விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் பார்வதி, விஜயா இருவருமே வசியம் பண்ண சாமியாரை பார்க்க போனார்கள். அங்கு விஜயா, என் மகன், மருமகளையும் பிரிக்கணும். அவள் எங்கள் வீட்டிற்கு நிறைய பிரச்சனை செய்தார் என்று இல்லாதது பொல்லாதது எல்லாம் ரோகினியை பற்றி சொல்லி மந்திரச்ச கயிறு ஒன்றை வாங்கிக் கொண்டார். அதற்குப்பின் விஜயா, ரோகினி- மனோஜ் பிரித்தவுடன் முத்து-மீனாவையும் பிரிக்கணும் என்று சொன்னார். உடனே பார்வதி, இது தேவையில்லாத வேலை. அவர்களை எதற்கு பிரிக்கணும், அதெல்லாம் செய்யாதே என்று திட்டி இருந்தார். அதற்குப்பின் அதே சாமியாரை பார்க்க ரோகினி வந்தார்.

அவர், என்னையும் என் புருஷனையும் என் மாமியார் பிரிக்க பார்த்தார். அவரையும் அவர் அம்மாவையும் பிரிக்கணும் என்று ரொம்ப எமோஷனாக பேசினார். உடனே அந்த சாமியார் ஒரு மந்திரத்தை கயிறை கொடுத்தார். இன்னொரு பக்கம் முத்துவை பார்க்க முருகன் வந்தார். வரும் வழியில் அவர் ரோகினி ஏமாற்றிய கதிரை அழைத்துக் கொண்டு வந்தார். கதிர், முத்து கண்ணில் படவில்லை. கடைசியில் விஜயா, கயிறை சாமி ரூமில் வைத்து இருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த முத்து, சாமி ரூமில் இருக்கும் கயிறை பார்த்து அண்ணாமலைக்கு கட்டி விட்டார். அப்போது விஜயா, இந்த கயிறை எதற்கு கட்டினீர்கள்? இது மனோஜ்க்கு வாங்கினது என்று ஏதேதோ சொல்லி சமாளித்தார். ஆனால், முத்து- அண்ணாமலை விடாமல் பதில் கொடுத்தார்கள். விஜயாவால் எதுவுமே சொல்ல முடியவில்லை.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் விஜயா, மனோஜிற்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று தான் அந்த கயிறை எடுத்து வந்தேன் என்று பொய் சொன்னார். அதனால் முத்து, அண்ணாமலை எதுவும் பேசாமல் கயிறை கொடுத்து விட்டார்கள். அதற்குப்பின் விஜயா, மனோஜின் கையில் கயிறு கட்டி விட்டார். அதற்குப்பின் வந்த ரோகினியும் மனோஜ் கையில் கயிறை கட்டி இருந்தார். மனோஜால் எதுவும் பேசாமல் இரண்டு கைகளிலும் கயிறு கட்டிக் கொண்டார். மறுநாள் காலையில் மனோஜ் வேலைக்கு தயாராகும்போது அயன் பாக்ஸில் சூடு வைத்துக் கொண்டார். மனோஜ் கோபத்தில் ரோகினியை திட்டி இருந்தார்.

நேற்று எபிசோட்:
இதையெல்லாம் வெளியில் இருந்து பார்த்த விஜயா ரொம்ப சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் விஜயா, ரோகினியை திட்டி இருந்தார். உடனே மனோஜ், இது எங்கள் விஷயம். நீங்கள் தலையிட தேவையில்லை. வெளியே போங்கள் என்று திட்டி விட்டார். இதனால் விஜயா மனம் உடைந்து அழுதார். வீட்டில் உள்ள எல்லோருமே விஜயா அழுவதை பார்த்து கவலைப்பட்டார்கள். பின் அண்ணாமலை விசாரிக்க, மனோஜ் திட்டி விட்டான் என்று சொன்னார் விஜயா. இன்னொரு பக்கம் முத்து, முருகனும் புது பிளாட்டை பார்க்க சென்றார்கள். அங்கு வித்யா, மீனா இருவருமே வந்தார்கள். ஒருவரை ஒருவர் சந்தித்தவுடன் ஷாக் ஆனார்கள். சந்தோசமாக இருங்கள் என்று அவர்களுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு வந்தார்கள் முத்து-மீனா.

இன்றைய எபிசோட்:
இப்படி இருக்கும் நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜயா வருத்தப்பட்டு கொண்டிருப்பதால் முத்து, மனோஜிக்கு தண்டனை தர வேண்டும் என்று சொல்கிறார். அப்போது மனோஜ், நான் செய்தது தவறு. நான் கோபத்தில் பேசி விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று முட்டி போடுகிறான். இதை பார்த்து ரோகினி ஷாக் ஆகிறார். உடனே விஜயா, மனம் குளிர்ந்து மனோஜை மன்னித்து விடுகிறார். அதற்குப்பின் ரூமிற்கு சென்ற மனோஜ், தேவையில்லாமல் டிராமா செய்கிறார் என்று தன்னுடைய அம்மாவை திட்டிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்தவுடன் ரோகினிக்கு சந்தோஷமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் விஜயா நடன வகுப்பிற்கு சிந்தாமணி வருகிறார்.

சீரியல் ட்ராக்:
அப்போது அவர், என்னுடைய பணத்தை உங்கள் மகள் எடுத்துக் கொண்டு சென்று விட்டான் என்று சொல்கிறான். உடனே பார்வதி, அவனுடைய பணத்தை தான் எடுத்தான் என்று சொல்கிறார். கோபத்தில் விஜயா, ஆர்டரை தடுத்து நிறுத்த தான் சொன்னேன். அவள் கையை உடைக்க சொல்லவில்லை. தேவையில்லாமல் இனிமேல் அவளுக்கு பிரச்சனை செய்ய தேவை இல்லை. நீங்கள் வகுப்பிற்கும் வர வேண்டாம் என்று திட்டி விடுகிறார். சிந்தாமணியால் எதுவுமே பேச முடியவில்லை, அங்கிருந்து கிளம்பி விடுகிறார். இன்னொரு பக்கம் சிட்டி வெளியே வந்து விடுகிறார். முத்துவையும் சத்யாவையும் பழிவாங்க திட்டம் போடுகிறார். கோவிலில் மீனா தன்னுடைய தம்பி, தங்கை, அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






