சிவாஜி சொத்து வழக்கு – உயில் தொடர்பாக சகோதாரிகள் பரபரப்பு குற்றச்சாட்டு. விவரம் இதோ.

0
509
sivaji
- Advertisement -

சொத்து வழக்கில் சிவாஜியின் மகள்கள் நீதிமன்றத்தில் கூறி இருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்ற பெயரை யாராலும் மறக்க முடியாது. இவர் 1952ல் பராசக்தி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருந்தார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 288 படங்களுக்கும் மேல் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இன்றும் இவருடைய நடிப்புக்கு யாருமே நிகர் இல்லை என்று தான் சொல்லணும்.

-விளம்பரம்-
sivaji

இந்த நிலையில் நடிகர் சிவாஜி கணேசனின் சொத்துக்கள் தொடர்பாக அவருடைய மகள்கள் தொடர்ந்து இருக்கும் வழக்கு சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சிவாஜி கணேசன் தான் நடிகராக இருந்தபோது பல இடங்களில் சொத்து வாங்கி இருந்தார். அதனுடைய இன்றைய மதிப்பு 271 ஒரு கோடி ஆகும். சிவாஜிக்கு ராம்குமார்,பிரபு,சாந்தி,ராஜ்வி என்று நான்கு பிள்ளைகள். மேலும், சிவாஜி மறைவுக்குப் பின்பு அவருடைய வாரிசுகள் அவருடைய சொத்துக்களை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் தங்களுக்கு தெரியாமல் சில சொத்துகளை நடிகர் பிரபு மற்றும் அவரது அண்ணன் ராம்குமார் ஆகியோர் விற்று இருக்கிறார்கள்.

- Advertisement -

இதையும் பாருங்க : இந்த ரஜினி, கமல் படத்தோடு உன் படத்த ரிலீஸ் பண்றயே உனக்கு எவ்ளோ திமிர் இருக்கும்னு என் படத்த திருப்பி கொடுத்தாங்க – முதல் பட அனுபவம் பகிர்ந்த பார்த்திபன்.

சிவாஜி சொத்து விவகாரம்:

சில சொத்துக்களை அவர்களுடைய மகன்களின் பெயருக்கு மாற்றம் செய்து இருக்கிறார்கள் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவாஜியின் மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் தங்களுடைய சகோதரர்கள் மீது வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள். அதில் அவர்கள் கூறியிருப்பது, என்னுடைய தந்தை சிவாஜி சம்பாதித்த சொத்து தொடர்பாக அவர் உயில் எழுதி வைக்காத நிலையில் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் ஜோடிக்கப்பட்ட உயில் தயாரித்து எங்களை ஏமாற்றி பல சொத்துக்களை விற்று விட்டார்கள். எங்களின் தாய்வழி சொத்துக்களில் கூட எங்களுக்கு பங்கு வழங்கவில்லை.

-விளம்பரம்-
sivaji

சாந்தி மற்றும் ராஜ்வி கொடுத்த புகார்:

அவர் சேர்த்து வைத்த சுமார் 10 கோடி மதிப்புள்ள 1000 பவுன் தங்கம், வைரம் மற்றும் வெள்ளி பொருட்களையும் எங்களுக்கு தராமல் ஏமாற்றி விட்டார்கள். இதுபோல கோபாலபுரத்தில் இருந்த வீட்டை 5 கோடி ரூபாய்க்கு பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் விற்றுவிட்டார்கள். ராயப்பேட்டையில் உள்ள நான்கு வீடுகள் மூலம் வரும் வாடகையில் கூட எங்களுக்கு எந்த பங்கும் வழங்கவில்லை. இந்து வாரிசுரிமை சட்டம் 2005 ஆம் ஆண்டு படி தந்தை சிவாஜி கணேசனின் சொத்துக்களில் எங்களுக்கும் உரிமை உள்ளதால் இந்தப் பிரச்சினையில் நீதிமன்றம் தலையிட்டு பாகப்பிரிவினை செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறி இருந்தார்கள்.

நீதிபதி முன் விசாரணை:

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி முன் விசாரிக்கப்பட்டது. நடிகர் சிவாஜி கணேசனின் மகள் சாந்தி, ராஜ்வி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அனைத்து சொத்துக்களையும் சம பங்கு உள்ளதாக கூறி ராம்குமார் அவர்கள் எங்களிடமும் (சாந்தி, ராஜ்வி), பிரபுவிடமும் 2013ல் பொது அதிகார பத்திரத்தை எழுதி வாங்கி கொண்டார். 1999ல் எழுதப்பட்ட பதிவு செய்யப்படாத நடிகர் சிவாஜியின் உயில் 2021ல் தான் வெளிவந்தது. அதில் எங்களுக்கு சொத்தில் உரிமையில்லை என்று கூறப்படுகிறது. மேலும், உயிலை மெய்ப்பித்து சான்று கோரிய வழக்கு நிலுவையில் இருக்கிறது. நடிகர் சிவாஜி கணேசன் எழுதியதாக கூறப்படும் உயில் முற்றிலும் ஜோடிக்கப்பட்டது.

சாந்தி மற்றும் ராஜ்வி தரப்பு வாதங்கள்:

உயில் சட்டபடி மெய்ப்பித்து சான்று பெறாததால் அது செல்லத்தக்கதல்ல என்று சாந்தி மற்றும் ராஜ்வி தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், பாக பிரிவினை கோரி கடந்த 2021ம் ஆண்டு அனுப்பிய நோட்டீசுக்கு அளித்த பதிலில் தான் 1999ம் ஆண்டு சிவாஜி கணேசன் உயில் எழுதி வைத்து ள்ளதாக முதல் முறையாக தெரிவித்தார்கள். சாந்தி தியேட்டரில் இருந்த தந்தை சிவாஜியின் 50 பங்குகளும், தாய் கமலாவின் 650 பங்குகளும் முறைகேடாக ராம்குமார் மற்றும் பிரபுவின் மகன்களின் பெயருக்கு மாற்றப்பட்டது என்று சாந்தி மற்றும் ராஜ்வி தரப்பில் வாதங்கள் முடிவடையாமல் சென்று கொண்டு இருப்பதால் வழக்கை நீதிபதி தள்ளி வைத்திருக்கிறார்.

Advertisement