தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ராதிகா சரத்குமார். இவர் 80, 90 காலகட்டத்தில் மிகப் பிரபலமான கதாநாயகியாக திகழ்ந்து கொண்டிருந்தார். தற்போது இவர் குணச்சித்திர வேடங்களில் கலக்கிக் கொண்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தாய் கிழவி.

இந்த படத்தை இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பால சரவணன், சிங்கம் புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தான் தயாரித்திருக்கிறார். கடந்த வாரம் வெளியாகிருக்கும் இந்த படம் தாய் கிழவி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
தாய் கிழவி படம்:
மேலும், முதல் நாளிலிருந்து இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஒரே வாரத்தில் தாய் கிழவி படம் 25 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. ஒரு பெண் கதாபாத்திரம் அதுவும் ஒரு வயதான முதியவர் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இவ்வளவு குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவில் வசூல் செய்திருப்பது பெரிய சாதனை.
https://www.youtube.com/watch?v=p_jvIBTCWeM
சிவகார்திகேயன் சொன்னது:
இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய வெற்றி விழா நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய மனைவி ஆர்த்தி குறித்து கூறியது, எனக்கு திருமணம் ஆன நாளிலிருந்து என்னுடைய மனைவி ஆர்த்தி தான் வரவு செலவு கணக்குகளை எல்லாம் பார்க்கிறார். என்னுடைய அக்கவுண்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது கூட எனக்கு தெரியாது. ஆர்த்திக்கு தான் தெரியும். ஊருக்கு போகணும் என்றால் கூட டிக்கெட்டுக்கு பணம் கொடு என்று நான் ஆர்த்தியிடம் கேட்டு தான் வாங்கி செல்வேன்.
Sivakarthikeyan Speech | மனைவியிடமே செலவுக்கு பணம் கேட்பேன்
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) March 11, 2026
எனது நிதி ஆதாரங்கள் அனைத்தையும் என்னுடைய மனைவியே கவனித்துக் கொள்கிறார்
எனது தனிப்பட்ட செலவுகளுக்கு கூட மனைவியிடமே கேட்டு பெறுவேன்
மனைவி சிறப்பாக நிதியை கையாள்வதால் தான் என்னால் தயாரிப்பாளர் ஆக முடிந்தது
- ‘தாய்… pic.twitter.com/OrOJKYkFAE
ஆர்த்தி பற்றி சொன்னது:
ஆர்த்தி கொடுப்பதை நான் சந்தோஷமாகவும் பெருமையாகவும் வாங்கிக் கொள்கிறேன். அதை நான்
பெருமையாகத்தான் நினைக்கிறேன். அவர் கணக்கு வழக்குகளை எல்லாம் பார்த்துக் கொள்ளவில்லை என்றால் என்னால் தயாரிப்பாளராக ஆகி இருக்க முடியாது. இந்த படத்தை பார்த்தபோது ஆர்த்தி தான் எனக்கு பவுனு தாயாக தெரிந்தால் என்று கூறியிருக்கிறார்.






