிறார். மனோஜ் பர்னிச்சர் கடைக்கு ஓனர் ஆகிறார். புதுக்கடையை மனோஜ் தன்னுடைய விஜயா பெயரை வைத்து அம்மாவே திறக்க வைக்கிறார். முதன்முதலில் ஸ்ருதியின் அம்மா இலட்சக்கணக்கில் செலவு செய்து ஒரு பொருளை வாங்கினார்.

சீரியல் கதை:

அவருக்கு தான் பில் போடுவேன் என்று மீனாவை அவமானப்படுத்தி சொல்கிறார் மனோஜ். பிறகு மீனாவும் முத்துவும் எதுவும் பேசாமல் அமைதியாக விடுகிறார்கள். பின் வீட்டில் ஒரு ஜோடி ஒரு வாரம் வெளியில் படுக்க வேண்டும். மற்ற ஜோடி உள்ளே படுக்க வேண்டும் என்று பாட்டி சொல்கிறார். அதன்படி முத்து மீனாவும் உள்ளே படுக்க வேண்டியது. ஆனால், மனோஜ் கடையில் சோர்வாக இருப்பதால் உள்ளே படுத்து விடுகிறார். எதுவும் பேசாமல் முத்து அமைதியாக இருக்கிறார். நேற்று ஸ்ருதியின் அம்மா ஏசியை முத்து வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார். ஆனால், முத்து வேண்டாம் என்று திருப்பி தந்து விடுகிறார்.

-விளம்பரம்-

நேற்று எபிசோட்:

இதனால் பிரச்சனை உருவாக்க வேண்டும் என்று ஸ்ருதியின் அம்மா மனோஜ் இடமே ஏசியை திருப்பி தந்து விடுகிறார். அந்த பணத்தை தன்னுடைய தாலிக் கொடியை அடமானம் வைத்து ரோகினி கொடுக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த மனோஜ் வீட்டில் பயங்கரமாக முத்து விடம் சண்டை போடுகிறார். எல்லோருமே முத்துவை தான் திட்டுகிறார்கள். மீனாவும் முத்துவிடம் எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடில் மீனாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் உள்ளே அறையில் மீனாவை முத்து படுக்க வைக்கிறார்.

இன்றைய எபிசோட்:

அப்போது கடையில் இருந்து வந்த மனோஜ், நான் படுக்க வேண்டும் அவர்களை வெளியே போகச் சொல்லு என்று விஜயாவிடம் சொல்கிறார். விஜயா உள்ளே சென்று மீனாவிடம் பயங்கரமாக சண்டை போடுகிறார். இதைப் பார்த்த முத்து விஜயாவிடம் கேள்வி கேட்கிறார். பிறகு அண்ணாமலை இந்த ரூம் பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என்று சொல்கிறார். இனி வரும் நாட்களில்
ரூம் பிரச்சனையால் முத்து, மீனா வெளியே செல்வார்களா? அண்ணாமலை என்ன முடிவெடுக்கப் போகிறார்? போன்ற பரபரப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement