விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சத்யா வீடியோவை சிட்டி இன்டர்நெட்டில் வெளியிட்டார். இதை பார்த்த ரோகினி ரொம்ப சந்தோஷப்பட்டு விஜயாவிடம் காண்பித்தார். தன்னிடம் பணத்தை திருடியது சத்யா தான் என்று தெரிந்தவுடன் விஜயா கொந்தளித்து மீனா வீட்டிற்கு வந்து சத்யாவை சரமாரியாக அடித்து வெளுத்து வாங்கி இருந்தார். மீனாவிற்கும் அவருடைய அம்மாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. உடனே விஜயா, சத்யா வீடியோவை காண்பித்தவுடன் மீனா குடும்பம் அதிர்ச்சியில் எதுவுமே பேசாமல் அமைதியாகி விட்டது.
பின் விஜயா, ரொம்ப கேவலமாக மீனாவையும் அவருடைய குடும்பத்தையும் பேசி, இனிமேல் வீட்டிற்கு வரக்கூடாது என்று சொல்லிவிட்டு சென்றார். சத்யா செய்த வேலையால் மீனாவின் குடும்பத்தினர் நிலைகுலைந்து அழுது கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் விஜயா, வீட்டில் பயங்கர கலவரமே செய்து கொண்டிருந்தார். அண்ணாமலையால் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார். அந்த சமயம் வந்த முத்துவுக்கு உண்மை அறிந்து மீனா வீட்டிற்கு வந்தார். முத்துவை பார்த்தவுடன் மீனா கட்டிப்பிடித்து அழுது மன்னிப்பு கேட்க, அவரை சமாதானம் செய்தார்.
சிறகடிக்க ஆசை:
மீனாவின் அம்மாவும் முத்துவிடம் மன்னிப்பு கேட்க, சத்யாவிற்கு துணையாக சப்போர்ட் செய்து முத்து பேசி இருந்தார். நேற்று எபிசோடில் மீனா வீட்டிற்கு வந்த போலீஸ், சத்யாவை கைது செய்ய பார்த்தது. ஆனால், சத்யா அங்கு இல்லை. இருந்தாலுமே போலீஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. சத்யாவை போலீஸ் ஸ்டேஷனில் விட சொல்லி மிரட்டி விட்டு செல்கிறார்கள். பின் எல்லோருமே சத்யாவை தேட அவர் மாடியில் தற்கொலை செய்ய நின்று இருந்தார். கடைசியில் முத்து அவரை எப்படியோ காப்பாற்றி விட்டார்.
நேற்று எபிசோட்:
பின் சத்யா இங்கிருந்தால் பாதுகாப்பில்லை என்று தன்னுடைய நண்பர் செல்வம் வீட்டில் தங்க வைத்தார் முத்து. அதற்குப்பின் வீட்டிற்கு மீனாவை அழைத்துக் கொண்டு வந்தார் முத்து. ஆனால், விஜயா வழக்கம்போல் மீனாவை வீட்டிற்குள் விடாமல் பயங்கர கலவரமே செய்தார். முத்து எவ்வளவு சொல்லியும் விஜயா கேட்கவே இல்லை. மனோஜ்-ரோகினி ரொம்ப ஏத்தி விடுகிறார்கள். கடைசியில் தன்னுடைய அப்பாவிடம் மன்னிப்பு கேட்டு முத்து பேசி இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில் முத்து தன்னுடைய அப்பாவிடம் சத்யா பக்கம் இருக்கும் நியாயத்தை சொல்கிறார். ஆனால், அவர் ஏற்றுக்கொள்ளவே இல்லை. விஜயா -ரோகினி-மனோஜ் மூவருமே இன்னும் ஏத்தி விடுகிறார்கள். மீனா எல்லோரிடமும் மன்னிப்பு கேட்கிறார். ஆனால், விஜயா இன்னும் அதிகமாக தான் மீனாவை திட்டுகிறார். அந்த சமயம் பார்த்து போலீஸ் வீட்டிற்கு வந்து விஜயாவிடம் கம்பளைண்ட் கேட்கிறது.
சீரியல் ட்ராக்:
விஜயாவுமே சத்யா மீது ஒண்ணுக்கு ரெண்டாக ஏற்றிவிட்டு புகார் கொடுக்கிறார். முத்து-மீனா இருவருமே கெஞ்சியும் யாரும் கேட்கவில்லை. கடைசியில் மீனா வீட்டை விட்டு வெளியே போகணும் என்று விஜயா சொன்னதற்கு அண்ணாமலை முடியாது என்கிறார். உடனே கோபத்தில் விஜயா வீட்டை விட்டு வெளியே வந்து விடுகிறார். பின் பார்வதியிடம் நடந்ததை விஜயா சொல்ல, அவர் மீனாவிற்கு சப்போர்ட்டாக பேசுகிறார். உடனே விஜயா இன்னும் கோபப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.