யார் இந்த சிவாஜி கண்ணன் ? திடீரென இவரது வீடியோ லைக்குகளை குவிக்க காரணம் என்ன ?

0
987
sivaji
- Advertisement -

ஒரு திருமண நிகழ்ச்சியில் நடிகர் சிவாஜி கணேசன் தோன்றி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்பெல்லாம் ஒரு திருமணம் நடைபெறுகிறது என்றால் திருமணத்திற்கு இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பே சொந்தக்காரர்கள் அனைவரும் வீட்டிற்கு வந்து தங்கி திருமண நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு வேலைகளையும் ஒவ்வொருத்தரும் எடுத்து போட்டு செய்வார்கள். அப்போதெல்லாம் சாப்பிட உட்கார்ந்தால் சாப்பிட பரிமாறுபவர்கள் எல்லாம் நமது நண்பர்கள், தெரிந்தவர்கள், சொந்தக்காரர்கள், மாமா, சித்தப்பா, பெரியப்பா, அண்ணன், தம்பி இதுபோன்று தெரிந்த முகங்கள் தான் நமக்கு சாப்பாடு பரிமாறுவார்கள்.

-விளம்பரம்-

ஒரு திருமணத்தில் வைத்த இரண்டு மூன்று திருமணங்கள் எல்லாம் பேசி முடிப்பார்கள் அதில் இரண்டு மூன்று பிரச்சனைகளும் நடைபெறும். இப்போதெல்லாம் திருமண நாட்கள் வந்தால் திருமண முந்தைய நாளை சொந்தக்காரர்களை எதிர்பார்ப்பது கடினமான இருக்கிறது. அந்த அளவிற்கு எல்லாம் அவர்வர் வேலைகளை பார்த்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது உள்ள திருமணங்களில் வெளி மாநிலங்களில் திருமண நிகழ்ச்சியில் நடப்பதை எல்லாம் நாகரீகம், பண்பாடு என்று நம்மளும் நமது திருமண நிகழ்ச்சிகளில் வைக்க ஆரம்பித்துவிட்டோம். உதாரணமாக சில கல்யாண வீடுகளில் கேரளா செண்டை மேளம் இருக்கும் சில கல்யாண வீடுகளில் குதிரை வண்டிகள் வைத்து தான் மாப்பிள்ளை பொண்ணும் செல்வார்கள்.

- Advertisement -

திருமணத்தில் நடன நிகழ்சிகள் :-

இப்போது அனைத்து கல்யாண வீடுகளிலும் கச்சேரிகளும் நடன நிகழ்ச்சிகளும் அரங்கேற ஆரம்பித்து விட்டனர். கல்யாணம் ஒரு பக்கமாக நடந்து கொண்டிருக்கும் இன்னொரு பக்கம் சிலர் நடனமாடிக் கொண்டு கல்யாணத்திற்கு வந்தவர்கள் உற்சாகப்படுத்தி கொண்டு இருப்பார்கள். இன்னும் சில கல்யாண நிகழ்ச்சிகளில் மாப்பிள்ளையும், பென்னையும் அழைத்து வரும்போது அவர்களுக்கு முன் பல வித பாட்டுகளை போட்டு வித்தியாசமாக நடனம் ஆடிக்கொண்டு ஆண் பெண் இருவரும் ஜோடி ஜோடியாக நடனமாடி இருப்பார்கள். அதன்பிறகு இது நாளடைவில் வளர்ந்து மணப்பெண் மணப்பையன் கூட அவர்களும் நடனம் கற்பித்து அவர்களையும் நடனம் ஆடி கோலாலமாக வர ஆரம்பித்தனர்.

திருமண நிகழ்சியில் சிவாஜி கனேசன் :-

இது போன்று தான் ஒரு கல்யாண நிகழ்ச்சி ஒன்று வழக்கம்போல் இல்லாமல் சிவாஜி கணேசன் உருவ அமைப்பில் இருக்கும் ஒருவர் வந்து நடனமாடி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அந்த திருமணத்தில் சிவாஜி கணேசனின் ஒளிமயமான எதிர்காலம் என்ற பாடலுக்கு அச்சு அசலாக சிவாஜி கணேசனின் திரையில் எப்படி தத்துரூபமாக நடிப்பாரோ அதேபோன்று முக பாவனையுடன் அந்த நபர் நடித்துக் காட்டினார் மற்றும் சிவாஜி கணேசனின் அந்த நடிப்பை யூடியூபில் அப்லோடு செய்திருக்கின்றனர். இப்போது இந்த வீடியோ பல பேரால் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி கொண்டிருக்கிறது இந்த வீடியோவை பார்த்த பலரும் மறைந்த சிவாஜி கணேசன் அவரை உயிரோடு கண் முன் நிப்பாட்டியதற்காக உங்களுக்கு வாழ்த்துக்கள் என்றும்.

-விளம்பரம்-

யார் அந்த சிவாஜி :-

எங்கள் நடிகர் திலகத்தை நாங்கள் இன்னும் இழக்கவில்லை அவர் உங்கள் உருவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றும் கூறினார்கள். இவரின் இயற்பெயர் கண்ணப்பன் எட்டு வயதில் மேடை ஏறியவர் 64 ஆண்டு காலமாக இதில் இருக்கிறார். ஆரம்ப காலத்தில் நடன குழு உடன் இணைந்து சிவாஜி கணேசன் திரையில் தோன்றி நடித்த பாடல் காட்சிகளை அச்சு மாறாமல் பல மேடைகளை கலக்கி உள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தனது மானசீக குருவாக மனதில் நிறுத்தி அவரின் நடை உடை பாவனைகளை பிரதிபலிக்கும் படி ரசிகர்களின் முன்னிலையில் பல சுபநிகழ்ச்சிகள் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வெறும் கண்ணனாக இருந்த இவரை சிவாஜி கணனாக ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

சிவாஜி கண்ணன் பல விருதுகள் வாங்கியுள்ளார் :-

நடிகர் திலகத்தை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் அவரின் மகன்கள் நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் உடன் பழக வாய்ப்பு கிடைக்கப்பெற்றது பெரும் பாக்கியமாக கருதி உள்ளார். சினிமாவில் தனது திறமையை காட்டாவிட்டாலும் பல மேடை நாடகங்களை முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது தேசிய விருது, ஜாம்பவான் விருது, கிங்மேக்கர் விருது, சின்ன சிவாஜி விருது, அன்னை தெரேசா விருது, நடிகர் திலக சக்கரவர்த்தி விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, பெண் சிந்திய மக்கள் இயக்க புரட்சி விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார் சிவாஜி கண்னண்.

Advertisement