தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல், கௌதமேனன், பிரியாமணி உட்பட பாபி நடித்து இருக்கிறார்கள். பிரபலமான தயாரிப்பு நிறுவனமான KVN தான் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்த படம் ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இதை அடுத்து ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால் படம் வெளியாக தாமதமாகுவதால் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருந்தது. மேலும், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதற்கான தீர்ப்பு ஜனவரி ஒன்பதாம் தேதி வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்திருந்தார். இதை அடுத்து படத்தினுடைய ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக படத்தினுடைய தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.
ஜனநாயகன் சர்ச்சை:
சென்சார் சான்றிதழ் கிடைக்க தாமதமாவதற்கெல்லாம் காரணம் அரசியல் ரீதியாக நடக்கும் பழிவாங்கல் செயல் என்றெல்லாம் சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். மேலும், படம் வெளியாக ஓரிரு நாட்கள் மட்டுமே இருந்த நிலையில் தணிக்கை சான்று கிடைக்கவில்லை என்று தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருந்தது. விசாரணையில் தணிக்கை குழுவில் 5 நபர்களில் நான்கு பேர் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் பேட்டி:
ஒருவர் மட்டும் தான் ஆட்சபனை தெரிவித்து இருக்கிறார். அதோடு அவர் மறு ஆய்வுக்கு மனு தாக்கல் செய்திருக்கிறார். மேலும், இன்று வழக்கு விசாரணைக்கு வந்திருக்கிறது. இந்த வழக்கை 21ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்திருக்கிறது. பொங்கலுக்கும் படம் வெளியாகாததால் ரசிகர்கள் எல்லோருமே மிகுந்த ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அளித்த பேட்டி சிவகார்த்திகேயன், இது எதிர்பார்க்காத ஒன்று.
View this post on Instagram
ஜனநாயகன் பற்றி சொன்னது:
படம் தள்ளிப்போகும் என்று யாரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை. இரண்டு படங்களையும் ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். கடந்த 15 நாட்களில் எதிர்பாராத பல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றது. நான் யாருடனும் போட்டி பட விரும்பவில்லை. இந்த திரை உலகில் அனைவருக்கும் இடம் இருக்கிறது. நான் போட்டி போட நினைத்திருந்தால் ஒரு தடகள வீரராகவோ, குத்து சண்டை வீரராகவோ மாறியிருப்பேன் என்று கூறியிருக்கிறார்.






