தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிகர் மட்டுமல்லாமல் சிங்கர், கம்மிடியன், மிமிக்கிரி, தொகுப்பாளர் என பல திறமைகளைக் கொண்டவர். கடந்த ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘நம்ம வீட்டு பிள்ளை’ படம் மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இந்த படம் குடும்ப கதை குறிப்பாக அண்ணன், தங்கை பாசத்தை மையப்படுத்திய படமாக இருந்தது. இதனை தொடர்ந்து இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த படம் “ஹீரோ” படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
தற்போது நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்டர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து வருகிறார். இந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயனின் 35வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் கூட வெளியாகி இருந்தது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த நம்ம வீட்டு பிள்ளை படத்தில் இடம்பெற்ற காந்தகண்ணழகி என்ற பாடலுக்கு நிவி என்ற குழந்தை நடனமாடி இருந்தது.
மேலும், அந்த வீடியோவை பகிர்ந்த அந்த நபர், பாருங்க எவ்ளோ சீக்கிரம் வரா காந்தகண்ணழகி பாட்டை கேட்டதும். இதுவரை அந்த பாடலை பல தடவை அவள் கேட்டிருப்பாள் இருப்பினும் அவளுக்கு சலிப்பு தட்டல என்று பதிவிட்டிருந்தார். இந்த வீடியோவை கண்ட சிவகார்த்திகேயன், ப்பா, என்னா ஸ்பீடு, சூப்பர் கியூட் நிவி பாப்பா என்று கமன்ட் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
சிவகார்த்திகயேன் பாடலுக்கு இப்படி குழந்தைகள் நடனமாடுவது புதிதான விஷயம் ஒன்றும் இல்லை. இதே போல இதே பாடலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் குழந்தை ஒன்று ஆடி இருந்தது. அந்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலானது. இப்படி சிவகார்த்திகேயன் குழந்தைகளின் மனதில் இடம் பிடித்துவிட்டார். ஆனால், இதனை பல ஆண்டுக்கு முன்பே தளபதி விஜய் மேடையில் கூறி இருந்தார் என்பதும் இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
வீடியோவில் 8 :47 நிமிடத்தில் பார்க்கவும்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சிவகார்த்திகேயன், விஜய் விருது வழங்கும் விழாவில் சிவகார்த்திகேயன் Entertainer of the year என்ற விருதை வாங்கி இருந்தார். இந்த விருதை தளபதி விஜய் தான் சிவகார்திகேயனுக்கு கொடுத்திருந்தார். அப்போது பேசிய விஜய், சிவகார்த்திகேயன் நடிப்பாகட்டும், டான்ஸ் ஆகட்டும் நன்றாக பன்றார். காமெடி பற்றி சொல்லவே தேவையில்லை. குறிப்பா குழந்தைகள் அனைவருக்கு சிவகார்த்திகேயனை பிடித்திருக்கிறது. அவரு பிடிச்சிட்டாரு கிட்ஸ் எல்லாரையும் பிடிச்சிட்டாரு.