பணத்திற்காக மனோஜ் செய்த வேலை, மீனாவுக்கு சப்போர்ட் செய்த விஜயா- சிறகடிக்க ஆசை

0
308
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கேஸ் வாபஸ் வாங்க வக்கீல் 2 லட்சம் பணம் கொடுத்ததால் விஜயா ஒத்துக் கொண்டார். ஆனால், இது யாருக்கும் தெரியாது. பின் சத்யா கேஸ் வாபஸ் வாங்கின விஷயம் அறிந்த முத்து,மீனா வீட்டில் தெரிந்து சந்தோஷப்பட்டார்கள். இன்னொரு பக்கம் சிட்டி, பணத்தை கேட்டு மிரட்ட, எப்படியாவது ரெடி பண்ணி தருகிறேன் என்றார் ரோகினி. பின் மீனா அம்மா குடும்பத்தினர் விஜயாவிடம் மன்னிப்பு கேட்டார்கள். அதன் பின் முத்து, ஏதேதோ சொல்லி விஜயாவை வீட்டிற்கு அழைத்து வந்தார்.

-விளம்பரம்-

பின் விஜயா, மீனா இந்த வீட்ல இருக்கலாம். அவர் வீட்டிலிருந்து யாரும் இங்கே வரக்கூடாது என்று கேவலமாக பேசி இருந்தார். அண்ணாமலை, முத்து எவ்ளோ பேசியும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனை அதை அடுத்து ரோகினி, விஜயா கேஸ் வாபஸ் வாங்கின விஷயத்தை பற்றி பார்வதி இடம் போட்டு வாங்க, அவர் உளறி விட்டார். பின் விஜயா 2 லட்சம் வாங்கி இருந்த பணத்தை பார்வதி காண்பித்தவுடன் ரோகினி ரொம்ப சந்தோசப்பட்டார். இன்னொரு பக்கம் மீனா, தன்னுடைய புதிய ஆர்டருக்கான வேலையை சிறப்பாக செய்திருந்தார்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

இதை பார்த்து ஸ்ருதி-முத்து இருவருமே பாராட்டி இருந்தார்கள். கடந்த வாரம் சுருதி, நீங்கள் இதை சோசியல் மீடியாவில் போட்டால் நிறைய ஆர்டர் கிடைக்கும் என்று சொல்ல, முத்து ஒத்துக் கொண்டார். பின் மீனாவை அழகாக தயார் செய்து மாடலிங் போல் ஸ்ருதி நடிக்க வைத்தார். மீனாவும் ஸ்ருதி சொன்னது போலவே செய்தார். இதையெல்லாம் பார்த்து முத்துவுக்கு ஒரே சந்தோஷம். இதனால் மீனாவை வளைத்து வளைத்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் சிட்டி, ரோகினிக்கு போன் செய்து பணம் கேட்டு மிரட்ட, அவர் பார்வதி வீட்டிற்கு சென்று விஜயாவிற்கு பானிபூரி கொடுத்து ஐஸ் வைத்தார்.

கடந்த வாரம் எபிசோட்:

பின் போனில் சிக்னல் இல்லை என்று சொல்லி பார்வதியின் ரூமிற்கு சென்று பணத்தை எடுத்துக் கொண்டு வந்தார் ரோகினி. இந்த விஷயம் பார்வதி- விஜயாவுக்கு எதுவுமே தெரியவில்லை. இன்னொரு பக்கம் வீட்டில் ரவி – முத்து இருவருமே மீனா- சுருதி செய்வதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள். அந்த சமயம் வந்த மனோஜ், மீனா-முத்து நெருக்கமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியானார். இந்நிலையில் இன்று எபிசோட்டில் முத்து செய்த வேலையை பார்த்த விஜயா, அந்த பொண்ணு யார்? மீனா எங்கே போயிட்டாள்? என்று அவளுக்கு சப்போர்ட் செய்து பேசி இருக்கிறார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

உடனே மீனா, அது நான் தான் அத்தை என்று சொன்னவுடன் விஜயா ஷாக் ஆகிறார். விஜயா தனக்காக சப்போர்ட் செய்து பேசியதை நினைத்து மீனா ரொம்ப சந்தோஷப்படுகிறார். பின் இது புதிய ஆர்டருக்கான விளம்பரம் என்று மீனாவுடன் சொன்னவுடன், இதை எங்கேயாவது செய்து கொள்ளுங்கள் என்று விஜயா திட்டி விட்டு செல்கிறார். அதற்குப் பின்ன ரோகினி, சிட்டி கேட்ட பணத்தை கொடுத்து விட்டு பிஏவை எதாவது செய்ய சொல்லிவிட்டு வருகிறார்.

சீரியல் ட்ராக்:

பின் மனோஜ்- ரோகினி இருவரும் காரில் வந்து கொண்டிருக்கும் போது புது டீலர், போன் செய்து உங்களுடைய பிசினஸ் நல்லா இருக்கிறது. இன்னும் ப்ரொமோட் செய்ய வேண்டும் என்றால் விளம்பரம் எடுக்க வேண்டும். அதற்கு உங்களுடைய குடும்ப ஆட்களை வைத்தே பண்ணுங்கள் என்று சொன்னவுடன் மனோஜ், வேண்டாம் என்றார். உடனே அவர் நாலு ஜோடிக்கு இரண்டு லட்சம் தருகிறேன் என்று சொன்னவுடன் மனோஜ் ஒத்துக்கொள்கிறார். ஆனால், இந்த பணம் விஷயத்தை வீட்டில் சொல்லாமல் நடிக்க வைக்கலாம் என்று மனோஜ் திட்டம் போட ரோகினி சரி என்கிறார். பின் வீட்டில் மனோஜ், டீலர் சொன்ன விஷயத்தை சொல்ல, முதலில் எல்லோருமே மறுத்தாலும் கடைசியில் கடையின் டெவெலப்புக்காக ஒத்துக் கொள்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement