சீமராஜா படத்தில் இணைந்த காமெடி நடிகர்..! இந்த நடிகரா..? அப்போ செம காமெடி இருக்கு..!

0
386
SeemRaja

நடிகர் சிவகார்த்திகேயன் “வேலைக்காரன் ” படத்திற்கு பிறகு படு பிஸியான நடிகராக மாறிவிட்டார். தற்போது பொன்ராம் இயக்கத்தில் “சீமராஜா” படத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கத்திலும், ‘ஓகே ஓகே’ பட இயக்குனர் ராஜேஷ் இயக்கத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

seemaraja

இயக்குனர் ராஜேஷ் இயக்கவுள்ள அந்த படத்தை ஸ்டூடியோ கிறீன் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும், இந்த படத்தில் “வேலைக்காரன்” படத்திற்கு பிறகு நடிகை நயன்தாரா மீண்டும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இந்த படத்தில் காமெடி நடிகர் யோகி பாபு இணைந்துள்ளார் என்று மற்றும் ஒரு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ‘மான் கராத்தே ‘ ,’ரெமோ’ போன்ற படங்களில் காமெடியனாக கலக்கியுள்ளார்.

yogi babu

மேலும், நடிகர் சிவகார்திகேயனின் 13வது படமான இந்த படத்தின் அடுத்த தகவலாக நடிகை ராதிகா சரத்குமார் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது. இந்த தகவலை நடிகை ராதிகா சரத்குமார் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.