இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘சீமராஜா’ படத்தைத் தொடர்ந்து, தனது நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான ‘கனா’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது, ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில், எம்.ராஜேஷ் இயக்கத்தில், ‘மிஸ்டர்.லோக்கல்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அந்தப் படம் மே 1-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. தவிர, ‘இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமாரின் இயக்கத்தில் உருவாகும் சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ‘இரும்புத்திரை’ பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். அதில், கல்யாணி பிரியதர்ஷன், இவானா, அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இந்தப் படத்திற்கு, ‘ஹீரோ’ எனப் பெயரிட்டுள்ளனர். அதற்கான பூஜை இன்று நடைபெற்றது.தற்போது என்ன பிரச்னையெனில் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்ட நடிக்கும் புதிய படத்திற்கும் ‘ஹீரோ’ என்று பெயர் வைத்துள்ளனர்.
தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என 4 தென்னிந்திய மொழிகளிலும் இந்தப் படம் தயாராகிறது. தற்போது, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகக் கருதப்படும் சிவகார்த்திகேயன் படத்தின் தலைப்பும் ‘ஹீரோ’ என இருப்பதால், இரண்டு படங்களில் ஏதேனும் ஒரு தரப்பு கண்டிப்பாகப் படத் தலைப்பை மாற்றியாக வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.