விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் சீதா வேலை செய்யும் இடத்தில் ரோகினியை பற்றி உண்மை தெரிந்து மீனா அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தார். அப்போது வீட்டிற்கு ரோகினி- மனோஜ் இருவரும் ஸ்வீட் கொடுத்தவுடன் விஜயா, சந்தோசமான விஷயம் என்று நினைத்துக் கொண்டார். ஆனால், ஷோரூமில் நல்ல வியாபாரம் ஆகிறது என்று ரோகினி இனிப்பு கொடுத்தார். உடனே விஜயா, வீட்டிற்கு குழந்தை வந்தால் தானே நன்றாக இருக்கும் என்று சொல்லி இருந்தார். அந்த சமயம் முத்து செய்த சாதனையை இணையத்தில் புகழ்ந்தார்கள். பின் ஸ்ருதியிடம் ரோகினி பற்றி மீனா சொன்னவுடன் சுருதி அதிர்ச்சியில் உறைந்து இருந்தார்.
இதை ஸ்ருதி, ரவியிடம் சொன்னார். ரவி அதிர்ச்சியாகி முத்துவிடம் சொன்னார். முத்து உடனே அண்ணாமலை இடம் சொல்ல, அண்ணாமலை விஜயாவிடம் ரோகினியை பற்றி பேசி இருந்தார். உடனே விஜயா, கோபத்தில் ரோகினி இடம் சண்டை போட்டு, நீ இதற்கு முன்பு கர்ப்பமாக இருந்தாயா? இது இரண்டாவது குழந்தையா? என்றெல்லாம் கேட்க, ரோகினி பயத்தில் என்ன சொல்வது என்று புரியாமல் அழுதார். கடைசியில் ரோகினி, ஆமாம் இது இரண்டாவது குழந்தை தான். முதல் குழந்தை அபாசன் ஆகிவிட்டது என்று ஒரு புது கதையை சொல்லி இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
ரோகினி சொல்வதைக் கேட்டு எல்லோருமே நம்பி விடுகிறார்கள். பின் இதை மீனா தான் சொன்னார் என்றவுடன் விஜயா பயங்கரமாக திட்டி பேசி இருந்தார். இந்த வாரம் மீனா-சுருதி இருவருமே உட்கார்ந்து பேய் படம் பார்க்கிறார்கள். பேய் படத்தை பார்த்து மீனா ரொம்பவே பயப்படுகிறார். இதை பார்த்த விஜயா கிண்டலாக பேச, உடனே சுருதி, விஜயாவிற்கு பயத்தை காண்பிக்க நினைத்து, பேய் போல் பயங்கரமாக சவுண்ட் எபெக்ட் எல்லாம் வைத்து பயமுறுத்துகின்றார். விஜயாவும், பயத்திலேயே கட்டில் மேலிருந்து கீழே விழுந்து விடுகிறார்.
சீரியல் கதை:
மீனா, வேண்டாம் என்று தடுத்தும், விடாமல் சுருதி பேய் போல் சவுண்ட் கொடுத்துக் கொண்டே இருந்தார்.
கடைசியில் சுருதி செய்த வேலை என்று தெரிந்தவுடன் விஜயா, மீனாவை தான் திட்டிவிட்டு செல்கிறார். மறுநாள் ஸ்ருதி வெளியே வரும்போது மீனாவை இடித்ததால் கையில் இருந்த எண்ணெய் கீழே விழுந்தது. துடைப்பதற்காக மீனா உள்ளே துணி எடுத்து வர போக, அந்த சமயம் வந்த விஜயா வழுக்கி விழுந்து விடுகிறார். கடைசியில் விஜயா, மீனாவை தான் பயங்கரமாக திட்டுகிறார்.
நேற்று எபிசோட்:
உடனே ஸ்ருதி, இது என்னுடைய தவறுதலாக நடந்தது. தேவையில்லாமல் மீனாவை திட்டாதீர்கள் என்று கோபமாக கத்திவிட்டு சென்று விடுகிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று ரோகினி -மனோஜ் இருவருமே விஜயாவை ஏற்றி விடுகிறார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோடில் விஜயாவிற்கு கால் அடிபட்டதால் மீனா வருத்தப்பட்டு அவருக்காக வைத்தியம் ரெடி பண்ணி கொடுக்கிறார். இருந்தும் மீனாவை பயங்கரமாக விஜயா திட்டி விடுகிறார். பின் மீனா சொன்ன மாதிரி காலுக்கு ஒத்தனம் கொடுத்து விட்டு அதை கிச்சனில் வைக்க போகிறார்.
இன்றைய எபிசோட்:
அந்த சமயம் பார்த்து மீனா, ஏதோ அலமாரியில் தேடிக் கொண்டிருக்கும்போது கால் தடுமாறி கீழே விழப் போகிறார். அப்போது முத்து மீனாவை பிடித்து விட, மொத்த மாவு டப்பாவும் விஜயா மேல் விழுந்ததால் பார்ப்பதற்கு காமெடியாக இருந்தார். விஜயாவை பார்த்து எல்லோருமே பயந்து கலாய்த்து இருந்தார்கள். ஸ்ருதி அவரை போட்டோ எடுத்து சோசியல் மீடியா போட்டுவிட்டார். இதுதான் சந்தர்ப்பம் என்று ரோகினி, ஸ்ருதி- மீனாவை பற்றி தப்பு தப்பாக விஜயாவிடம் சொல்ல, விஜயாவிற்கு கோபம் வந்து அவருடைய அம்மாவிற்கு போன் செய்து வர வைத்தார். பின் சுருதி பத்தி சொன்னவுடன் அவர் அம்மாவிற்கு பயங்கர கோபம் வருகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.