ஷாருக்கானுக்கு பின் இப்படி ஒரு டாக்டர் பட்டம் பெற்ற இந்திய நடிகரெனே பெருமையை பெரும் வீரம் பட நடிகர்.

0
1549
bala
- Advertisement -

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியும் வீரம் பட நடிகருமான பாலாவிற்கு டாக்டர் பட்டம் அறிவிக்கப்ட்டுள்ளது. அன்பு படம் மூலம் ஹீரோவானவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி. தமிழில் காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அதன் பிறகு மலையாள திரையுலகம் பக்கம் சென்ற அவர் கிட்டத்தட்ட அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். தமிழில் பட வாய்ப்புகள் குறையவே இவரது அண்ணன் சிவா, அஜித் நடித்த ‘வீரம்’ படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பை கொடுத்தார்.

-விளம்பரம்-

அந்தப்படத்தில் நான்கு தம்பிகளில் ஒருவராக நடித்திருப்பார் பாலா. வீரம் படத்திற்கு பிறகு வேறு எந்த தமிழ் படத்திலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பாலாவிற்கு கடந்த 2010 ஆம் ஆண்டு அம்ருத்தா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அம்ருதா மலையாளத்தில் நடைபெற்ற ஐடியா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருவருக்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.

- Advertisement -

குழந்தை பிறந்த சில ஆண்டுகளிலேயே பாலுவும், அம்ருதாவும் பிரிந்து விட்டனர். குடும்பத்தாரை பிரிந்தாலும் நடிகர் பாலா தொடர்ந்து பல்வேறு விதமான சமூக வேலைகளை செய்துவந்தார். இப்படி ஒரு நிலையில் அமெரிக்காவில் உள்ள ராயல் அமெரிக்கன் பல்கலைக்கழகம் நடிகர் பாலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. நடிகர் பாலவிற்கு மனிதாபிமானம் மிக்க செயல்பாடுகள் என்கிற பிரிவில் இந்த டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

மனிதாபிமானம் மிக்க செயல்பாடுகள் என்கிற பிரிவில் இந்த டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஷாருக்கானுக்கும், தற்போது தென்னிந்தியாவில் நடிகர் பாலாவுக்கும் என இருவருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பது தான் இதில் குறிப்பிடத்தக்க விஷயம். அதே போல தென்னிந்தியாவிலேயே மனிதாபிமானத்திற்காக டாக்டர் பட்டம் பெற்ற முதல் நபரான நடிகர் பாலாவை, வரும் ஜன-24ஆம் தேதி, கேரள மாநில முதல்வர் மாண்புமிகு. திரு.பினராயி விஜயன் கவுரவிக்க இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement