விஜயா போட்ட கட்டளையால் கொந்தளித்த முத்து, அதற்கு மீனா செய்த வேலை- விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

0
536
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் ஸ்ருதி, மீனாவை இடித்ததால் கையில் இருந்த எண்ணெய் கீழே விழுந்தது. அந்த சமயம் வந்த விஜயா வழுக்கி விழுந்தார். ஆனால், அதற்கு காரணம் மீனா என்று திட்டி இருந்தார். இதை எல்லாம் பார்த்த சுருதி, விஜயாவை திட்டி விடுகிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று ரோகினி -மனோஜ் இருவருமே விஜயாவை ஏற்றி விட்டார்கள். விஜயாவிற்கு கோபம் வந்து ஸ்ருதி அம்மாவிடம் நடந்ததை சொன்னார். உடனே ஆத்திரத்தில் அவர் மீனாவை பார்த்து ரொம்ப கேவலமாக பேசி இருந்தார்.

-விளம்பரம்-

இதனால் ஸ்ருதி-ரவி, முத்து -மீனா ஆகிய நான்கு பேருக்கும் இடையே சண்டை பயங்கரமாக நடந்தது. இதையெல்லாம் பார்த்து விஜயா சந்தோசப்பட்டார். இந்த வாரம் முத்து சவாரியில் ஒரு நபரை அழைத்துக் கொண்டு வந்தார். அந்த சமயம் பார்த்து மீனாவின் ஸ்கூட்டி, முத்து கார் மீது மோத, ஏதோ தெரியாத நபர்கள் போல இருவரும் சண்டை போட்டு இருந்தார்கள். அப்போது போலீஸ் வந்து விசாரிக்க, உடனே முத்து, இவர் என் மனைவி என்று சொல்ல, சவாரி வந்த நபர், நீங்கள் சொன்ன பேயாட்டம் பொண்ணு இவர் தானா? என்று கேட்டவுடன் மீனாவிற்கு பயங்கர கோபம் வந்து விடுகிறது.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலில் இருக்கும் ரோகினிக்கு மனோஜ்க்கு போன் செய்து பேச, வித்யா உடன் இருக்கிறேன் என்று சொன்னார். அந்த சமயம் பார்த்து ஷோரூமுக்கு வித்யா போனார். உடனே மனோஜ்க்கு சந்தேகம் வருகிறது. மீனாவை சமாதானம் செய்ய முத்து பல ராஜதந்திர வேலைகளை செய்து அல்வா கொடுத்து மீனாவை சமாளித்து விடுகிறார். இன்னொரு பக்கம் மனோஜ், என்னிடம் பொய் சொல்லி எங்கே போனாய்? என்று கேட்க, உனக்கு கருங்காலி மாலை வாங்க போனேன் என்று ரோகினி சமாளிக்கிறார். இருந்தும் மனோஜ் நம்பவில்லை. வழக்கம்போல் ரோகினி ஏதேதோ ட்ராமா செய்து மனோஜை நம்ப வைக்கிறார்.

சீரியல் கதை:

முத்து, மீனா இருவரும் கிரிஷ் வீட்டிற்கு போயி தத்தெடுப்பது பற்றி பேச, ரோகினி அம்மா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். கடைசியில் முத்து, யோசித்து முடிவெடுங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்ப, இதை ரோகினி இடம் அவருடைய அம்மா சொன்னவுடன் ரோகினி ஆவேசப்பட்டு கத்தி இருந்தார். நேற்று எபிசோடில் முத்து- மீனா இருவருமே கிரிஷ்யை தத்தெடுப்பது பற்றி அண்ணாமலையிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். அதற்கு அண்ணாமலை, வீட்டில் எல்லோரிடமும் பேசி முடிவெடுக்கலாம் என்று சொல்லி ஆறுதல் சொல்லி இருந்தார்.

-விளம்பரம்-

நேற்று எபிசோட்:

இதை ஒளிந்து நின்று கேட்ட ரோகினி, விஜயாவிடம் சொல்லி இருந்தார். உடனே விஜயா, கிரிஷை அழைத்து வந்தால் அவர்கள் வீட்டை விட்டு துரத்தி விடுவேன். இதுதான் சந்தர்ப்பம் என்று சொன்னார். அடுத்த நாள் ரோகினி, கிரிஷுக்கு பள்ளியில் அட்மிஷன் போட்டார். பின் தன்னுடைய அம்மா, மகனை சென்னைக்கு அழைத்து வர திட்டம் போட்டார். பின் வீட்டில் மீனா, பூ கட்டிக் கொண்டிருக்க விஜயா, சமைத்து பார்வதி வீட்டிற்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு வா என்று சொன்னவுடன் முத்து கோபம் வந்து சண்டை போடுகிறார். இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், சமைத்து சாப்பாடு கொண்டு வா என்று மீனாவிற்கு ஆர்டர் போட்டு விட்டு விஜயா போகிறார்.

சீரியல் ப்ரோமோ:

மீனாவும் சமைத்து எடுத்துக் கொண்டு போகிறார். அப்போது போகும் வழியில் ஒரு வயதானவர்கள் பசிக்கு மயங்கி இருப்பதை பார்த்து மீனா, அந்த சாப்பாட்டை பரிமாறி விடுகிறார். பின் தன் மாமியாருக்கு ஹோட்டலில் பிரியாணி வாங்கி கொண்டு போய் கொடுக்கிறார். அவர்களும் எதுவும் சொல்லாமல் அமைதியாக சாப்பிட்டு விடுகிறார்கள். ஆனால், விஜயாவிற்கு அந்த பிரியாணி செட் ஆகாமல் ரொம்ப அவஸ்தைப்படுகிறார். அப்போது அண்ணாமலை, நீ எல்லாமே சமைத்து எடுத்துட்டு போனாயே, என்ன ஆச்சு? என்று கேட்பதற்கு விஜயா அவரை முறைக்கிறார், முத்து ஆச்சரியத்தில் பார்க்கிறார்.

Advertisement