ஒரே நாளில் பேட்ட மற்றும் விஸ்வாசம் படத்தை பார்த்த சிவகார்த்திகேயன்.! என்ன கூறியுள்ளார் தெரியுமா.!

0
1052
- Advertisement -

சூப்பர் ஸ்டாரின் பேட்ட மற்றும் அல்டிமேட் ஸ்டாரின் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் நேற்று (ஜனவரி 10) வெளியாகி இருந்தது. இரண்டு தரப்பு ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்த இந்த இரண்டு படங்கலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

-விளம்பரம்-

கார்த்திக் சுப்புராஜுடன் முதல் முறையாக இணைந்துள்ள ரஜினி ‘பேட்ட’ படத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் தனது முழு ஸ்டைலையும் இறக்கியுள்ளார். அதே போல அஜித், விஸ்வாசம் படத்தில் தனது சென்டிமெண்டால் ரசிகர்களை மனமுருக செய்துள்ளார்.

- Advertisement -

இரண்டு திரைப்படங்களையும் பெரும்பாலான சினிமா ரசிகர்கள் ஒரே நாளில் பார்த்து முடித்துள்ளனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனும் விஸ்வாசம் மற்றும் பேட்ட படத்தை ஒரே நாளில் பார்த்துவிட்டு தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், பேட்ட திரைப்படம் மிக மாஸாக உள்ளது என்றும் அனிருத் மியூசிக் வேற லெவலில் இருக்கிறது. ஸ்டைலிஷ் மற்றும் எனர்ஜியாக ரஜினி நடித்துள்ளார். சுத்தமான தலைவர் படம் என்று கூறியுள்ளார். மேலும், விஸ்வாசம் படத்தில் அஜித் ரௌண்டு கட்டி அடித்துள்ளார். ஜாலியாகவும், சென்டிமெண்டாகவும் படம் இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார் சிவா.

-விளம்பரம்-
Advertisement