நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இந்த ஆண்டுதான் மிகவும் வெற்றிகரமான ஆண்டு என்றே கூறலாம். அதற்கு காரணம், இந்த ஆண்டு மே 6-க்கும் மேற்பட்ட படங்களில் கமிட் ஆகியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். சீமா ராஜா படத்தைத் தொடர்ந்து தற்போது ராஜேஷ் இயக்கத்தில் ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் நட்சத்திரம் படத்திலும் ‘இரும்புத்திரை’ புகழ் பி எஸ் மித்ரன் உள்ள ‘ஹீரோ’ படத்திலும் நடித்து வருகிறார். மேலும், இவர்களை தொடர்ந்து பாண்டிராஜ், சிறுத்தை சிவா போன்ற பல்வேறு இயக்குனர்களிடம் பணியாற்றி இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
இதையும் படியுங்க : சிவகார்த்திகேயன் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளாராம்.! அதுவும் சிம்பு படத்தில்.! அவரே சொன்ன தகவல்.!
இந்த நிலையில் இவர் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தினை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பின்னர் விக்னேஷ் சிவன் இயக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயனின் 17 வது படமான இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்புகள் வரும் ஜூலை மாதம் துவங்க இருக்கிறது. மேலும், 2020 ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் இந்த படத்தை பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.