விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் பங்களாவுடைய உண்மையான ஓனர் சொன்ன உண்மையை அறிந்து முத்து குடும்பம் அதிர்ச்சியில் உறைந்தது. வேறு வழியில்லாமல் வேதனையில் எல்லோரும் தங்களுடைய வீட்டிற்கு வந்து விட்டார்கள். பின் எல்லோருமே மனோஜை திட்ட, ரோகினி- விஜயா இருவரும் மனோஜ்க்கு சப்போர்ட் செய்து பேசி இருந்தார்கள். பின் ரோகினி-முத்துவுக்கு இடையே வாக்குவாதம் ஆனது. அண்ணாமலை, அந்த போலி ஓனரை கண்டுபிடிக்க வேண்டும் என்று முத்துவிடம் பொறுப்பை ஒப்படைத்தார். முத்துவும் மனோஜ் நண்பரை விசாரித்தார்.
அவர், எனக்கு ஒரு மாதம் தான் பழக்கம். அவரைப் பற்றி தெரியாது என்று சொன்னவுடன் முத்துக்கு ஷாக் ஆனார். நேற்று எபிசோட்டில் மனோஜ், பங்களா வாங்க இருந்த இடத்திற்கு சென்று முத்து விசாரித்தார். அதற்குப்பின் ஜீவா கொடுத்த கண்ணாடியை தன்னுடைய மனைவிக்கு போட்டுவிட்டு அழகு பார்த்தார் முத்து. அப்போது போனை வாங்கி பார்த்த சீதா, இந்த பெண் உங்க கல்யாணத்தில் பார்த்தேன். மனோஜிடம் ரொம்ப நெருக்கமாக நின்று பேசிக் கொண்டிருந்தார் என்று சொன்னவுடன் மீனா- முத்துவுக்கு சந்தேகம் வந்தது.
சிறகடிக்க ஆசை:
ஒருவேளை இவர் மனோஜ் உடைய காதலியாக இருப்பாரோ? என்று சந்தேகத்தில் முத்து அவருடைய வீட்டிற்கு போனார். அங்கு விசாரித்த போது தான் ஜீவா, மனோஜ் காதலி என்பது தெரிந்தது. உடனே முத்து அவரிடம் சண்டை போட்டு பணத்தை கேட்டார். அதற்கு ஜீவா, நான் மொத்த பணத்தையும் போன முறையே வட்டியுடன் செட்டில்மென்ட் செய்துவிட்டேன். அதற்கு சாட்சியே நீதான் என்று சொன்னவுடன் முத்து பழசை நினைத்து பார்த்தார். இதை வீட்டில் அவன் சொல்லவே இல்லை, எங்களை ஏமாற்றி விட்டான் என்று முத்து சொல்ல, மனோஜ் சரியான பிராடு. அதனால் தான் நான் அவனை விட்டுப் போனேன் என்று ஜீவா சொன்னார்.
நேற்று எபிசோட்:
பின் இந்த விஷயத்தை வீட்டில் எல்லோரிடமும் சொல்ல வேண்டும் என்றதற்கு ஜீவா ஒத்து கொண்டார். கோபத்தில் வீட்டிற்கு வந்த முத்து, எல்லோரையும் வரவைத்தார். யாருக்கும் ஒன்றுமே புரியவில்லை.
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அண்ணாமலை, விஜயாவை நீதிபதிகளாக உட்கார வைத்து, மனோஜை கூண்டில் நிறுத்தி முத்து கேள்வி கேட்கிறார். அப்போது முத்து, என்னுடைய அப்பா கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்து வைத்த பணத்தை எடுத்துக் கொண்டு மனோஜ் ஓட பார்த்தான்.
இன்றைய எபிசோட்:
அப்போது அந்த பணத்தை அவரிடம் இருந்து ஜீவா எடுத்து விட்டு சென்றார். இது எல்லோருக்கும் தெரிந்த கதை. ஆனால், அந்த பணத்தை மனோஜ்ன் நான்கு மாதத்திற்கு முன்பே வாங்கி இருக்கிறான். இது நாம் யாருக்குமே தெரியாது. அந்த பணத்தை வைத்துதான் ஷோரூம் வைத்தான். இது ரோகினி அப்பா அனுப்பிய பணம் கிடையாது என்று சொன்னவுடன் மொத்த பேருமே அதிர்ச்சியானார்கள். மனோஜ், ரோகினிக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை.
சீரியல் ட்ராக்:
உடனே ரோகினி, ஆதாரம் இல்லாமல் எதுவும் பேச வேண்டாம். எங்கள் மீது வீண்பழி போடாதீர்கள் என்று சொல்ல, அந்த சமயம் பார்த்து ஜீவா உள்ளே வருகிறார். பின் அவர், வீட்டில் உள்ள எல்லோரிடம் மன்னிப்பு கேட்டு நடந்ததை சொன்னார். விஜயாவிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருக்கிறது. கோபத்தில் அண்ணாமலை, மனோஜ்- ரோகினையும் திட்டிருந்தார். உடனே விஜயா, மனோஜின் சட்டையை பிடித்து எதற்கு இந்த மாதிரி செய்தாய்?என்று கேட்க, ரோகினி சொல்லி தான் நான் செய்தேன் என்று மனோஜ் சொன்னவுடன் ரோகினியை பார்த்து விஜயா முறைக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.