தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான சுந்தர்சி சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். ஆனால், இவர் சின்னத்திரையில் இயக்குனராக அடி எடுத்து வைத்தது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நந்தினி என்ற தொடர் மூலம் தான். சுந்தர் சியின் மனைவியும் நடிகையுமான குஷ்புவின் சொந்த தயாரிப்பில் உருவான இந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த தொடர் சன் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிய ஒரு தொடராக இருந்துவந்தது. இந்த தொடரில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகை நித்யா ராம்.
சின்னத்திரை சீரியலை இல்லத்தரசிகள் மட்டுமே பார்த்து வந்த நிலையில் இளசுகளையும் சீரியல் பார்க்க வைத்த பெருமை இவரை தான் சாரும். இந்தத் தொடரில் நாக கன்னியாக நடித்த நித்யா ராம் மிகவும் கவர்ச்சியாக நடித்து இளசுகள் மனதையும் கொள்ளை கொண்டார். கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர் ஆரம்பத்தில் கன்னடத்தில் ஒளிபரப்பான ஒரு தொடரில் நடித்திருந்தார். அந்த தொடர் மிகப்பெரிய வெற்றி அடைய அடுத்தடுத்து தொடர்களில் நடித்து வந்தார். மேலும் மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘மொட்டு மனசே’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார், சினிமாவில் சரியான வாய்ப்புகள் அமையாததால் தனது முழு கவனத்தையும் சீரியல் பக்கம் திருப்பினார்.
இதையும் பாருங்க : அங்கங்கள் தெரியும் வகையில் அமிர்தா நடத்திய போட்டோ ஷூட். வேண்டாம் செல்லம் என்று பதறும் ரசிகர்கள்.
நித்யாராம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானது, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அவள்’ என்ற தொடர் மூலம் தான். அதன் பின்னர் நந்தினி தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார். தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ் ‘என்ற தொடரிலும் அவ்வப்போது கண்காணித்து வருகிறார். தமிழ் தெலுங்கு மலையாளம் என்று பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நித்யாராம் கடந்த 2014 ஆம் ஆண்டு வினோத் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணமான சில ஆண்டுகளிலேயே அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.
இந்த நிலையில் நடிகை நித்யா ராம் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை நடிகை நித்யா ராம் சில காலமாக காதலித்து வருவதாகவும் அவரை தான் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பேட்டி ஒன்றில் பங்கேற்ற நித்யாராம் தனக்கு அஜித் போல ஒரு கணவர் வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார் எனவே தற்போது நித்யாராம் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளப் போகும் நபர் அஜித் போல இருக்கிறாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.