சாய்பல்லவி குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த அயலான் படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
இந்த படத்தை ஆர் ரவிக்குமார் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், பாலா சரவணன், பானுப்ரியா உட்பட பல பாலா நடித்திருந்தார்கள். இதனை அடுத்து சிவகார்த்திகேயன் அவர்கள் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் ருக்மணி வசந்த், மோகன்லால், வித்யூத் ஜம்வால் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
அமரன் படம்:
அதை தொடர்ந்து தற்போது இவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் அமரன் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை கமலஹாசன் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரிக்கிறது. மேலும், முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.
படம் குறித்த தகவல்:
இந்த படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற பல மொழிகளில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் தீபாவளியை பண்டிகை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன்- சாய் பல்லவி இருவருமே பங்கு பெற்றிருந்தார்கள்.
சிவகார்த்திகேயன் பேட்டி:
அப்போது சிவகார்த்திகேயன், இந்த படத்தில் நானும் சாய் பல்லவியும் கொஞ்ச நாட்கள் மட்டும் தான் நாங்கள் ஒன்றாக இணைந்து நடித்தோம். அவர் சிறப்பாக தன்னுடைய வேலையை செய்திருக்கிறார். நான் தொலைக்காட்சியில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போதே எனக்கு சாய் பல்லவியை தெரியும். ராஜ்குமார் பெரியசாமி அவர்கள் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியை இயக்கியிருந்தார். அதில் சாய்பல்லவி நடனமாடிருந்தார், நான் தொகுத்து வழங்கியிருந்தேன். அதுமட்டுமில்லாமல் நான் தொகுத்து வழங்கிய பல நிகழ்ச்சிகளை ராஜ்குமார் பெரியசாமி தான் இயக்கியிருந்தார்.
சாய்பல்லவி குறித்து சொன்னது:
அதனால் எங்களுக்குள் ஒரு நீண்ட நாள் பழக்கம் இருக்கிறது. இந்தப் படத்தின் போது தான் நாங்கள் மூவரும் சந்தித்துக் கொண்டது எல்லாம் இல்லை. அதேபோல் கோயம்புத்தூரில் ஒரு நிகழ்ச்சி நடந்த போது அதை ராஜ்குமார் பெரியசாமி தான் இயக்கியிருந்தார். நான் அதை தொகுத்து வழங்கியிருந்தேன். சாய் பல்லவி அந்த நிகழ்ச்சியில் கலந்திருந்தார். ஒரு சேனலில் இருந்து வந்து மூன்று பேருமே இந்த படத்தில் இணைந்திருக்கிறோம். சாய்பல்லவி உடன் இணைந்து நடிக்கும் போது நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன் என பேசி இருக்கிறார்.