ஓட்டு போட்டுவிட்டு போஸ் கொடுத்த எஸ்.கே, விஜய் வந்ததை பார்த்து என்ன செய்தார் பாருங்க – பாக்கவே கஷ்டமா இருக்கில்ல.

0
39994
sivakarthikeyan
- Advertisement -

டிவி நிகழ்ச்சியில் மேடை கலைஞராக அறிமுகமாகி பின்னர் தொகுப்பாளராக மக்கள் மனதில் இடம்பிடித்து தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் 3 ஏகன் போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்த சிவகார்த்திகேயன் பின்னர் மனம் கொத்தி பறவை மெரினா போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார் அதன் பின்னர் இவர் நடித்த பல்வேறு படங்கள் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்து இருக்கிறது.

-விளம்பரம்-

நடிகராக மட்டுமில்லாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என்று பன்முகங்களை கொண்டிருக்கிறார் சிவர்த்திகேயன். சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் ஆன பிறகு எண்ணற்ற பிரச்சினைகளை சந்தித்து இருக்கிறார். ரெமோ படத்தில் இசை நிகழ்ச்சியில் கூட நடிகர் சிவகார்த்திகேயன், தன்னை பலபேர் வளர விடாமல் தடுக்கிறார்கள் என்று மேடையில் கண்ணீர் விட்டு அழுதது அனைவரும் அறிந்த ஒரு விஷயம்தான்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் சிவகார்த்திகேயனின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஓட்டுப் போட்டுவிட்டு வரும் சிவகார்த்திகேயன், பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்து நிற்கிறார். அப்போது பின்னால் வந்து கொண்டிருப்பதை பார்த்து ‘விஜய் சார் வர்றார்’ என்று கூறி விட்டு ஓரமாக நின்று விடுகிறார். பின்னர் பத்திரிகையாளர்கள் அனைவரும் விஜயை நோக்கி கேமராவை திருப்பி விடுகிறார்கள். இந்த வீடியோவை பார்க்கும் போது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்திற்கு பின்னர் ஒரு மாபெரும் ஹிட் கொடுக்க காத்துக்கொண்டிருக்கிறார்.சிவகார்த்திகேயன் இறுதியாக ஹீரோ படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது இதைத் தொடர்ந்து தற்போது டாக்டர் மற்றும் அயலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த 2 திரைப்படத்தின் மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement