இதுலேயே சுத்திட்டு திரிய கூடாது. இயக்குனருடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட எஸ் கே.

0
2493
sivakarthikeyan
- Advertisement -

தமிழ் திரையுலகில் நுழைந்த குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் முதன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தவர். அதற்குப் பின்னர் தான் சினிமா படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் நடிகர் மட்டுமல்லாமல் சிங்கர், கம்மிடியன், மிமிக்கிரி, தொகுப்பாளர் என பல திறமைகளைக் கொண்டவர். சிவகார்த்திகேயன் அவர்கள் பல சூப்பர் டூப்பர் படங்களை கொடுத்து உள்ளார். இவர் நடிப்பை தாண்டி படங்களை தயாரித்தும் வருகிறார்.

-விளம்பரம்-

கடந்த ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘நம்ம வீட்டு பிள்ளை’ படம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இதனை தொடர்ந்து இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வந்த படம் “ஹீரோ”. இந்நிலையில் சிவகார்த்திகேயன் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஃபோட்டோவை பதிவிட்டு உள்ளார்.

- Advertisement -

அதில் அவர் கூறியது, கேப்ஷனாக மறுபடியும், போறபோக்குல ஒரு ஃபோட்டோ ஷூட். படத்தை எடுத்தவர் நவ்நீத் என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ஒரு கமெண்ட் போட்டு உள்ளார். அதில், போறபோக்குல பண்ணதுக்கே இப்டின்னா? அப்போ ப்ளான் பண்ணி பண்ணியிருந்தா வேற மாறி போலயே, ஸ்டைலா இருங்கீங்களே என்று பதில் பதிவு போட்டார்.

அந்தப் பதிவுக்குப் பதில் அளிக்கும் வகையில் சிவகார்த்திகேயன் கூறியது, உங்க பட ஹீரோல பாஸ் ஸ்டைலா தான் இருப்பாரு. அதற்கு நெல்சன் ‘இத்தோட முடிச்சிப்போம், நான் போய் வடிவேலு காமெடி பாக்கறது நல்லது ‘ என்று எஸ் கேவிற்கு பதில் அளிக்க, ஆமா, கிளம்பு, எப்போ பாத்தாலும் இன்ஸ்டால, நீ இங்க என்ன பண்றனு தெரியும். அதற்கு நெல்சனோ, யாரு நாங்க ? தம்பி போங்க தம்பி, நீங்க போஸ்ட் போட்டா கமன்ட் போட தான் இன்ஸ்டால சுத்திட்டு இருக்கோம். என்ன போயி தப்பா பேசுறீங்க. அதற்கு எஸ் கே, கமெண்ட போட்டோமா ரெண்டு கலாய் கலாய்ச்சமா கடைய சாத்திட்டு போய் காபி தண்ணிய குடிச்சம்மான்னு இருங்க என்று கமன்ட் போட்டார். சும்மா இன்ஸ்டாலேயே சுத்திட்டு திரிய கூடாது என்று கலாய்த்து பதில் போட்டார்.

-விளம்பரம்-
Advertisement