அமரன் படம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை எல்லாம் இருக்கிறது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த அயலான் படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

இந்த படத்தை ஆர். ரவிக்குமார் இயக்கியிருந்தார். அதை தொடர்ந்து தற்போது இவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் அமரன் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை கமலஹாசன் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரிக்கிறது. மேலும், மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார்.
அமரன் படம்:
ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற பல மொழிகளில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் தீபாவளியை பண்டிகை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், சாய் பல்லவியின் கதாபாத்திரத்தின் வீடியோவை படக்குழு வெளியிட்டு இருந்தது.

படத்தின் ப்ரோமோசன் விழா :
அதில் சாய்பல்லவி, இந்து ரெபாக்கா வர்கீஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் நடந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, கமலஹாசன், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோருடன் மேஜர் முகுந்தனின் மனைவி இந்துவும் பங்கேற்று இருந்தார்கள்.
தொகுப்பாளர் கேள்வி:
மேலும் , விழாவில் தொகுப்பாளர், படக்குழுவினரிடம் பல கேள்விகளை கேட்டிருந்தார்கள். அப்போது சிவகார்த்திகேயனிடம், நீங்கள் துப்பாக்கியை கையில் பிடித்த உடன் எப்படி உணர்ந்தீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு சிவகார்த்திகேயன் சிரித்தபடி, துப்பாக்கி எப்போதும் ரொம்ப ரொம்ப கனமானது. அதை சரியாக கையாள வேண்டும். அதை முடிந்த அளவுக்கு சரியாக கையாண்டு இருக்கிறோம் என்று நினைக்கிறேன்.
’துப்பாக்கி கனம் எப்படி இருக்கு.?‘ G.O.A.T படத்தில் விஜய் கொடுத்த துப்பாக்கி குறித்து மறைமுகமாக தொகுப்பாளினி கேட்ட கேள்விக்கு, சிரித்தபடி பதில் கொடுத்த சிவகார்த்திகேயன்... சைலன்டாக கவனித்த கமல்ஹாசன்.!#Chennai | #Amaran | #Sivakarthikeyan | #GOAT | #ThalapathyVijay |… pic.twitter.com/4kKgMJuZOZ
— Polimer News (@polimernews) October 7, 2024
சிவகார்த்திகேயன் கொடுத்த பதில்:
அதற்கான தைரியத்தை எங்களுக்கு கொடுத்தது உலகநாயகன் கமலஹாசன் தான். இந்த படத்தை நான் தேர்ந்தெடுக்கவில்லை. என்னை தான் இந்த படம் தேர்ந்தெடுத்து இருக்கிறது. இதை முக்கிய பொறுப்பாக கருதி நான் கடின உழைப்பை கொடுத்திருக்கிறோம். மேஜர் முகுந்தன் ஒரு சூப்பர் ஹீரோ. இது அவர் வாழ்க்கையை திரையில் சொல்வதற்கு எனக்கு கொடுத்த சிறப்பான வாய்ப்பு என்று கூறி இருக்கிறார். இதன் மூலம் கோட் படத்தில் விஜய் கொடுத்த துப்பாக்கியை குறித்து தான் மறைமுகமாக தொகுப்பாளினி கேட்டு இருக்கிறார் என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.






